Saturday, January 9, 2010

ஆண்களுக்கு இடஒதுக்கீடு - (பகுதி-2)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

மகளிர் மட்டும் - (பகுதி-1)

http://www.oodagan.blogspot.com/2010/01/blog-post.html

அப்படி நான் என்ன சொல்லிப்புட்டேனு, சிலர் இதன் முந்தய பதிவில் கோபப்பட்டீங்க....?

பேருந்தில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக நடத்தப் பட வேண்டுமெனவும், நடைமுறையில் அப்படி இல்லை எனவும் தான் சொன்னேனே தவிர, பெண்களைப் பற்றி ஏதும் இழிவாக எழுதவில்லை.முன்பு நானும் பேருந்தில் தினமும் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரணமானவன் தான்.

சென்னையில் புறநகரப் பேருந்தில் பெண்களுக்கு நடக்கும் சில கொடுமைகளை சிலர் இதன் முந்தய பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அவரிகளின் கூற்றுப்படி இந்த கொடுமைகள் நடக்கிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். சற்றே திரும்பி அனைத்தும் திசையிலும் பார்த்தால் இதே போன்ற கொடுமை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது.
கீழே குறிப்பிட்டவை அனைத்தும் வாதத்துக்கு சொல்லவில்லை, நான் பார்த்த உண்மை நிகழ்வு,
 
நிகழ்வு 1:
 
கூட்ட நெரிசலில் தெரியாமல், ஒரு பெண் மேல் ஆண் கால் மிதித்து விட்டால் போதும் உடனே,
 
"பொருக்கிங்க மிதிக்கிறதுக்கே வரானுங்க...." என ஒரு பெண் குரல் அனல் பறக்கும்.
இதே நிகழ்வு ஒரு ஆணுக்கு ஏற்பட்டால்,

"ஸாரி...ஸாரி...ஸாரி..." என அதே பெண் குரல் கேட்கும்.

நிகழ்வு 2:
 
நான் சென்னை கிண்டியிலிருந்து பாரிமுனை செல்லும் ஒரு பேருந்தில் சென்ற பயணத்தின் போது நடந்த நிகழ்வு,
அன்று ஆண்களை விட பெண்கள் கூட்டம் தான் அதிகம் இருந்தது, சில பள்ளி மாணவர்களும், அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த என்னை போன்ற சில இளைஞர்களும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் படியில் தொங்கிக் கொண்டு அந்த பயணத்தில் சென்றோம்.

கடைசி பின் இருப்பில், சில பெண்களும், இரு ஆண்களும் உட்க்கார்ந்திருந்தனர், அதில் ஒருவர் கை முறிவு ஏற்ப்பட்ட ஒரு பெரியவரும், அவருடைய மகனும் உட்க்கார்ந்திருந்தனர்.

ஒரு பெண்கள் படிக்கும் கல்லூரியின் பேருந்து நிருத்தம் வந்தது, பல பெண்கள் அதே கூட்ட நெரிசலில் ஏறினார்கள்.

பேருந்தில் ஏறிய பெண்கள், ஏறியதும் உடனே பின் இருக்கைக்கு வந்து,
அதிகாரத்துடன், "இது லேடீஸ் சீட்...", என்றனர்.

உடனே பெரியவரின் மகன் எழுந்தார், மீண்டும் அதிகாரத்துடன், "இது லேடீஸ் சீட்...", என்றனர்.

பெரியவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், அவரே உடல் நிலை சரியில்லாமல் இருக்கார், அவரை ஏமா எழுப்புற....?, என்றாள்

உடனே அந்த கல்லூரி பெண்கள் முரைத்துக் கொண்டு நின்று கொண்டே வந்தனர்.

நிகழ்வு 3:
ஒரு கர்ப்பமான பெண் ஒருவர் பேருந்தில் ஏறுகிறார், அவருக்கு இடம் கொடுக்க கூட ஒரு பெண் உதவவில்லை..... அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் தான் தன் இருக்கையை கொடுத்தார்.

நிகழ்வு 4:
 
சென்னை கடற்கரையிலிருந்து பூந்தமல்லி செல்லும் ஒரு பேருந்தில்,

திருவல்லிகேணியில் முன் பகுதியில் ஏறிய ஒரு பெண், சரசரவென பின்னால் வந்து இது லேடிஸ் சீட் என்றார்.....

உடனே அமர்ந்திருந்த ஒரு எழுந்து கொண்டார்.., அடுத்த நிறுத்தத்திலே அந்த பெண் இறங்கி கொண்டார்....... மறுபடியும் அதே ஆண் அந்த இருக்கையில் அமர்ந்தார்........
அந்த ஆணிடம் எங்கே போரிங்க என கேட்டபோது, பூந்தமல்லி செல்வதாக சொன்னார்.......பூந்தமல்லி தான் கடைசி நிறுத்தம்(திருவல்லிகேணியில் இருந்து இருபதுக்கும் மேற்ப்பட்ட நிறுத்தம் இருக்கும்).........

இது பரபரப்புக்காகவும் நகைச்சுவைக்காகவும் எழுதப்பட்ட பதிவல்ல, பரபரப்புக்காக எழுத வேண்டும் எனில் சினிமாவில் நடக்கும் காரசாரங்களையும், கிசுகிசுக்களை அல்லது வேறு ஏதாவது லொட்டு லொசுக்குக்களை விவாதிக்கலாம்... நான் எழுதும் அனைத்து பதிவும் என் வாழ்க்கை பயணத்தோடு எனக்கேற்ப்பட்ட நிகழ்வுகளே.........

இப்போது கூறுங்கள் ஆண்களுக்கு பேருந்தில் இடஒதுக்கீடு கொடுக்கலாமா கூடாதா....?


10 comments:

புலவன் புலிகேசி said...

இப்ப சொன்னீங்களே இது நியாயம். ஆனால் கற்பினி பெண்களுக்கு இடம் கொடுப்பதில் இருபாலரும் சரிசமம்தான். பலர் கொடுப்பர். சிலர் கொடுப்பதில்லை. இது பொதுவானதே

பிரபாகர் said...

சரிதான் ஊடகன், ஆனாலும் பெண்கள் அதிகம் சிரமமடைகிறார்கள் என்பதுதான் உண்மை...

பிரபாகர்.

பின்னோக்கி said...

நீங்கள் சொன்ன சம்பவங்கள் ஒதுக்கீடுக்கு ஆதரவாக இருக்கிறது. அதுவும் அந்த முதல் சம்பவம் அடிக்கடி நடக்கக் கூடியது தான்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் வலைப்பதிவு. மற்றவர்களைப் பற்றி எழுதாமல், உங்களின் அனுபவங்களை எந்த தயக்கமும் இல்லாமல் எழுதுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து சிலரும், எதிர்த்து சிலரும் இருப்பார்கள். அதனால், எல்லாருடனும் ஒத்துபோகும் விஷயங்கள் மட்டுமே எழுதவேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.

வானம்பாடிகள் said...

நீங்கள் சொன்ன நிகழ்வுகள் அத்தனையும் உண்மை ஊடகன். பெண்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட போதே மற்றவை பெண்கள் தவிர என்றுதானே ஆகிறது. ஆயினும், எத்தனை பேர் ஜோடியாக அமர்ந்து வருவதில்லை?சில நேரம் பெண்கள் இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்திருக்க இடமிருந்தும் ஒரு பெண் எழுப்பத்தான் செய்வார். இந்த ஒதுக்கீடும் இல்லையெனில் ஆண்கள் எழுந்து வழிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அடிப்படையான மன மாற்றம் இருபாலாருக்கும் தேவை. போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் இந்த பிரச்சினைகள் தவிர்க்க முடியாதது.

சி. கருணாகரசு said...

உண்மைதான் ஊடகன்.... அத்தனையும் சிந்திக்க வேண்டியது.....

கலகலப்ரியா said...

நியாயம்தான்...

இனியாள் said...

Neengal solli irupathu pala nigalvugal nijame eninum aangalukku thani perunthu thanthaal ella prachanaiyum theerthuvidumenin athai seyyalam, ungaloda kelvi puriyuthu neenga enna bathilai ethirpakkureenga....

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பிரவின்குமார் said...

நல்ல பகிர்வு..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

Anonymous said...

சகோதரா,இந்த குமுதமும்,ஆனந்த விகடனும் பெண்ணுங்க படத்தை அட்டையில் போட்டு, அவங்களுக்கு ரொம்ப இடத்தைக் குடுத்துடுச்சுங்க.வீட்டில் பெண்களே நமக்கு இடஒதுக்கீடு தரமுடியாதுனு சொல்லும் நிலை வந்திடும்.நிஜம்தான்.எவன் இதை ஒப்புக்குறான்.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com