எகிப்தியர்கள்,விற்பனை செய்திகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு பாபிரசை பயன்படுத்தினார்கள் . பண்டைய அரேபியா மற்றும் போம்பீயில் சிதிலங்களில் வணிகச்செய்திகளும், அரசியல் பிரச்சாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பந்தமான பாபிரஸ் விளம்பரங்கள் சாதாரணமானவை.
பண்டைய காலத்து விளம்பரவகைகளில் சுவர் அல்லது பாறை ஓவியங்கள் மற்றொரு வகைத்திருப்பம் ஆகும். இவ்வகை இன்றும் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கின்றன. 4000 BCE - க்கு முன்னாள் இருந்தே சுவர் ஓவிய பாரம்பரிய நாகரிக வழக்கம் இந்தியப்பாறை கலை ஓவியங்களில் நாம் காணலாம்.
இடைக்கால ஆண்டுகளில் நகரங்களும் ,பெரு நகரங்களும் வளர்ந்து வந்த நிலையில், மற்றும் வாசிக்கத் தெரியாத பொதுமக்கள் மத்தியில் இன்றைய கால கட்டத்தில்,செருப்பு தைப்பவர், மாவுமில் வைத்திருப்பவர், தையல்க்காரர்,அல்லது கொல்லர் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை அடையாளமாக பயன்படுத்தும்போது, அதாவது ஒரு காலணி, ஒரு சட்டை, ஒரு தொப்பி, ஒரு கடிகாரம், ஒரு குதிரை லாடம் , ஒரு மெழுகுவர்த்தி, அல்லது ஒரு பை மாவு அவர் செய்யும் தொழிலை இந்த அடையாளங்களின் மூலம் மக்கள் புரிந்துகொண்டார்கள்.
காய்கறி மற்றும் பழங்களை நககரத்தின் நார்ச்சந்திகளில் தங்கள் வண்டிகளிலும், மற்றும் வாகனங்களின் மீதும் வைத்து விற்கும் அவற்றின் சொந்தக்காரர்கள், தெருவில் கூவுபவர்களையும், அல்லது நகர தம்பட்டக்காரர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்தை இவர்கள் மூலம் அறிவிப்பார்கள்.
பொது வாழ்க்கையில் அரசியல், சினிமா, வணிகம், விளையாட்டு, சமயம், மென்பொருள் போன்ற எல்லா துறைகளிலும் விளம்பரம் அதிவேகமாக வளர்ந்து, அவர்கள் ஆட்டத்தில் நம்மை ஆட்டிவைக்கிறது.
விளம்பரம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை விளக்க மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் ஆகும். விளம்பரங்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்படலாம்.
அச்சு ஊடகம்(செய்தித்தாள்), காட்சி ஊடகம்(தொலைக்காட்சி) மற்றும் இணைய ஊடகம்(இணையம்) என்று அனைத்து வழியிலான ஊடகங்களிலும் விளம்பரம் இடம் பெற்றிருக்கிறது.இந்த விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் சட்டங்கள் பாதுகாப்பு அளித்தாலும் விளம்பரத்தை பகுத்தாய்ந்து செயற்படுவது மக்களின் பொறுப்பாகவே பெரிதும் இருக்கிறது.
விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு முக்கிய நோக்கங்களாக கீழ்காண்பவைகள் இருக்கின்றன.
- புதிய பொருள் அல்லது பணி விற்பனைக்கு வருவதை அறிவிக்க உதவுகிறது.
- புதிதாகப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது,
- விற்பனை முறை, விலை, கட்டு, இடம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிவிக்க உதவுகிறது,
- விற்பனையில் தள்ளுபடி, சலுகை போன்றவைகளைத் தெரிவிக்க உதவுகிறது,
- பொருள்களின் சிறப்புத் தன்மைகளை அறிவிக்க உதவுகிறது,
- பொருள்களை நினைவுபடுத்த உதவுகிறது,
- முதலீட்டாளர்களைக் கவர்ந்திட உதவுகிறது,
- தகுதியான ஆட்களைத் தேர்வு செய்ய உதவுகிறது,
- வணிக வெற்றி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த உதவுகிறது,
- இப்படி இதன் பயன்கள் எண்ணிலடங்காமல் தொடர்கிறது...
ஒரு சிலவற்றின் அதிக அதிவேக விளம்பரத்தால் தரமற்றவைகள் அதிகமாக வெற்றியடைகிறது, இதனால் நல்ல தரமானவைகள் அழிக்கபடுகிறது என்பதே உண்மை.