Tuesday, November 10, 2009

இது உங்கள் சொத்து

இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                             யூத்புல் விகடன்





சாதி மத பேதமற்று எல்லோருடைய காலடியையும் தன் மேல் சுமந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் அனைத்து தர மக்களின் நண்பன் பேருந்து.

மக்கள்த்தொகை அதிகம் உள்ள சென்னையில் புறநகரில் பேருந்தில் செல்வதென்பது மிக சுமையான ஒன்றே, ஏனெனில் சுமார் ஒரு அறுபது பேர் செல்ல கூடிய பேருந்தில் இருநூறு பேர் செல்கின்றனர். இதில் இளவயது ஆண்கள், பெண்கள், பள்ளிக்குழந்தைகள், முதியோர்கள் என எண்ணற்றோர் அந்த கூடத்திலே நசுங்குகின்றனர்....

ஒரு சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்துக்கு அடையார் செல்வதற்காக கிண்டியிலுருந்து பேருந்தில் ஏறினேன். அலுவல் செல்ல நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் கூட்டமாக உள்ள பேருந்திலேயே ஏறினேன். நடத்துனரிடம் அடையார் ஒன்று என்று பயணசீட்டை கேட்டேன். கிண்டியிலுருந்து அடையார் செல்வதற்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விலை...!, நான் ஏறிய மஞ்சள் நிற பேருந்தில் ரூபாய் 2.50. ஐந்து ரூபாயை நடத்துனரிடம் கொடுத்தேன், சில்லறையாக தரும்படி கேட்டார், சில்லறை இல்லை என்பதால் மீதம் இரண்டு ரூபாயை வாங்கினேன். மீதி சில்லரையான ஐம்பது பைசாவை இறங்கும் போது வாங்கிக்கும் படி நடத்துனர் சொன்னார்.



அண்ணாப்பல்கலைகழக பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அந்த நிறுத்தத்தில் இறங்கும் போது ஒரு பயணி நடத்துனரிடம், என்னுடைய மீதி ஐம்பத்து பைசா கொடுங்க என்றார்.
 
"சில்லறை இல்லப்பா, ஐம்பத்து பைசா இருந்தா கொடுத்துட்டு, ஒரு ருபாய் வாங்கின்க்கோ...," என்றார் நடத்துனர்.

அதே நிறுத்தத்தில் ஒரு வயதான மூதாட்டி ஏறினாள். அங்கிருந்து பட்டினம்பாக்கம் செல்வதற்காக பயணசீட்டை நடத்துனரிடம் கேட்டாள், அதற்கு நடத்துனர், "ரூபாய் 4.50 கொடு என்றார்."

இடுப்பில் மாறிய சுருக்கு பைய்யை எடுத்து சில்லறையை எண்ணி நடத்துனரிடம் கொடுத்தாள்.

"நால்ரூபா தான் இருக்கு , இன்னும் ஐம்பத்து பைசா கொடுமா...." என்றார் நடத்துனர்(கோபத்துடன்)

"வேற காசு இல்லப்பா..., "என்றாள் அந்த வயதான மூதாட்டி

தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., காலங்காத்தால வந்து கொடச்ச்ள கொடுக்காத...., என்று சற்று கோபத்துடன் கையிளுருந்த விசிலை அடித்து பேருந்தை நிறுத்தினார்...

"ஏம்ப்பா வயசான அந்த அம்மாவ இப்படி திட்டுர..., இந்தா ஐம்பத்து பைசா" என்று அருகிலுருந்த ஒருவர் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் என்னுடைய நிறுத்தம் வந்தது, இறங்கினேன்(மீதமுள்ள ஐம்பது பைசாவை மறந்து).

நிறுத்தத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது நடத்துனரிடம் உள்ள மீதி ஐம்பது பைசா நினைவுக்கு வந்தது.

ஒரு ஐம்பது பைசாவிற்க்காக அந்த கிழவியிடம் சண்டையிட்ட நடத்துனர், என்னுடைய ஐம்பது பைசாவை வைத்து என்ன செய்வார்...?

இன்று என்னைப்போல் எத்தனை பேர் நடத்துனரிடம் ஐம்பது பைசாவை இழந்திருப்பார்கள்...?

மக்கள் ஏமாந்த அந்த பணம் நடத்துனருக்கு போய் சேர்கிறதா...?

அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டிய அதே தாகாத வார்த்தைக்கு உரியவரா.......?

மக்கள் பயணிக்கும் போது சில்லறை வைத்திருப்பது ஒன்னும் கடமை இல்லை, இருந்தால் நலமே... ஆனால் ஒரு நடத்துனரின் வேலை ஒவ்வொரு பயணியிடமும் போய் பயணசீட்டு கொடுப்பதே(ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை, காலியாக உள்ள பேருந்திலும் மக்கள் தான் நடத்துனரிடம் போய் சீட்டு வாங்க வேண்டிய நிலைமை), குறைந்தது ஒரு இருநூறு பேருக்காவது சில்லறை வைத்திருக்க மாட்டாரா....?

பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மரியாதையுடன் முறையாக பேசுவதில்லை, முதல் அமைச்சர் முதல் நடத்துனர் வரை அப்படியே.........!

19 comments:

பிரபாகர் said...

//பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மரியாதையுடன் முறையாக பேசுவதில்லை, முதல் அமைச்சர் முதல் நடத்துனர் வரை அப்படியே.........!
//

நூறு சதம் உண்மை நண்பா..

சில்லறை திருடர்கள் எனக்கூட சொல்லலாம் அது போன்ற மனசாட்சியில்லாத மனிதர்களை.

அரசாங்க அலுவலர்கள் குறிப்பாய் வருவாய்த்துறையில் இருப்பவர்களை கண்டால் மனம் கொதிக்கிறது...

நல்ல, தேவையான இடுகை....

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

உண்மைதான் ஊடகா...ஆனால் அனைத்து நடத்துனரும் அப்படியில்லை. 50 பைசா சில்லறைக்கு ஒரு ரூபாய் கொடுக்கும் நடத்துனரயும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் மிகக் குறைவே. மற்ற அனைவரும் சில்லறை கொள்ளயரே....நன்று.

ஸ்ரீராம். said...

அந்நியன் படத்தில் சுஜாதா எழுதிய அஞ்சு பைசா டயலாக் ஞாபகம் இருக்கா? அரசுத் துறை தனியார் துறை இதில் பேதம் இல்லை. அரசுத் துறை மக்களை அதிகம் சந்திக்கும் துறை என்பதால் வெளியே தெரிகிறது. தனியார் துறைகள் எண்பது எப்போதாவது யாராவது தன் அனுபவங்களை வெளியே சொன்னால் உண்டு...பொதுவாக இது இந்தியக் கலாச்சாரம்...!

ஹேமா said...

எங்கள் ஊர்களில் காலகாலமாய் நடக்கின்ற நிகழ்வு இது.
நடத்துனர்களுக்கு யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை.இப்படி வெட்டினால்தான் உண்டு.

vasu balaji said...

ரொம்ப வருஷமா மாறாத விஷயத்தில இதும் ஒன்னு.

உங்கள் தோழி கிருத்திகா said...

தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு...,


இதே மாதிரி நாம காசு இருந்தா டிக்கெட் குடு..இல்லைனா எறங்கி போய்யானு சொல்லனும் போல பல தடவை நடந்துருக்கு...என்ன பண்ணறது....எல்லாம் நேரம்..
யானைக்கு ஒரு காலம்,பூனைக்கு ஒரு காலம்

க.பாலாசி said...

//தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., காலங்காத்தால வந்து கொடச்ச்ள கொடுக்காத...., என்று சற்று கோபத்துடன் கையிளுருந்த விசிலை அடித்து பேருந்தை நிறுத்தினார்...//

இதெல்லாம் கொடுமை நண்பா. ஆனாலும் இந்த ஐம்பது பைசாவால நாம படுற பாடு இருக்கே....அப்பப்பா...ஆனாலும் இந்த நடத்துனர்கள் இந்தமாதிரி விசயங்கள்ல நடந்துக்கிறது கொஞ்சம் வெறுப்பாத்தான் இருக்கு.

manwholara said...

only solution is tamil nadu government should regularized the fare by not in .50 paise (for example 2.50 to 3.00) alteast government may be profit (It also danger bcs conductor now taking .50 paise after that there take 1 rs (1 Rs demand may occur))

ஈரோடு கதிர் said...

நல்ல இடுகை ஊடகன்

பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?

ரோஸ்விக் said...

//கதிர் - ஈரோடு said...

நல்ல இடுகை ஊடகன்

பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?//

ரிப்பீட்டு....ரெளத்திரம் பழகுவோம் வாங்க நண்பா....
அருமையான இடுகை. வாழ்த்துக்கள் நண்பா.

வெண்ணிற இரவுகள்....! said...

நாளுக்கு நாள் உங்கள் தரம் கூடிக்கொண்டே போகிறது ..............ஊடகன்..........நல்ல கருத்து இவர்களுக்கு ஊதிய உயர்வு வேறு என்ன சொல்ல .............முதல்வரிலிருந்து ...கடை நிலை ஊழியர் வரை யாரும் வேலை செய்வது இல்லை

இன்றைய கவிதை said...

சென்னையே இப்டித்தான் இருக்கிறது.
ஏன் தோழரே?!

ஒரு வேளை வெப்பத்தின் மிகுதி
வார்த்தையில் தெறிக்கிறதோ?

-கேயார்

பூங்குன்றன்.வே said...

நல்ல கட்டுரை நண்பரே.
தவறு மக்கள் மீதா அல்லது அரசாங்க ஊழியர்கள் மீதா என்று தெரியவில்லை.அவர்கள் நம்மை மரியாதைக்குறைவாக பேசும்போது நம்மில் பலர் திருப்பி பேசினாலும்,நமக்கு ஆதரவு கிடைப்பதில்லை.அதனால் அப்படியே இந்த மாதிரியே போயிட்டு இருக்கு.

balavasakan said...

//அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டிய அதே தாகாத வார்த்தைக்கு உரியவரா.......?//


சரியாக சொன்னீர்கள்..........

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்..http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.html

ஊடகன் said...

@பிரபாகர்
//சில்லறை திருடர்கள் எனக்கூட சொல்லலாம் அது போன்ற மனசாட்சியில்லாத மனிதர்களை.//

உண்மை தான் நண்பரே........

@புலவன் புலிகேசி
//ஆனால் அனைத்து நடத்துனரும் அப்படியில்லை//

ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு சதம் இப்படிதான்........... பேருந்தில் போகிப்பாருங்கள் தெரியும்...........

@ஸ்ரீராம்
//அரசுத் துறை மக்களை அதிகம் சந்திக்கும் துறை என்பதால் வெளியே தெரிகிறது. தனியார் துறைகள் எண்பது எப்போதாவது யாராவது தன் அனுபவங்களை வெளியே சொன்னால் உண்டு...பொதுவாக இது இந்தியக் கலாச்சாரம்...!//

அரசே இப்படி இருக்கும் போது, தனியார் துறையை குறைகூறி ஒன்னும் இல்லை..... ஒரு வீட்டில் பெற்றோர்கள் சரியாக இருந்தால்தான் பிள்ளைகள் முறையாக இருப்பார்கள்.........

@ஹேமா
//நடத்துனர்களுக்கு யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை.இப்படி வெட்டினால்தான் உண்டு.//

என்ன கொடுமை இது.......

@வானம்பாடிகள்
//ரொம்ப வருஷமா மாறாத விஷயத்தில இதும் ஒன்னு.//

மாற்றம் தேவை.......

@உங்கள் தோழி கிருத்திகா
//இதே மாதிரி நாம காசு இருந்தா டிக்கெட் குடு..இல்லைனா எறங்கி போய்யானு சொல்லனும் போல பல தடவை நடந்துருக்கு//

அரசு ஊழியர்கள் மக்களை திட்ட உரிமை உண்டு, மக்கள் அவர்களை திட்ட உரிமை இல்லை....

@க.பாலாசி
//ஆனாலும் இந்த நடத்துனர்கள் இந்தமாதிரி விசயங்கள்ல நடந்துக்கிறது கொஞ்சம் வெறுப்பாத்தான் இருக்கு.//

அந்த வெறுப்பு தான், இன்று என் பதிவில் எழுத்தாய்........

@manwholara
//ly solution is tamil nadu government should regularized the fare by not in .50 paise //

நல்ல ஆரம்பம்(இல்லை முடிவு).............

@கதிர் - ஈரோடு
//நல்ல இடுகை ஊடகன்//

நன்றி

@ரோஸ்விக்
//பாட்டியைத் திட்டியதைவிட இன்னும் மோசமாகத் திட்டலாம், ஆனால் திட்டுவோமா...?//

திட்டலாம், ஆனால் மான நட்ட வழக்கில் அபராதம் விதிப்பார்கள்...........

@இன்றைய கவிதை
//சென்னையே இப்டித்தான் இருக்கிறது.
ஏன் தோழரே?!
ஒரு வேளை வெப்பத்தின் மிகுதி
வார்த்தையில் தெறிக்கிறதோ?//

இருக்கலாம்........

@பூங்குன்றன் வேதநாயகம்
//தவறு மக்கள் மீதா அல்லது அரசாங்க ஊழியர்கள் மீதா என்று தெரியவில்லை.//

மக்கள் கண்ணாடி மாதிரி,நீங்கள் சிரிச்சால் சிரிப்பார்கள் , முறைத்தால் முறைப்பார்கள்... நீங்கள் தப்பு செய்தால் அவர்களும் தப்பு செய்வார்கள்...........

@Balavasakan
//சரியாக சொன்னீர்கள்..........//
நன்றி....

கௌதமன் said...

ஊடகன், அடிக்கடி நான் நினைத்துப் பார்த்து, புழுங்குகின்ற விஷயங்களில், இதுவும் ஒன்று.
நான் பயணம் செய்யும் நேரங்களில், இயன்றவரை, சரியான சில்லறை வைத்துக் கொண்டுதான் பயணிக்கிறேன். நடத்துனர் எனக்குத் தரவேண்டியது இருந்தால் - அதை ஸ்டாப்பிங்கில் இறங்குவதற்கு முன், கைகளில் வாங்கிக்காமல் விட்டதில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

super post..

இவனுங்கள கேக்குறதுக்கு ஆளில்லையே?!!!!!!!!!!!

CS. Mohan Kumar said...

நல்ல கட்டுரை. சரியாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com