நன்றி,
யூத்புல் விகடன்
இவ்வுலகில் வாழும் மனிதன், பலகோடி மனிதர்களிடமிருந்து பலகோடி அனுபவங்களை சந்தித்திருப்பான், ஆனால் ஒரு சில மனிதர்களே, அனுபவங்களே நினைவில் நிலைக்கொள்கிறது.
ஞாபகம் என்பது நமக்கு நடக்கும் இனிமையான அல்லது கசப்பான அனுபவங்களை திரும்பத்திரும்ப நினைபடுத்தி கொண்டே இருப்பது தான், அந்த நிலையான நினைவுகள் நம் உயிருள்ளவரை அழியாது.
இந்த நினைவலைகள் அறிவியல் பூர்வமாகவும் உண்மையாக இருக்கிறது. மனித இனத்திற்க்கல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் வரக்கூடிய ஒரு செயல். மூளையுடைய ஆழ்த்திரனில் நிலைகொண்டு, அனிச்சையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு நம் நினைவு.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறது.அந்த இனிமையான நிகழ்வுகள் பலதரப்பட்ட அனுபவங்களையும் நினைவு கூறுகிறது.
உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட பாடல்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய நண்பர்கள், படித்த புத்தகங்கள், இது போன்ற பல நிகழ்வுகளை திரும்ப நாம் சந்திக்கும் போது அந்த கால கட்ட நினைவுகளை பிரதிபலிக்கிறது. அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே வலியுடன் நம் கண்களில் கண்ணீர் கலந்த ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.
சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).
இந்த நினைவுகள் பெரும்பாலும் நாம் சந்தித்த, அனுபவித்த அதே நிகழ்வுகளை திரும்ப சந்திக்க இல்லை அனுபவிக்க நேரிடும்போதோ, தனிமையில் இருக்கும் போதோ, இரவு பொழுதில் இருக்கும் அந்த அமைதியான தருணங்களிலோ புலன்படும்.
அந்த இனிமையான நினைவுகள் திரும்ப வராதா...?, என ஏங்கும் உயிர்கள் பல கோடி.
நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!
24 comments:
//அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். //
உண்மைதான் நினைவுகள்தாம் நமக்கு கிடைத்த எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.
நல்ல இடுகை நண்பரே.....
A Good one.....
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நமக்கு மிச்சம் இருப்பது நினைவுகள் தானே...
//சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).//
என்ன பாட்டுங்க.??.நினைவுகள் மறப்பதில்லை...
நல்ல இடுகை.
//நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறது//
நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்
//சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).//
ஆமாம் நண்பா. இன்று கைப்பேசி நினைவுகளை தடை செய்யவும், நினைக்கவும் பெரிதும் உதவியாய் இருக்கிறது. நினைவலைகள் அருமை...
பிரபாகர்.
//நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!
//
excellent...
-Kayaar
//இனிமையான நினைவுகள் திரும்ப வராதா...?, என ஏங்கும் உயிர்கள் பல கோடி. //
:)+ :( ... good 1!
நினைவுகள் இல்லையென்றால் மனம் மரத்து நாங்களும் மரமாகிவிடுவோமே.நினைவுகளால்
தான் பாசங்களும் நிலைக்கின்றன.
நல்ல இடுகை. ஞாபங்கள் நம் சொத்து. இதைத் தவிர வேறொன்றும் நம்மை தொடர்வதுமில்லை நிரந்தரமாக இருப்பதுமில்லை.
அனுபவங்களே அந்த ஞாபகங்கள். நீங்கள் சொல்வது போல அது காயங்களின் அடையாளமாகவோ சந்தோஷத்தின் அச்சுக்களாகவோ நம் ஆழ்மனதில் படிந்திருக்கும்.
சூப்பர்..!
உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட பாடல்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய நண்பர்கள், படித்த புத்தகங்கள், இது போன்ற பல நிகழ்வுகளை திரும்ப நாம் சந்திக்கும் போது அந்த கால கட்ட நினைவுகளை பிரதிபலிக்கிறது. அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே வலியுடன் நம் கண்களில் கண்ணீர் கலந்த ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.//
நல்ல பதிவுங்க ஊடகன்..... அத்தனையும் உண்மையே!
அருமையான பதிவு நண்பரே.
நல்ல Observation. ஆனால் சந்தோஷ நினைவுகள் அதிகம் நினைவில் நிற்கிறதா சோக நினைவுகள் அதிகம் நினைவில் நிற்கிறதா என்பது அவரவர் Mindset டைப் பொறுத்தது இல்லையா...
சில நினைவுகள் கண்ணீரை வரவழைத்தாலும் அவையும் அற்புதங்களே.
நல்லாயிருக்கு நண்பா. வாழ்த்துக்கள்.
என்ன அப்படி ஞாபகம் வந்தது....ரொம்ப பீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா?? :-))
ஆம்!அருமையான இடுகை.
பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
சிலமுறை இப்போது நடப்பது முன்பே ஒருமுறை நடந்தது போலிருக்கும்
நல்ல அறிவுபூர்வமான பதிவு
நெஞ்சர்ந்து வாழ்த்துகிறேன்
விஜய்
//
நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!
//
ஆம் நினைவுகள் இல்லை என்றால் வாழ்வு கசந்து இருக்கும் ...........நினைபவனே உயிரோடு இருப்பவன் ....
"நினைத்து நினைத்து பாடல் " நியாபகம் வருகிறது
மலரும் நினைவுகள்
நினைவுகள் அருமை நண்பா...
அருமையான இடுகை.. நினைவலைகள் நெஞ்சத்திற்குள் மீண்டும் மீண்டும்..
Post a Comment