டேய் குமாரே, "நாளைக்கு என் ஆளு பொறந்த நாளு, நாளைக்கு என்னுடைய லவ்-அ சொல்லியே ஆகனும்டா " என்றான் கார்த்தி.
வேணாண்டா மவனே வம்பாயுடும்டா, அவ அப்பா வேறு போலீஸ் காரண்டா.....
"பாத்துக்குலாம்டா.......!” என்றான் கார்த்தி....
மறுநாள் சனிக்கிழமை.., வகுப்பறையில்,
என்னடா, இன்னிக்கு உன் லவ்-அ சொல்ல போறேன்ன....இன்னும் சொல்லலியா....? என்றான் குமார்
லவ் லெட்டர்-அ கயல்விழி புக்-ல வசுடேண்டா....
புத்தகத்தை அவள் பயில் இருந்து எடுத்த கயல், லவ் லட்டரை எடுத்து படித்தாள்( லவ் லட்டர் என்று தெரியாமல்....!)
அந்த லட்டரை படிக்கும் போது சடாரென்று, லட்டரை பிடிங்கினான், குரு(கார்த்தியின் எதிரி)....
கயல்விழி மீது பேனா மைய்யை அடித்து கொண்டு கேலி செய்து கொண்டிருந்தான், குரு….
அதைப்பார்த்த கார்த்தி….., குருவை அடித்தான்.....
"இன்னிக்கு சாயங்காலம் இஸ்கூல் முடிஞ்சதும் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா..." என்றான் குரு
"நீயா நானான்னு பாத்துடுலாம்டா........" என்றான் கார்த்தி...
எதுக்குடா எனக்காக அவன் கூட சண்டை போடுற..., ? உன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்க....? என்றாள் கயல்.......
"அதான் உன்னதான்னு எழுதியே கொடுதுட்டேனே, அப்புறம் என்ன தெரியாத மாதிரி கேட்குற..." என்றான் கார்த்தி
பதில் என்ன சொல்வதென்று தெரியாமல் பயம் கலந்த வெட்கத்துடன், லட்டரை மடித்து அவள் கணக்கு புத்தகத்திலே வைத்தால், கயல்..........
வகுப்பறையில் கணித ஆசிரியர் நுழைந்தார்,
இன்னிக்கு பாக்கபோறது "தனிவட்டி", யாராவது புத்தகம் கொடுங்க, என்றார் ஆசிரியர்...
"சடாரென்று கயலின் புத்தகத்தை புடுங்கி ஆசிரியரிடம் கொடுத்தான்...., குரு"
புத்தகத்தை புரட்டிய ஆசிரியர், லட்டரை பார்த்து படித்தார்....
யாருமா இதை உன் புக்கில் வச்சது....?
"படபடப்புடன் கார்த்தியை பார்த்துக்கொண்டே தெரியல சார் என்றாள்.. /*&^%:/!@ " கயல்.
நம்ம வகுப்புல யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்குலே..., என்றார் ஆசிரியர்....
ஆசிரியர் மாணவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு மனம் உடைந்தான்.... கார்த்தி
சோகத்துடன் வகுப்பறையை விட்டு வெளியேறிய கார்த்தியை வழிமடக்கினான் குரு.......
சண்டைலாம் வேணாம்டா…, என்று சொல்லுவதற்குள் கார்த்தியின் முகத்தில் கையில் இருந்த பேட்டை வைத்து அடித்தான் குரு.....
சண்டை பெரிதாகி கார்த்தியின் மண்டையை உடைத்தான்...,குரு.........
சுற்றி இருந்த மக்கள் கூடினர்.., எதுக்குடா அடிசுக்குரீங்கோ...!
ஒரு பொண்ணுக்காக அடிச்சுக்குறாங்க, என்றான் குமார்(தடுமாறி).........
ஏண்டா ஏழாம் கிளாஸ்ல என்னடா காதல், யாருடா இதெல்லாம் உங்களுக்கு கத்துகொடுத்தது.....
என்று பசங்களை கண்டித்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஊர் மக்கள்.....
சேதி அறிந்து மருத்துவமனைக்கு வந்த குரு மற்றும் கார்த்தியின் பெற்றோர்கள் ,
என்புள்ள குரு சொக்கதங்கம் , கோபக்காரானே தவிர பொண்ணுக்காக சண்டை போடுபவன் இல்லை........
என்புள்ள கார்த்தி காதல், கத்திரிக்க்காயனு செஞ்சிருக்க மாட்டான், அவனுக்கு அதபத்தி என்னனே தெரியாது, படுபாவி குருதான் இந்தவேலையை செய்துருப்பான்....,
பெற்ற தாய் தன் மேல் வைத்துருந்த நம்பிக்கையை கண்டு மனம் நொந்த கார்த்தியின் மேலிருந்த காதல் எனும் பேய் பஞ்சாய் பறந்தது.....
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
பக்குவமடையும் பருவக் கதை. நன்று நண்பரே........
//என்புள்ள கார்த்தி காதல், கத்திரிக்க்காயனு செஞ்சிருக்க மாட்டான், அவனுக்கு அதபத்தி என்னனே தெரியாது, படுபாவி குருதான் இந்தவேலையை செய்துருப்பான்....,
பெற்ற தாய் தன் மேல் வைத்துருந்த நம்பிக்கையை கண்டு மனம் நொந்த கார்த்தியின் மேலிருந்த காதல் எனும் பேய் பஞ்சாய் பறந்தது.....
//
உருக வைத்தது தோழா நல்ல கதை
ஏழாவதிலேயே
வெளஞ்சிட்டாய்ங்களா!!!
சரியான கருத்து. நம் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினாலே இது போன்ற செயல்களை தவிர்த்து விடலாம்.
சிறுபிள்ளைக்காதலிலும் ஒரு முதிர்ச்சியை சொல்லியிருக்கிறீர்கள்... அருமை நண்பா.... வாழ்த்துக்கள்....
பிரபாகர்.
சின்ன பசங்க கதை நல்லாதானிருக்கு. இந்த காலத்து பசங்க இப்டித்தான் இருக்காங்க...இந்த நம்பிக்கைக்கெல்லாம் வருந்துவாங்கன்னு உங்க கதையிலத்தான் படிக்கிறேன். நல்ல கதை நண்பா.....வாழ்த்துக்கள்.
நல்ல கதை நண்பரே .........
நல்ல தமிழ் நடையில எழுதிருக்கிங்க
நல்ல நடை. பாராட்டுக்கள்
பசங்க கலக்குறாங்க!
சின்னப்பசங்களுக்கு எழுதின மாதிரி இருந்தாலும்,
பெரியவர்களுக்கும் நல்ல பாடம்!
-கேயார்
இன்றைய சிறுவர்களின் யதார்த்த நிலையிலிருந்து கதை எழுதப்பட்டது நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.
(என்னைப் போன்ற) சின்னபசங்க பசங்களின் மனவோட்டத்தயும்... அவர்களை அணுகும் விதத்தையும் அழகா படம் பிடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.
Really super sir
நல்ல நடை. குழந்தை மனதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
Post a Comment