
பண்டைய கால மன்னர்களும் முறையான வாரிசு வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
அரசன் முதல் ஆண்டி வரை அனைத்து தர மக்களும் திருமணத்தை ஒரு கடமையாக செய்கிறார்கள்.
சமிபத்தில் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும் போது, என்னுடைய நண்பர் ஒருவரை பேருந்தில் சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்து கொண்டோம். அவன் தன் மாமியார் வீட்டிற்க்கு போவதாக கூறினான்.உதவி என்று யாரேனும் வந்தால் உடனே உதவி செய்யும் எண்ணம் உள்ளவன்.
அவன் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். அவனுடைய எண்ணமே அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இலவச பள்ளிகள் நிறுவ வேண்டும், ஏனெனில் கல்வி தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்று கூறுவான்.
கல்லூரியில் படிக்கும் போது எப்போதும் இதே சமுதாய சிந்தனையுடனே என்னுடன் பேசி கொண்டிருப்பார். இன்று அவனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது....! அந்த சந்திப்பில் நாங்கள் இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அவன் தன குடும்பத்தைப்பற்றியே அதிகமாக பேசி கொண்டிருந்தான்.
தற்செயலாக அவனிடம் சமுதாயத்தைப்பற்றி பேசியதற்கு, என் குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால், என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றான்... சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான்.பிறகு அவனுடைய நிறுத்தம் வந்ததால் எறங்கி கொண்டான்...
என்னுடைய அலுவலகம் வர இன்னும் 4 நிறுத்தம் இருந்தது, இடைப்பட்ட அந்த 4 நிறுத்தத்தில் நான் யோசித்த 4 விடயங்கள், இதோ உங்கள் பார்வைக்கு,
- எதனால் இவன் இப்படீ மாறிவிட்டான்...?
- ஒருவேளை இவன் திருமணம் செய்யாமல் இருந்தால், அவனுடைய கனவான கல்வி கூடத்தை நிறுவி இருப்பானோ...?
- இப்போது அவன் திருமணம் செய்து கொண்டதால் அவனுடைய அந்த ஒரு குடும்பம் மட்டுமே பயன் பெற்றிருக்கிறது, ஒருவேளை அவன் இலவச கல்வி கூடத்தை நிறுவி இருந்தால் எதனை குடும்பங்கள் பயன் பெற்றிருக்கும்....?
- திருமணம் ஒரு மனிதனை இப்படியெல்லாம் கூட மாற்றுமா....?
அந்த காலத்தில் வீட்டை காக்க ஒருவனும் , நாட்டை காக்க ஒருவனுமாக தங்களது வாரிசை பெற்றார்கள். அந்த முறை இப்பொழுது ஏன் இல்லை...? அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கொண்டிருந்த நமது தேசத்தை இவ்வாறாகத்தான் காப்பாற்றினார்கள். அந்த முறை இன்று வந்தால் அந்நியர்களாக வாழ்ந்து கொண்டிக்கும் தேச துரோகிகளிடமிருந்து நமது நாட்டை காப்பாற்றலாம்.இதை ஒருவனுக்கு திணிப்பதை விட, தானாக முன் வர வேண்டும்.
சற்றே சிந்தித்து பார்த்தால் திருமணம் செய்வதால் ஏற்படும் ஒரே நன்மை, கடைசி காலத்தில் தன்னை காப்பாற்ற ஒருவன் தேவை என்பதே, வேறந்த பலனும் இல்லை. இது அனைவருக்கும் அடக்கும்.
இது அசைக்க முடியாத உண்மை...!
தான் மட்டும் இல்லாமல் இச்சமூகமும் நல்ல வழியில் வாழ உதவுபவனுக்கு கடைசி காலத்தில் இந்த உலகமே பின்னால் இருக்கும்...
இதுவும் அசைக்க முடியாத உண்மை...!
நாடென்ன செய்தது நமக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு,
நீ என்ன செய்தாய் அதற்கு, என்று நினைத்தால் நன்மை உனக்கு...
இந்த நிலைமை மாறி வீட்டிற்கு ஒருவன் காமராசர், அப்துல்கலாம், மற்றும் அன்னைதெராசாவை போன்ற சமூக சீர்திருதவாதிகளாக மாற வேண்டும் என்பதே என் கனவு...!
கனவு மெய்ப்பட வேண்டும்....!
பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!
இந்த கனவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....