Saturday, November 14, 2009

கருவறை முதல் கல்லறை வரை




இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                                    யூத்புல் விகடன்



"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றை தேடி அலைகின்றன. அந்த தேடலிலே அதன் முழு வாழ்க்கையும் ஓடி செல்கிறது........

ஆறறிவு முதல் ஐந்தறிவு வரை மண்ணில் பிறந்ததன் நோக்கம் அறியாமல் எதையோ தேடி சென்று கொண்டே ஒரு நாளில் மடிகிறார்கள்.அந்த தேடலில் உலக விடயங்களை அறிந்து புரிந்து கொண்டு ஓடுகிறோம்.
 
இதே தேடலில் தான் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல், என்று ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான்......

தேடலைப்பற்றி தேடும் போது Willeam Shakesphere சொன்ன "உலகம் ஒரு நாடக மேடை - அதில் மனிதன் என்னும் நாடகன் ஏழுநிலையில் நடிக்கிறான்" என்பது தான் நினைவிற்கு வருகிறது.



கருவறையிலிருந்து பிறந்த குழந்தை முதலில் தாயின் மடியை தேடுகிறது. அங்கே பாசம் என்னும் அன்பு உணவாக அளிக்கப்படுகிறது. சற்று வளர்ந்த பின் நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகளை அனுபவித்து வெற்றி, தோல்விகளை புரிந்துகொள்கிறான். அதன் பின் ஒரு வேளை உணவிற்காக ஊரை சுற்றுகிறான். இறுதியில் உலக நடப்புகளை புரிந்து கொண்டு அமைதியை தேடி ஒரு நாளில் மண்ணறையை தேடி மடிகிறான். இந்த தேடல் அனைத்து உயிரினங்களுக்கு பொதுவானதாகவே இருக்கிறது.

ஆம்,

கிழக்கும் மேற்க்கை தேடியும், மேற்கு கிழக்கை தேடியும்,
ஆண் பெண்ணை தேடியும், பெண் ஆணை தேடியும்,
துறவி அமைதியை தேடியும்,
பணக்காரன் நிம்மதியை தேடியும், ஏழை பணத்தை தேடியும்
மகிழ்ச்சி துக்கத்தை தேடியும், துக்கம் மகிழ்ச்சியை தேடியும்....
கருவறை கல்லறையை தேடியும்,

இவ்வாறாக ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றை தேடி சென்று கொண்டே செல்கிறது (முடிவில்லாமல்).....

வாழ்க்கை ஒரு தேடல், இந்த தேடலில் சில முழுமையடைகிறது, பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது......

23 comments:

Anonymous said...

உண்மையை அலசியிருக்கீங்க...

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றாய் இருந்தது பதிவு......எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான் மனிதன்..............
அகத்தேடல் கூட கோவிலிலே தேடுகிறான் மனதில் தேடுவதில்லை..........ஆனால் தேடல் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.....ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல் கடைசியில் மரணத்தை தேடிப்போகிறான்.................பதிவு ஏதோ தேடுவதை போல் இருக்கிறது

புலவன் புலிகேசி said...

நல்லத் தேடல் நண்பா.........

ஸ்ரீராம். said...

//"ஒன்றை தேடி அழைக்கின்றன"//

முதற்கண் Voted.

அழைக்கின்றதா, அலைகின்றதா?

//"உலகம் ஒரு நாடக மேடை - அதில் மனிதன் என்னும் நாடகன் எழுநிலையில் நடிக்கிறான்"//

அப்போ பார்வையாளன் யார்?! எல்லோரும் நடிக்கப் போய்ட்டா யார் பார்க்கறது? நாமே நடிச்சு நாமே பார்த்து....

//"உயிருனங்களுக்"//

உயிரினங்கள்...?

நல்ல பதிவு...தேடினால்தான் கிடைக்கும்....தட்டினால்தானே திறக்கும்?

vasu balaji said...

/பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது...... /

முயற்சி கூட செய்யாத சமுதாயப் பார்வையில் என்பதே சரி என நினைக்கிறேன் ஊடகன். தோற்றவனுக்கு தெரியும் வலி.

MJV said...
This comment has been removed by the author.
MJV said...

நல்ல தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறீர்கள். அந்த தேடல் இல்லையென்றாலும் சலித்து போகும் இல்லையா வாழ்க்கை??? நல்ல பதிவு. தொடர்ந்து எழுந்துங்கள்.

அகல்விளக்கு said...

உயிருள்ள பதிவு, தேடலை நோக்கி....

ஹேமா said...

வாழ்வின் உட்பொருளே தேடல்தானே.
தேடல் இல்லா வாழ்வு வீண்.
வாழ்வின் சுவாரஸ்யமே அங்குதான்.

(Mis)Chief Editor said...

தேடித் தேடி கடோசில இத படிச்சுப்புட்டேன்!!

-பருப்பு ஆசிரியர் (எ) மிஸ்சீ·ப் எடிட்டர்

இன்றைய கவிதை said...

//வாழ்க்கை ஒரு தேடல், இந்த தேடலில் சில முழுமையடைகிறது, பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது...... //

அருமையான வரிகள்!

-கேயார்

சத்ரியன் said...

ஊடகன்,

நிதர்சனம்.

தேவன் said...

தேடல் தான் வாழ்க்கை எனும் போது தேடல் தொடரத்தானே செய்யும்.

நன்றி நண்பரே நல்ல சிந்தனை.

கலையரசன் said...

எதாவது கிடைச்சுதா பாஸ்?

balavasakan said...

how can i submit my blog to youth ful vikatan "goodblog" if u know pls can ureply to vsvskn@gmail.com

அன்புடன் மலிக்கா said...

தேடலுக்கு முடிவில்லை மனிதவாழ்வில்..

நல்ல தேடல்..

க.பாலாசி said...

நல்ல கருத்தாழம் மிக்க இடுகை நண்பா....

மொத்த வாழ்க்கையுமே தேடல்தான். சோம்பி விழுந்தால் அது இறந்ததற்கு சமம் என்பதே எனது கருத்து...

நல்ல இடுகை...வாழ்த்துக்கள்.

பெசொவி said...

அருமையாக அலசி இருக்கிறீர்கள். வாழ்க்கை பற்றிய எனது பதிவை இங்கே பாருங்கள் http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_06.html

முனைவர் இரா.குணசீலன் said...

எனது தேடலின் விளைவு இந்த நல்ல பதிவைப் பார்வையிட நேர்ந்தது...

பதிவு நன்றாகவுள்ளது நண்பரே...

அன்புடன் நான் said...

நல்ல பதிவு...தேடலுக்கு வாழ்த்துக்கள்.

ஊடகன் said...

@தமிழரசி
//உண்மையை அலசியிருக்கீங்க...//

நன்றி

@வெண்ணிற இரவுகள்....!
//ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல் கடைசியில் மரணத்தை தேடிப்போகிறான்//

உண்மைதான் நண்பரே...

@புலவன் புலிகேசி
//நல்லத் தேடல் நண்பா.........//

நன்றி

@ஸ்ரீராம்.

//முதற்கண் Voted.//

நன்றி,

//அப்போ பார்வையாளன் யார்?! எல்லோரும் நடிக்கப் போய்ட்டா யார் பார்க்கறது? நாமே நடிச்சு நாமே பார்த்து....//

ஒவ்வொருவனுக்கும், சக நடிகன் தான் பார்வையாளன்..........

@வானம்பாடிகள்
//முயற்சி கூட செய்யாத சமுதாயப் பார்வையில் என்பதே சரி என நினைக்கிறேன் ஊடகன். //
உண்மைதான் ஐயா...

@காவிரிக்கரையோன் MJV
//அந்த தேடல் இல்லையென்றாலும் சலித்து போகும் இல்லையா வாழ்க்கை??? நல்ல பதிவு//

ஆம்.......

@அகல் விளக்கு
//உயிருள்ள பதிவு, தேடலை நோக்கி....//

நன்றி

@ஹேமா
//வாழ்வின் உட்பொருளே தேடல்தானே.
தேடல் இல்லா வாழ்வு வீண்.
வாழ்வின் சுவாரஸ்யமே அங்குதான்.//

ஆம்

@(Mis)Chief Editor
//தேடித் தேடி கடோசில இத படிச்சுப்புட்டேன்!!//

நல்லத் தேடல்....

@இன்றைய கவிதை
//அருமையான வரிகள்!//

நன்றி

@சத்ரியன்
//நிதர்சனம்.//

நன்றி

@கலையரசன்
//எதாவது கிடைச்சுதா பாஸ்?//

இன்னும் முழுமையடையவில்லை....

@கேசவன் .கு
//நண்பரே நல்ல சிந்தனை//

நன்றி

@அன்புடன் மலிக்கா
//நல்ல தேடல்..//
நன்றி

@க.பாலாசி
//நல்ல கருத்தாழம் மிக்க இடுகை நண்பா....//

நன்றி

@பெயர் சொல்ல விருப்பமில்லை
//அருமையாக அலசி இருக்கிறீர்கள். //

நன்றி

@முனைவர்.இரா.குணசீலன்
//எனது தேடலின் விளைவு இந்த நல்ல பதிவைப் பார்வையிட நேர்ந்தது...//

நன்றி

@சி. கருணாகரசு
//நல்ல பதிவு...தேடலுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி

சிவாஜி சங்கர் said...

வாழ்த்துக்கள்.......
எழுந்து நின்று கைதட்டு....!

தமிழ் அஞ்சல் said...

நச்.!