(பகுதி-1)
http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html
(பகுதி-2)
http://www.oodagan.blogspot.com/2009/10/2_20.html
காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான சில பொன்னான திட்டங்களை விட்டு மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்…?
இன்று அரசுப்பள்ளியில் இவ்வளவு வசதி இருந்தும், யாவரும் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன்...?
ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் அரசுப்பள்ளியை நாடுகிறார்கள், மற்றவர்கள் அனைவரும் தனியார்ப்பள்ளியை எவ்வளவு செலவு ஆனாலும் தேடிப்போகிறார்கள்.
* முறையான ஆசிரியர்கள் இல்லாததாலா
* ஆங்கிலமொழியின் மேல் உள்ள நாட்டத்தினாலா
* தரமானக்கல்வி கிடைப்பதினாலா
* இடஒதுக்கீடுகள் கிடைக்க பெறாமையாலா
* தனியார் பள்ளிகள் கல்வியை தவிர மற்ற கலைக்களிலும் ஆர்வம் செலுத்துவதினாலா
அரசாங்கம் ஏன் அரசுப்பள்ளியின் மேல் அக்கறை காட்டுவதில்லை.......?
இன்று ஒரு சில தனியார்ப்பள்ளிகளில் பெற்றோர்கள் படித்தால் தான் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தரப்படும் என்ற நிலைமை இருக்கிறது. அப்படியானால் செருப்பு தைப்பவனின் மகன் செருப்பைதான் தைக்கவேண்டுமா...?
இன்று தனியார் பள்ளிகளில், மருத்துவ படிப்புக்கு (MBBS) ஆகும் செலவை விட துவக்க படிப்புக்கே (LKG) அதிக செலவுகள் ஆகின்றது என்றால் மிகையல்ல.
இந்த நிலைமை மாறி தனியார்ப்பள்ளிகளில் உள்ள அத்தனை முன்னேற்றமும், சலுகைகளும் அரசுப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அளிக்க வேண்டும். அப்பொழுது தான் தனியார்ப்பள்ளிகள் செய்யும் பணவேட்டை அடங்கும்.....
என்னுடைய பார்வையில் சமச்சீர் கல்வி என்பது அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் சமமாக கிடைக்கும் கல்வியே....!
8 comments:
தாய் தந்தை படிக்க வேண்டுமென்றால் இவர்கள் எதற்கு ............
கியூபா தெரியுமா நம்மை விட ஏழ்மை ..............
ஆனாலும் இலவச கல்வி ..................
ஒரு சிலர் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள் ........
சிலருக்கு ஏழ்மை ...........................
அரசு பள்ளியில் ஆசிரியர் சரி இல்லை
என்னதான் சமச்சீர் கல்வி வந்தாலும் அரசுப் பள்ளியில் கல்வியின் மேல் அக்கறை இல்லாத சில கருங்காலிகள் ஆசிரியராக இருக்கும் வரை கல்வியின் தரம் குறைந்து கொண்டே தான் இருக்கும். அவர்கள் களை எடுக்கப் பட வேண்டும்.....
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கடனே என பாடம் நடத்துகிறார்கள். அரசு ஊழியர்கள் எனும் அகந்தை, நடத்தியாகவேண்டும் எனும் கட்டாயம் இல்லாமை ஆகியனவற்றை காரணமாக சொல்லலாம்.
தமிழ்மணத்தில் ஒட்டு போட்டுவிட்டேன். உங்களின் ஓட்டினை முதலில் போடுங்கள் நண்பா..
பிரபாகர்.
/என்னுடைய பார்வையில் சமச்சீர் கல்வி என்பது அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் சமமாக கிடைக்கும் கல்வியே....! /
இது மட்டுமே உண்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். சரியான கருத்துக்கள் ஊடகன்.
அரசும், அதன் ஊழியர்களின் மெத்தனமே கல்வியை தனியார்மயத்திடம் தாரை வார்த்து விட்டது!
///என்னுடைய பார்வையில் சமச்சீர் கல்வி என்பது அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் சமமாக கிடைக்கும் கல்வியே....! ///
சரியான பார்வை ஊடகன்...
உண்மையில் அதுதான் சமச்சீர் கல்வி.
சமமான கல்வி எல்லோருக்கும் எப்படி கிடைக்கும்?
திருமதி ரஜினிகாந்த் அவர்கள் துவக்கிய கல்வி நிலைய கட்டணம் எவளவு தெரியுமா?
அய்யா, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இன்றைய அண்ணா பல்கலைகழகத்தின் ஆணிவேர் அழகப்பா செட்டியார்.
பணம் பண்ண கல்வி நிலையம் என்றால் சம கல்வி கிடைக்காது.
கல்வி கொடை என்ற சிந்தனை எல்லோருக்கும் வேண்டும்.
அரசு மட்டும் இதனை எப்படி செய்ய முடியும்?
இந்த நேரத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை கணக்கெடுத்தால் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பனி செய்தவர்கள் தான். அங்கு பணி செய்யும்போது உழைத்தனர்.
நம் எண்ணம் மாறவேண்டும்.
Post a Comment