இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
நன்றி,
யூத்புல் விகடன்
"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றை தேடி அலைகின்றன. அந்த தேடலிலே அதன் முழு வாழ்க்கையும் ஓடி செல்கிறது........
ஆறறிவு முதல் ஐந்தறிவு வரை மண்ணில் பிறந்ததன் நோக்கம் அறியாமல் எதையோ தேடி சென்று கொண்டே ஒரு நாளில் மடிகிறார்கள்.அந்த தேடலில் உலக விடயங்களை அறிந்து புரிந்து கொண்டு ஓடுகிறோம்.
இதே தேடலில் தான் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல், என்று ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான்......
தேடலைப்பற்றி தேடும் போது Willeam Shakesphere சொன்ன "உலகம் ஒரு நாடக மேடை - அதில் மனிதன் என்னும் நாடகன் ஏழுநிலையில் நடிக்கிறான்" என்பது தான் நினைவிற்கு வருகிறது.
கருவறையிலிருந்து பிறந்த குழந்தை முதலில் தாயின் மடியை தேடுகிறது. அங்கே பாசம் என்னும் அன்பு உணவாக அளிக்கப்படுகிறது. சற்று வளர்ந்த பின் நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகளை அனுபவித்து வெற்றி, தோல்விகளை புரிந்துகொள்கிறான். அதன் பின் ஒரு வேளை உணவிற்காக ஊரை சுற்றுகிறான். இறுதியில் உலக நடப்புகளை புரிந்து கொண்டு அமைதியை தேடி ஒரு நாளில் மண்ணறையை தேடி மடிகிறான். இந்த தேடல் அனைத்து உயிரினங்களுக்கு பொதுவானதாகவே இருக்கிறது.
ஆம்,
கிழக்கும் மேற்க்கை தேடியும், மேற்கு கிழக்கை தேடியும்,
ஆண் பெண்ணை தேடியும், பெண் ஆணை தேடியும்,
துறவி அமைதியை தேடியும்,
பணக்காரன் நிம்மதியை தேடியும், ஏழை பணத்தை தேடியும்
மகிழ்ச்சி துக்கத்தை தேடியும், துக்கம் மகிழ்ச்சியை தேடியும்....
கருவறை கல்லறையை தேடியும்,
இவ்வாறாக ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றை தேடி சென்று கொண்டே செல்கிறது (முடிவில்லாமல்).....
வாழ்க்கை ஒரு தேடல், இந்த தேடலில் சில முழுமையடைகிறது, பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது......