Tuesday, September 22, 2009

திருமணம் : ஒரு தடைக்கல்லா...?

திருமணம் = இவ்வுலகில் வாழும் அனைத்து தர மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு நிலை.

ஆதி மனிதன் திருமணம் செய்து கொண்டதாக சேதிகள் இல்லை. மிருங்கங்கள் போல் வரையறையற்று வாழ்ந்து வந்த மனிதனுக்கு, இவன் இவளை இப்படிதான் உறவு கொள்ள வேண்டும் என்று வரையறை போட்டு தந்தது திருமணமே.மனிதனின் ஒருவகை முன்னேற்றமே திருமணம்..!

பண்டைய கால மன்னர்களும் முறையான வாரிசு வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

அரசன் முதல் ஆண்டி வரை அனைத்து தர மக்களும் திருமணத்தை ஒரு கடமையாக செய்கிறார்கள்.

சமிபத்தில் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும் போது, என்னுடைய நண்பர் ஒருவரை பேருந்தில் சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்து கொண்டோம். அவன் தன் மாமியார் வீட்டிற்க்கு போவதாக கூறினான்.உதவி என்று யாரேனும் வந்தால் உடனே உதவி செய்யும் எண்ணம் உள்ளவன்.

அவன் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். அவனுடைய எண்ணமே அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இலவச பள்ளிகள் நிறுவ வேண்டும், ஏனெனில் கல்வி தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்று கூறுவான்.

கல்லூரியில் படிக்கும் போது எப்போதும் இதே சமுதாய சிந்தனையுடனே என்னுடன் பேசி கொண்டிருப்பார். இன்று அவனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது....! அந்த சந்திப்பில் நாங்கள் இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அவன் தன குடும்பத்தைப்பற்றியே அதிகமாக பேசி கொண்டிருந்தான்.

தற்செயலாக அவனிடம் சமுதாயத்தைப்பற்றி பேசியதற்கு, என் குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால், என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றான்... சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான்.பிறகு அவனுடைய நிறுத்தம் வந்ததால் எறங்கி கொண்டான்...

என்னுடைய அலுவலகம் வர இன்னும் 4 நிறுத்தம் இருந்தது, இடைப்பட்ட அந்த 4 நிறுத்தத்தில் நான் யோசித்த 4 விடயங்கள், இதோ உங்கள் பார்வைக்கு,

- எதனால் இவன் இப்படீ மாறிவிட்டான்...?

- ஒருவேளை இவன் திருமணம் செய்யாமல் இருந்தால், அவனுடைய கனவான கல்வி கூடத்தை நிறுவி இருப்பானோ...?

- இப்போது அவன் திருமணம் செய்து கொண்டதால் அவனுடைய அந்த ஒரு குடும்பம் மட்டுமே பயன் பெற்றிருக்கிறது, ஒருவேளை அவன் இலவச கல்வி கூடத்தை நிறுவி இருந்தால் எதனை குடும்பங்கள் பயன் பெற்றிருக்கும்....?

- திருமணம் ஒரு மனிதனை இப்படியெல்லாம் கூட மாற்றுமா....?

அந்த காலத்தில் வீட்டை காக்க ஒருவனும் , நாட்டை காக்க ஒருவனுமாக தங்களது வாரிசை பெற்றார்கள். அந்த முறை இப்பொழுது ஏன் இல்லை...? அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கொண்டிருந்த நமது தேசத்தை இவ்வாறாகத்தான் காப்பாற்றினார்கள். அந்த முறை இன்று வந்தால் அந்நியர்களாக வாழ்ந்து கொண்டிக்கும் தேச துரோகிகளிடமிருந்து நமது நாட்டை காப்பாற்றலாம்.இதை ஒருவனுக்கு திணிப்பதை விட, தானாக முன் வர வேண்டும்.

சற்றே சிந்தித்து பார்த்தால் திருமணம் செய்வதால் ஏற்படும் ஒரே நன்மை, கடைசி காலத்தில் தன்னை காப்பாற்ற ஒருவன் தேவை என்பதே, வேறந்த பலனும் இல்லை. இது அனைவருக்கும் அடக்கும்.
இது அசைக்க முடியாத உண்மை...!

தான் மட்டும் இல்லாமல் இச்சமூகமும் நல்ல வழியில் வாழ உதவுபவனுக்கு கடைசி காலத்தில் இந்த உலகமே பின்னால் இருக்கும்...
இதுவும் அசைக்க முடியாத உண்மை...!

நாடென்ன செய்தது நமக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு,
நீ என்ன செய்தாய் அதற்கு, என்று நினைத்தால் நன்மை உனக்கு...

இந்த நிலைமை மாறி வீட்டிற்கு ஒருவன் காமராசர், அப்துல்கலாம், மற்றும் அன்னைதெராசாவை போன்ற சமூக சீர்திருதவாதிகளாக மாற வேண்டும் என்பதே என் கனவு...!

கனவு மெய்ப்பட வேண்டும்....!

பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!

இந்த கனவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

Tuesday, September 15, 2009

காதல்

ஒரு உயிர் மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளிடம் காட்டும் அன்பையே காதல் என்கிறோம்.

இவ்வுலகத்தில் தோன்றிய முதல் உறவே காதல் தான், ஆனால் அப்படியான முதல் உறவு இன்று முதல் இரவை மட்டுமே குறியாக வைத்து வருகிறது.




பறவைகள்,விலங்குகள் போன்ற ஐந்தறிவு உயிறினங்களுக்கும் காதல் வருவதாக கூறப்படுகிறது, சற்றே சிந்தித்து பார்த்தால் ஐந்தறிவு உயிரினங்கள் அனைத்தும் ஒரு உயிரோடு மட்டுமே உறவாடாது, அப்படியிருக்க ஐந்தறிவு உயிரினங்களுக்கு வருவதாக சொல்லப்படும் உறவு காதலா...?

மிருகத்திடம் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக கூறப்படும் மனிதனும் மிருகங்களாகவே மாறிகொண்டிருக்கிறான்...

இன்றைய கணக்கெடுப்பின்ப்படி , காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 40% மட்டுமே தங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள், மற்ற அனைவரும் தறிகெட்டு போகிறார்கள். இதை வைத்து காதல் வருவதற்கான காரணங்களைச்சற்று சிந்தித்துப்பார்த்தால்,
காதல் வருவதற்கான அடிப்படை காரணிகளாக கருதப்படுவது,

- அழகு ( 50% )

- பணம் மற்றும் புகழ் ( 40% )

- மனசு ( 10% )

காதல் என்பது ஹார்மோன் மற்றும் க்ரோமோசோம்களின் செயல்பாடே, இது மனசு சார்ந்த உறவல்ல, மாறாக அறிவியலின் கூற்றுப்படி உடல் சார்ந்த உறவே...

இதயத்திற்கும் காதலிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.... இதயம் ஒரு மனிதன் இயங்குவதற்கான கருவியே தவிர , காதலின் வெளிபாடு அல்ல........

சங்க இலக்கியம் தொட்டு , இக்கால சினிமா வரை அனைத்து காதலும் நிழலே நிஜமல்ல...

அக்கால அரசர்களும், அரசிகளும் மற்றும் பாமர மக்களும் இலக்கியம் மற்றும் மேடை நாடகங்களில் வாயிலாக காதல் செய்தார்கள்.இக்கால மக்கள் சினிமா, நாடகம் போன்ற ஊடங்கங்களில் வாயிலாக காதல் செய்கிறார்கள்.

சினிமா போன்ற ஊடகத்தின் வாயிலாக காதல் காட்டுத்தீப்போல பரவுகிறது....

ஊடங்கங்களும் இந்த நிழல் வடிவ காதலை ஊக்குவித்து கொண்டுதான் இருக்கிறது...

அந்த நிழலை நிஜம் என்று சில பைத்தியகாரர்கள் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்....

சினிமாவில் வரும் நடிகர்களை போல ஆண்களும், நடிகைகளை போல பெண்களும் நினைத்து கொண்டு செய்யும் சேட்டைகள் அன்றாடம் நீங்கள் பார்க்கலாம், இது போல் வரும் காதல் மக்களாகிய நீங்கள் கூறுவது போல் மனசு பார்த்து வருவதா????

அம்பானியின் மகன் பிச்சைக்காரியை காதலிப்பானா??? இல்லை, பிச்சைக்காரி பில்கேட்ஸின் மகனை காதலிப்பானா???.., எதனால் இவர்கள் காதலிக்க மாட்டார்கள் "பணமா இல்லை அழகா இல்லை புகழா ".....?

வயது செய்யும் சிறு கோளாறால் ஆணும் பெண்ணும் பாலின வயதில் செய்யும் உறவே காதல், அது நாளடைவில் திருமணமாக உருவெடுக்கிறது, இத்திருமணம் காதலித்த அவ்விருவருமிடமோ அல்லது வேறொருவரிடமோ முடிகிறது.

ஒருவேளை அந்த திருமணம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோர் சம்மதத்துடன் நடப்பது

- வீட்டை விட்டு ஓடி போவது

ஒருவேளை அந்த திருமணம் வேறொருவரிடம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோரிடம் இருந்து வரும் எதிர்ப்பு

- காதல் செய்த அவ்விருவருகளுக்கிடையே வரும் ஊடல்

காதலினால் திருமனத்திற்கு முன்பு ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள், அப்படியானால் விவாகரத்து, தற்கொலை போன்றவைகள் காதலித்தவர்கள் ஊடல் காரணமாக செய்து கொள்வதில்லையா...?

காதலிக்கும் போது இருக்கும் சுகம் வேறெதுவிலும் கிடைக்காது என்பார்கள், அது ஏன் திருமணத்திற்கு பிறகு போகிறது....?

காதலில் தோற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களா..?ஆம்..!

ஆதாமூம் ஏவாளூம் இந்த மண்ணில் படைக்கப்பட்ட காலந்தொட்டே, ஆண்கள் தான் காதலில் தோற்று வருகிறார்கள்.

காதல் கொண்ட மோகத்தால் ஆண்களே ஆப்பிளிலிருந்து, காய்ந்து போன ரோசாப்பு வரை பறித்து கொடுக்கிறான், ஆண்களே சற்று விழித்து கொள்ளுங்கள்.....!

இதையெல்லாம் வைத்து கொண்டு பார்க்கும் போது ஆணிடமும் பெண்ணிடமும் வரும் காதல், ஒரு வகையான ஈர்ப்பே....!

சாதி,மத பேதமற்றது காதல் ==> எவனோ ஒருவன் கூறியது ,
அழகு,பணம்,புகழை தேடி வருவது காதல் ==> உங்களில் ஒருவன் கூறுவது...

இந்த பதிவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

Saturday, September 12, 2009

யார் அந்த ஆதி மனிதன்.....?

மனிதன் இந்த மண்ணில் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?




குரங்கில் இருந்து தான் மனிதன் வளர்ந்தான் என்று அறிவியல் சொல்லுகிறது. அப்படி இருக்க ஆதாம் தான் இந்த உலகத்தின் முதல் மனிதன் என்று வேதங்களும் கூறுகிறது, அப்படியானால் ஆதாம் மனிதனா அல்லது குரங்கா?

ஆதாம் மண்ணிலிருந்து படைக்க பட்டதாகவும், ஏவாள் அவன் உடலிலிருந்து படைக்க பட்டதாகவும் அறிவியலும், வேதங்களும் கூறுகிறது.

ஆதாமூம் ஏவாளூம் பேசிய முதல் வார்த்தை என்ன? அது எந்த ,மொழியில் இருந்துருக்க கூடும்?

இவ்விருவரும் எந்த நாட்டில் படைக்க பட்டார்கள் ?

அவர்கள் எந்த மதத்தை , எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்?

ஆதாமூம் ஏவாளூம் தான் நமக்கு முன்னவர்கள் என்றால் , இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சகோதர சகோதரிகள், அப்படி இருக்க மற்ற உறவுகள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

ஒரு தாய் மக்களான நம்மிடம் நல்லவன், கெட்டவன், உயர்ந்த்வன், தாழ்ந்தவன், பணம், பொய், திருட்டு, சண்டை, அடிமைத்தனம் போன்றவை எங்கிருந்து யாரால் வந்தது?

விலங்கினங்கள் எங்கிருந்து யாரால் படைக்க பட்டது?

மண்ணுலகம், விண்ணுலகம்(சொர்க்கம் , நரகம்) போன்ற இரு வேறு உலகம் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதனுக்கும் விலங்கினத்துக்கும் மரணம் என்ற ஒரு நிலை வருகிறது. மரணம் தான் உயிரினத்திற்கு இறுதி நிலை என்றால் உயிரினங்கள் எதற்காக மண்ணில் படைக்க பெற்றார்கள்?

பின்வருவன அனைத்தும் மனிதன் இம்மண்ணுலகில் செய்யும் பாரம்பரிய நடவடிக்கைகள்,

- பிறப்பது

- வளர்வது

- இறப்பது

வாழ்வதற்கு உயிரினங்கள் என்றால், எதற்கு மரணம்? இதற்க்குத்தான் இவர்கள் மண்ணில் படைக்க பெற்றார்களா ?

இதை இதற்கு முன்னால் சிந்தித்து பார்த்ததுண்டா, பார்த்திருந்தால் மகிழ்ச்சி, இல்லையெனில் சற்று ஆழ்ந்து சிந்தித்து விட்டு உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்...
 

இன்று முதல்,




நான் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல விரும்புகிறேன்......!
                                                                                                        - ஊடகன்