Saturday, January 2, 2010

மகளிர் மட்டும் - (பகுதி-1)

சென்னை நகர பேருந்தில் பயணம் செய்வதென்பது மிக கொடுமையான ஒன்றே, அதுவும் ஆண்களுக்கு மிக மிக கொடுமையான ஒன்றே...!

என்னடா இவன் வித்யாசமாக ஆண்களுக்கு கொடுமை என்று சொல்கிறானே என்று யோசிக்கிறீர்களா........?

பேருந்தில் பயணம் செய்யும் சென்னை நகர பயணிகளே சற்று சிந்தியுங்கள்...!


சென்னை நகர பேருந்தில் பெண்களுக்கு தனியாக அமர இருப்பிடம் இருப்பது போல் ஆண்களுக்கு தனியாக உள்ளதா....? இல்லை.
ஏனெனில் பெண்களுக்கு "பெண்கள்" என்று தனியாக இடப்புறத்தில் மேலே எழுத பெற்றிருக்கும். வலதுபுறத்தில் மேலேயோ, ஓட்டுனருக்கு பக்கத்தில் உள்ள இருப்பிலோ "ஆண்கள்" என்று எந்த வித அறிவிப்பும் இருக்காது.



ஆனால் வேறு வழியில்லாமல், வழமையாக வலதுபுறத்திலும், ஓட்டுனர் பக்கத்திலும் ஆண்கள்தான் பெரும்பான்மையானாக உட்காருகிறார்கள்.








ஆண்கள் வழமையாக உட்காரும் அந்த பகுதிளில்
"ஆண்கள்" என்பதிற்கு பதிலாக "புகைபிடிக்காதீர்", "திருடர்கள் ஜாக்கிரதை"
என்ற வார்த்தைகளும் தான் வலதுபுரத்தின் மேலே இருக்கும்.

ஏன் ஆண்களில் மட்டும் தான் புகைபிடிப்பவர்களும், திருடர்களும் இருக்கிறார்களா....?, பெண்களில் இல்லையா.....?

"மகளிர் மட்டும்" என்று பெண்களுக்கு பேருந்து இருப்பது போல் ஏன் ஆண்களுக்கு "ஆண்கள் மட்டும்" என்ற பேருந்து இல்லை.....?

பெண்களுக்கு மட்டும் ஆண்களினால் பாதிப்பு ஏற்படுகிறதா, பெண்களினால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லையா...? என்ன கொடுமை இது.....?

நமது அரசும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளித்துள்ளது, ஆனால் ஆண்களுக்கு என்று எந்த இடஒதுக்கீடும் இல்லை. கேட்டால் பெண்களுக்கு எம் பாட்டன் பாரதி சொன்ன அதே கருத்தை மறுமொழியிடுவார்கள்.

ஆனால் 100% இட ஒதுக்கீடு பேருந்தில் பெண்களுக்குத் தான் இருக்கிறது.

அதுவும் கடைசி வரிசை இருக்கை சண்டை தினமும் ஒரு வாடிக்கையான ஒரு நிகழ்வே.

பெண்கள் வளர்ச்சியையும், உரிமைகளையும் இந்த அளவுக்கு வளர காரணமான பாரதி போல ஒருத்தன் மீண்டும் பிறந்து வந்து ஆண்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் பெண்ணாதிக்கம் ஒழியும்.

அடுத்த பதிவில் மீண்டும் என் குமுரலை சில உண்மை நிகழ்வுகளோடு பார்ப்போம்....

குமுரல் தொடரும்....!

24 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல சிந்தனை பகிர்வு...

//நமது அரசும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளித்துள்ளது, ஆனால் ஆண்களுக்கு என்று எந்த இடஒதுக்கீடும் இல்லை. கேட்டால் பெண்களுக்கு எம் பாட்டன் பாரதி சொன்ன அதே கருத்தை மறுமொழியிடுவார்கள்.//

இந்த ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சொல்வது தவறு. இன்னும் பல இடங்களில் பெண்களுக்கான பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

Mohan said...

பெண்ணுக்கு பெருமை வருவது ஆண்களால் தான்


அவர்களூக்கு மேலும் விட்டுக் கொடுக்கலாம்


பால் மாறக்கூடாது

ஜெயந்தி said...

இந்த இடுகையை வாசிக்கவும்.
http://paadiniyar.blogspot.com/2009/11/blog-post_18.html

ஈரோடு கதிர் said...

உங்கள் இடுகையோடு முழுக்க முழுக்க முரண்படுகிறேன்...

ஏதோ பரபரப்புக்காக எழுதப்பட்டது போல் மட்டுமே தெரிகிறது...

கொற்றவை கருத்தோடு உடன்படுகிறேன்...

Azhagan said...

பொதுவாக ஆண்களுக்கு பொறுமை என்பது சற்றுக்குறைவுதான்,இருந்தாலும், இந்த இடுகை சற்று அளவுக்குமீறியதாக இருக்கிறது.
வீட்டிலும் அனைத்து வேலைகளையும் செய்து குடும்பத்துக்காக வேலைக்கும் செல்லும் அவர்களுக்கு சிறிது அதிக இடம் கொடுத்தால் என்ன குறைந்துவிடும்?. உங்கள் "குமுறல்" நியாயமற்றது.

அண்ணாமலையான் said...

a good one to read. kindly visit my blog..

பின்னோக்கி said...

நீங்கள் சொல்ல வந்த கருத்து நல்லது. ஆனால் சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. எப்படி இருந்தாலும், இந்த மாதிரி பதிவுகள் வர வேண்டியது அவசியம். வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

தவறான வாதம் ஊடகன். ஆண்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு தேவையே இல்லை. இந்த நிலை இருக்கிறதே என வெட்கப் பட வேண்டுமே ஒழிய இப்படி போட்டிக்கு ஒதுக்கீடு கேட்பதில் அர்த்தமில்லை.

கலகலப்ரியா said...

//பெண்கள் வளர்ச்சியையும், உரிமைகளையும் இந்த அளவுக்கு வளர காரணமான பாரதி போல ஒருத்தன் மீண்டும் பிறந்து வந்து ஆண்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் பெண்ணாதிக்கம் ஒழியும்.//

ஊடகன்... நான் பெண்ணீயம்... அலுமினியம் எல்லாம் பேசுற ஆள் இல்லை... ஆனா... "பெண் அல்லது ஆண் ஆதிக்கம்" தான் இருக்க வேண்டுமென்பது என்னப்பா.. இரண்டையும் பொதுவில் வைக்கலாம்..! அதுக்கு ஒரு ஆண் பாரதி எதுக்கு... பெண் பாரதிகளே குரல் கொடுப்பார்கள்..! ஆப்பிள் கடிச்ச காலத்தில இருந்து இது ஒரு டென்ஷன் பா..! மத்தபடி நகைச்சுவைக்காக எழுதப்பட்டதெனில்... சூப்பருமா..!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

(கொற்றவை... ய்ய்ய்யப்பா... என்ன சூடு... குளிருக்கு நல்லாருக்கு..)

UFO said...
This comment has been removed by the author.
UFO said...

'முற்போக்கு(?)வாதிகளே'..! எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும். வந்துவிட்டீர்களா...? சரி.

பர்தா-பெண்ணடிமைத்தனம் என்கிறீர்கள் அல்லவா? அதை அணிபவர்களை 'பிற்போக்கு(?)வாதிகள்' என்கிறீர்கள் அல்லவா? அது, பெண்களுக்கு பாதுகாப்பு என்றும் கண்ணியம் என்றும் கூறும் முஸ்லிம்களை 'ஆணாதிக்கவாதிகள்' என பகடி செய்கிறீர்கள் அல்லவா?

இப்போது சொல்லுங்கள், 'மகளிர் மட்டும்' பேருந்து எதற்காம்? பெண்களின் கண்ணியத்திற்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் இல்லையா? அப்படிஎன்றால், 'மகளிர்மட்டும்' பேருந்து, 'பெண்ணடிமைத்தனமா'? அதில் பயணிக்கும் நம் பெண்கள் 'பிற்போக்கு(?)வாதிகளா'? அதை கொண்டுவந்து பெண்களிடம் திணித்தது, ஆணாதிக்கமா?

பதிலை நீங்கள் உருவாக்காமல், உங்கள் வீட்டு தாய்மார்கள்/சகோதரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், முற்போக்கு(???)சகோதரர்களே..!

Muthulinkam said...

ஆமா ஆமா நானும் இதத்தான் கன நாள் மனசுக்கிள்ளயே நினைச்சு வெட்கப்படுவன் ஆம்பிளையள் எண்டா இவளவு கீள்தனமாயிட்டு அண்சமுதாயமே இனியும் மண்ணைகவ்வப்போறியா

நினைவுகளுடன் -நிகே- said...

ஆணுக்கு ஒரு கொடுமை நிகழ்ந்தால்
அது ஒரு சம்பவம்
ஆனால் .....
பெண்ணுக்கு ஒரு கொடுமை நிகழ்ந்தால்
அது சரித்தரம்

Anonymous said...

ufo what is your problem? i think you need something immediately.

intha kosu thollai thaanga mudiyala ramasaami. bardha remove pannittu pesudaa purambokku.

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா நான் அப்பால கண்டுக்கறேன் ஊடகன்...

பித்தனின் வாக்கு said...

என்னது இது, பெண்கள்,வயதானவர்கள், கர்ப்பினிகள்,குழந்தைகள் அமர நாம் இடம் கொடுத்தால் அது பெருந்தன்மை அல்லவா.
எழுதி வைத்துக் கொடுப்பதுதான் நமக்கு இழுக்கு. கேக்காமல் நாமே அமரவைப்பது சிறப்பு,இதில் ஏன் உங்களுக்கு கசப்பு?. நன்றி.

rajeshkannan said...
This comment has been removed by the author.
rajeshkannan said...

கொற்றவை நீங்க கோபப் படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில்
உங்கள் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றே....

Anonymous said...

பிசி, எஸ்சி சாதிகளுக்கு மாத்திரம் இட ஒதுக்கீடு தருவது சரியில்லை. ஆகவே பிராமணாளுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்

வீட்டு வேலைகளுலும் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்.

குழந்தை வளர்ப்பிலும், சமையலிலும், வீடு சுத்தம் செய்வதிலும் இட ஒதுக்கீடு ஆண்களுக்கு வேண்டும்

சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு தருவதிலும் சரிசம்மாக பிரித்து வேண்டும்

சினிமா புலவன் said...

நீங்க நம்ம கட்சிங்க...நல்லது

ஊடகன் said...

உங்கள் பின்னூட்டங்களுக்கு எனது அடுத்த பதிவு பதில் சொல்லும்...
-ஊடகன்

aanmiga kadal said...

பெண்கள் ஆண்களின் எல்லா இடத்தையும் அளவுக்கு மீறி ஆக்கிரமித்துவிட்டனர்.www.aanmigakkadal.blogspot.com

Divya said...

போகப்போக எல்லா இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து உங்களை எங்கள் அடிமைகள் போல ஆக்குவோம். இத்தனை நூற்றாண்டு நாங்கள் அடிமைப் பட்டோம். இனி உங்கள் முறை . by திவ்யா

Divya said...

போகப்போக எல்லா இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து உங்களை எங்கள் அடிமைகள் போல ஆக்குவோம். இத்தனை நூற்றாண்டு நாங்கள் அடிமைப் பட்டோம். இனி உங்கள் முறை . by திவ்யா