Saturday, November 21, 2009

நினைவலைகள்

இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                                     யூத்புல் விகடன்
 


இவ்வுலகில் வாழும் மனிதன், பலகோடி மனிதர்களிடமிருந்து பலகோடி அனுபவங்களை சந்தித்திருப்பான், ஆனால் ஒரு சில மனிதர்களே, அனுபவங்களே நினைவில் நிலைக்கொள்கிறது.

ஞாபகம் என்பது நமக்கு நடக்கும் இனிமையான அல்லது கசப்பான அனுபவங்களை திரும்பத்திரும்ப நினைபடுத்தி கொண்டே இருப்பது தான், அந்த நிலையான நினைவுகள் நம் உயிருள்ளவரை அழியாது.
இந்த நினைவலைகள் அறிவியல் பூர்வமாகவும் உண்மையாக இருக்கிறது. மனித இனத்திற்க்கல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் வரக்கூடிய ஒரு செயல். மூளையுடைய ஆழ்த்திரனில் நிலைகொண்டு, அனிச்சையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு நம் நினைவு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறது.அந்த இனிமையான நிகழ்வுகள் பலதரப்பட்ட அனுபவங்களையும் நினைவு கூறுகிறது.

உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட பாடல்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய நண்பர்கள், படித்த புத்தகங்கள், இது போன்ற பல நிகழ்வுகளை திரும்ப நாம் சந்திக்கும் போது அந்த கால கட்ட நினைவுகளை பிரதிபலிக்கிறது. அது ஒரு இனிமையான நிகழ்வாகவும் இருக்கலாம், இல்லை கசப்பான நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த இரண்டுமே வலியுடன் நம் கண்களில் கண்ணீர் கலந்த ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.சமீபத்தில் நான் தனிமையில் இருக்கும்பொழுது, கேட்ட ஒரு பாடல் என் பள்ளிப்பருவ அனுபவங்களை பிரதிபலித்தது, அந்த நினைவு நீண்ட நேரம் தொடர்ந்தது(என் கைப்பேசி மணி அடிக்கும் வரை).

இந்த நினைவுகள் பெரும்பாலும் நாம் சந்தித்த, அனுபவித்த அதே நிகழ்வுகளை திரும்ப சந்திக்க இல்லை அனுபவிக்க நேரிடும்போதோ, தனிமையில் இருக்கும் போதோ, இரவு பொழுதில் இருக்கும் அந்த அமைதியான தருணங்களிலோ புலன்படும்.

அந்த இனிமையான நினைவுகள் திரும்ப வராதா...?, என ஏங்கும் உயிர்கள் பல கோடி.

நினைவுகளிலே மிக அழகான, ஒவ்வொருவனுக்கும் மகிழ்ச்சிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு என்பது, நாம் பெற்ற அனைத்து இனிமையான நினைவுகளை திரும்பபெரும் அந்த நினைவே....!

Saturday, November 14, 2009

கருவறை முதல் கல்லறை வரை
இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                                    யூத்புல் விகடன்"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றை தேடி அலைகின்றன. அந்த தேடலிலே அதன் முழு வாழ்க்கையும் ஓடி செல்கிறது........

ஆறறிவு முதல் ஐந்தறிவு வரை மண்ணில் பிறந்ததன் நோக்கம் அறியாமல் எதையோ தேடி சென்று கொண்டே ஒரு நாளில் மடிகிறார்கள்.அந்த தேடலில் உலக விடயங்களை அறிந்து புரிந்து கொண்டு ஓடுகிறோம்.
 
இதே தேடலில் தான் துக்கம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, பாசம், நட்பு, காதல், என்று ஏகப்பட்ட புரிதல்களை அறிந்துகொள்கிறான்......

தேடலைப்பற்றி தேடும் போது Willeam Shakesphere சொன்ன "உலகம் ஒரு நாடக மேடை - அதில் மனிதன் என்னும் நாடகன் ஏழுநிலையில் நடிக்கிறான்" என்பது தான் நினைவிற்கு வருகிறது.கருவறையிலிருந்து பிறந்த குழந்தை முதலில் தாயின் மடியை தேடுகிறது. அங்கே பாசம் என்னும் அன்பு உணவாக அளிக்கப்படுகிறது. சற்று வளர்ந்த பின் நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகளை அனுபவித்து வெற்றி, தோல்விகளை புரிந்துகொள்கிறான். அதன் பின் ஒரு வேளை உணவிற்காக ஊரை சுற்றுகிறான். இறுதியில் உலக நடப்புகளை புரிந்து கொண்டு அமைதியை தேடி ஒரு நாளில் மண்ணறையை தேடி மடிகிறான். இந்த தேடல் அனைத்து உயிரினங்களுக்கு பொதுவானதாகவே இருக்கிறது.

ஆம்,

கிழக்கும் மேற்க்கை தேடியும், மேற்கு கிழக்கை தேடியும்,
ஆண் பெண்ணை தேடியும், பெண் ஆணை தேடியும்,
துறவி அமைதியை தேடியும்,
பணக்காரன் நிம்மதியை தேடியும், ஏழை பணத்தை தேடியும்
மகிழ்ச்சி துக்கத்தை தேடியும், துக்கம் மகிழ்ச்சியை தேடியும்....
கருவறை கல்லறையை தேடியும்,

இவ்வாறாக ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றை தேடி சென்று கொண்டே செல்கிறது (முடிவில்லாமல்).....

வாழ்க்கை ஒரு தேடல், இந்த தேடலில் சில முழுமையடைகிறது, பற்பல முழுமையடையாமல் சமுதாயத்தின் பார்வையில் தோற்றுப்போகிறது......

Tuesday, November 10, 2009

இது உங்கள் சொத்து

இந்த பதிவு யூத்புல் விகடனில் சிறந்த பதிவில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி,
                             யூத்புல் விகடன்

சாதி மத பேதமற்று எல்லோருடைய காலடியையும் தன் மேல் சுமந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் அனைத்து தர மக்களின் நண்பன் பேருந்து.

மக்கள்த்தொகை அதிகம் உள்ள சென்னையில் புறநகரில் பேருந்தில் செல்வதென்பது மிக சுமையான ஒன்றே, ஏனெனில் சுமார் ஒரு அறுபது பேர் செல்ல கூடிய பேருந்தில் இருநூறு பேர் செல்கின்றனர். இதில் இளவயது ஆண்கள், பெண்கள், பள்ளிக்குழந்தைகள், முதியோர்கள் என எண்ணற்றோர் அந்த கூடத்திலே நசுங்குகின்றனர்....

ஒரு சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்துக்கு அடையார் செல்வதற்காக கிண்டியிலுருந்து பேருந்தில் ஏறினேன். அலுவல் செல்ல நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் கூட்டமாக உள்ள பேருந்திலேயே ஏறினேன். நடத்துனரிடம் அடையார் ஒன்று என்று பயணசீட்டை கேட்டேன். கிண்டியிலுருந்து அடையார் செல்வதற்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விலை...!, நான் ஏறிய மஞ்சள் நிற பேருந்தில் ரூபாய் 2.50. ஐந்து ரூபாயை நடத்துனரிடம் கொடுத்தேன், சில்லறையாக தரும்படி கேட்டார், சில்லறை இல்லை என்பதால் மீதம் இரண்டு ரூபாயை வாங்கினேன். மீதி சில்லரையான ஐம்பது பைசாவை இறங்கும் போது வாங்கிக்கும் படி நடத்துனர் சொன்னார்.அண்ணாப்பல்கலைகழக பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அந்த நிறுத்தத்தில் இறங்கும் போது ஒரு பயணி நடத்துனரிடம், என்னுடைய மீதி ஐம்பத்து பைசா கொடுங்க என்றார்.
 
"சில்லறை இல்லப்பா, ஐம்பத்து பைசா இருந்தா கொடுத்துட்டு, ஒரு ருபாய் வாங்கின்க்கோ...," என்றார் நடத்துனர்.

அதே நிறுத்தத்தில் ஒரு வயதான மூதாட்டி ஏறினாள். அங்கிருந்து பட்டினம்பாக்கம் செல்வதற்காக பயணசீட்டை நடத்துனரிடம் கேட்டாள், அதற்கு நடத்துனர், "ரூபாய் 4.50 கொடு என்றார்."

இடுப்பில் மாறிய சுருக்கு பைய்யை எடுத்து சில்லறையை எண்ணி நடத்துனரிடம் கொடுத்தாள்.

"நால்ரூபா தான் இருக்கு , இன்னும் ஐம்பத்து பைசா கொடுமா...." என்றார் நடத்துனர்(கோபத்துடன்)

"வேற காசு இல்லப்பா..., "என்றாள் அந்த வயதான மூதாட்டி

தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, காசு இருந்தா கொடு, இல்லைனா எரங்கு..., காலங்காத்தால வந்து கொடச்ச்ள கொடுக்காத...., என்று சற்று கோபத்துடன் கையிளுருந்த விசிலை அடித்து பேருந்தை நிறுத்தினார்...

"ஏம்ப்பா வயசான அந்த அம்மாவ இப்படி திட்டுர..., இந்தா ஐம்பத்து பைசா" என்று அருகிலுருந்த ஒருவர் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் என்னுடைய நிறுத்தம் வந்தது, இறங்கினேன்(மீதமுள்ள ஐம்பது பைசாவை மறந்து).

நிறுத்தத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது நடத்துனரிடம் உள்ள மீதி ஐம்பது பைசா நினைவுக்கு வந்தது.

ஒரு ஐம்பது பைசாவிற்க்காக அந்த கிழவியிடம் சண்டையிட்ட நடத்துனர், என்னுடைய ஐம்பது பைசாவை வைத்து என்ன செய்வார்...?

இன்று என்னைப்போல் எத்தனை பேர் நடத்துனரிடம் ஐம்பது பைசாவை இழந்திருப்பார்கள்...?

மக்கள் ஏமாந்த அந்த பணம் நடத்துனருக்கு போய் சேர்கிறதா...?

அப்படியானால் அந்த நடத்துனர், அந்த கிழவியை திட்டிய அதே தாகாத வார்த்தைக்கு உரியவரா.......?

மக்கள் பயணிக்கும் போது சில்லறை வைத்திருப்பது ஒன்னும் கடமை இல்லை, இருந்தால் நலமே... ஆனால் ஒரு நடத்துனரின் வேலை ஒவ்வொரு பயணியிடமும் போய் பயணசீட்டு கொடுப்பதே(ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை, காலியாக உள்ள பேருந்திலும் மக்கள் தான் நடத்துனரிடம் போய் சீட்டு வாங்க வேண்டிய நிலைமை), குறைந்தது ஒரு இருநூறு பேருக்காவது சில்லறை வைத்திருக்க மாட்டாரா....?

பெரும்பாலும் அரசு வேலை செய்பவர்கள், மக்களிடம் மரியாதையுடன் முறையாக பேசுவதில்லை, முதல் அமைச்சர் முதல் நடத்துனர் வரை அப்படியே.........!

Tuesday, November 3, 2009

பசங்க

டேய் குமாரே, "நாளைக்கு என் ஆளு பொறந்த நாளு, நாளைக்கு என்னுடைய லவ்-அ சொல்லியே ஆகனும்டா " என்றான் கார்த்தி.

வேணாண்டா மவனே வம்பாயுடும்டா, அவ அப்பா வேறு போலீஸ் காரண்டா.....

"பாத்துக்குலாம்டா.......!” என்றான் கார்த்தி....மறுநாள் சனிக்கிழமை.., வகுப்பறையில்,

என்னடா, இன்னிக்கு உன் லவ்-அ சொல்ல போறேன்ன....இன்னும் சொல்லலியா....? என்றான் குமார்

லவ் லெட்டர்-அ கயல்விழி புக்-ல வசுடேண்டா....

புத்தகத்தை அவள் பயில் இருந்து எடுத்த கயல், லவ் லட்டரை எடுத்து படித்தாள்( லவ் லட்டர் என்று தெரியாமல்....!)

அந்த லட்டரை படிக்கும் போது சடாரென்று, லட்டரை பிடிங்கினான், குரு(கார்த்தியின் எதிரி)....

கயல்விழி மீது பேனா மைய்யை அடித்து கொண்டு கேலி செய்து கொண்டிருந்தான், குரு….

அதைப்பார்த்த கார்த்தி….., குருவை அடித்தான்.....

"இன்னிக்கு சாயங்காலம் இஸ்கூல் முடிஞ்சதும் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா..." என்றான் குரு

"நீயா நானான்னு பாத்துடுலாம்டா........" என்றான் கார்த்தி...

எதுக்குடா எனக்காக அவன் கூட சண்டை போடுற..., ? உன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்க....? என்றாள் கயல்.......

"அதான் உன்னதான்னு எழுதியே கொடுதுட்டேனே, அப்புறம் என்ன தெரியாத மாதிரி கேட்குற..." என்றான் கார்த்தி

பதில் என்ன சொல்வதென்று தெரியாமல் பயம் கலந்த வெட்கத்துடன், லட்டரை மடித்து அவள் கணக்கு புத்தகத்திலே வைத்தால், கயல்..........

வகுப்பறையில் கணித ஆசிரியர் நுழைந்தார்,

இன்னிக்கு பாக்கபோறது "தனிவட்டி", யாராவது புத்தகம் கொடுங்க, என்றார் ஆசிரியர்...

"சடாரென்று கயலின் புத்தகத்தை புடுங்கி ஆசிரியரிடம் கொடுத்தான்...., குரு"

புத்தகத்தை புரட்டிய ஆசிரியர், லட்டரை பார்த்து படித்தார்....

யாருமா இதை உன் புக்கில் வச்சது....?

"படபடப்புடன் கார்த்தியை பார்த்துக்கொண்டே தெரியல சார் என்றாள்.. /*&^%:/!@ " கயல்.

நம்ம வகுப்புல யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டாங்குலே..., என்றார் ஆசிரியர்....

ஆசிரியர் மாணவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு மனம் உடைந்தான்.... கார்த்தி

சோகத்துடன் வகுப்பறையை விட்டு வெளியேறிய கார்த்தியை வழிமடக்கினான் குரு.......

சண்டைலாம் வேணாம்டா…, என்று சொல்லுவதற்குள் கார்த்தியின் முகத்தில் கையில் இருந்த பேட்டை வைத்து அடித்தான் குரு.....சண்டை பெரிதாகி கார்த்தியின் மண்டையை உடைத்தான்...,குரு.........

சுற்றி இருந்த மக்கள் கூடினர்.., எதுக்குடா அடிசுக்குரீங்கோ...!

ஒரு பொண்ணுக்காக அடிச்சுக்குறாங்க, என்றான் குமார்(தடுமாறி).........

ஏண்டா ஏழாம் கிளாஸ்ல என்னடா காதல், யாருடா இதெல்லாம் உங்களுக்கு கத்துகொடுத்தது.....

என்று பசங்களை கண்டித்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஊர் மக்கள்.....

சேதி அறிந்து மருத்துவமனைக்கு வந்த குரு மற்றும் கார்த்தியின் பெற்றோர்கள் ,

என்புள்ள குரு சொக்கதங்கம் , கோபக்காரானே தவிர பொண்ணுக்காக சண்டை போடுபவன் இல்லை........

என்புள்ள கார்த்தி காதல், கத்திரிக்க்காயனு செஞ்சிருக்க மாட்டான், அவனுக்கு அதபத்தி என்னனே தெரியாது, படுபாவி குருதான் இந்தவேலையை செய்துருப்பான்....,

பெற்ற தாய் தன் மேல் வைத்துருந்த நம்பிக்கையை கண்டு மனம் நொந்த கார்த்தியின் மேலிருந்த காதல் எனும் பேய் பஞ்சாய் பறந்தது.....