Wednesday, October 28, 2009

கள்ளிக்காட்டு கல்விக்கூடம்

அடர்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொண்ட வரண்ட காடு, மதுரை பக்கத்தில் உள்ள நரிக்குடி எனும் கிராமம்.

சொக்கன், அழகர், மொக்கை இவர்கள் மூவரும் ஊரின் எல்லையிலுள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.

ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக cycle-ஐ ஓட்டி கொண்டு மொக்கை வீட்டிற்க்கு செல்கிறான், அழகர்.

மொக்கை வாடா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு, என்றான் அழகர்..
பள்ளிக்கூடத்துக்கு தயாராகி cycle-ன் பின்புறம் உட்கார்ந்தான் மொக்கை..

அங்கிருந்து கிழக்கால உள்ள சொக்கன் வீட்டிற்க்கு சென்று cycle-ஐ நிறுத்தினர்
எம்புட்டு நேரமா நிக்கிறது, என்றான் சொக்கன்

நான் எங்கடா நேரமாக்குன , இந்த மொக்க தாண்டா முகத்துல பவுடர போடுறான், போடுறான் போட்டுக்கிட்டே இருக்காம்டா, என்றான் அழகர்

உனக்கென்ன பொண்ணா பாக்க போறாங்க, பள்ளிக்கூடத்துக்கு தானடா போறோம், என்றான் சொக்கன்.

சரி , உட்காறுடா, நேரமாச்சுனா வாத்தி கத்துவான்டா....

வகுப்பறையில்,

டேய், பசங்களா இன்னிக்கு உங்களுக்கு புஷ்தகம், சட்டத்துணியெல்லாம் வந்துருக்குடா...

எல்லாருக்கும் இருக்கா SIR, என்றான் சொக்கன்...

இல்லடா பைய்யா, இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான்டா...
ஏன் SIR அவைங்களுக்கு கிடையாது...?, என்றான் மொக்கை

அரசாங்கம் அப்படித்தான்டா சொல்லிருக்கு, என்றார் ஆசிரியர்

மதிய உணவு இடைவேளையில்,

டேய் சொக்கா என்னடா இன்னிக்கு சாப்பாடு என கேட்டான் அழகர்,

எங்க ஆத்தா பழைய சோறும், வெங்காயமும் வச்சு கொடுத்ததுடா....

இன்னிக்குமாடா...! என்றான் அழகர்...

தண்ணிகுடிக்க கிணற்றடிக்கு போகலாம் வாங்க, என்றான் சொக்கன்.

கிணத்தில் ஏறி நின்று அழகர், டேய் கிணத்துல்ல வாளீ இருக்கு கைத்த காணோம்டா...

சரி, நான் போய் எடுத்துட்டு வரேன், என்றான் சொக்கன்...

டிஷ்ஷ்.....ஆஆஆஆஆ........டிஷ்ஷ்ஷ்.......ஆஆ,படபட........

கிணற்றில் தவறி விழுந்தான், அழகர்.....

(சட்டென்று பதற்றத்துடன்) டேய் அழகரு என்ன்னாசுடா, என்று கிணற்றை எட்டி பார்த்தான் மொக்கை.....

அழகரு கிணத்துல விழுந்துட்டான், யாராவது வாங்களேன்....... யாராவது வாங்களேன்.., என்றான் மொக்கை...

சுற்றி பள்ளி மாணவர்களை தவிர வேறு எந்த பெரியவர்களும் இல்லை.........

கத்தி..கத்தி..பார்த்து....நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தில் கிணற்றில் மொக்கையும் விழுந்தான்...

சிறிது நேரத்திற்கு பிறகு,

கிணற்றில் விழுந்தவர்கள் பிணமாக தரையில்..., அவர்களை சுற்றி கிராம மக்களுடன் மொக்கை மற்றும் அழகரின் பெற்றோர்களும், சொக்கனும்.... 
 
கண்ட சாதி கார பயகளோட சுத்தாத, சேராதன்னு எவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி சாய்ந்து கெடக்குரேயெடா.,என்றாள் அழகரின் அம்மா...
 
பக்கத்தில் இருந்த மொக்கையின் அம்மா, எங்க சாதிய பததியாடீ குறைவா பேசுற என்று ஒரு பெரிய கலவரமே நடந்தது பிணற்றின் முன்பு.......
 
என் பிள்ளை, என் பிள்ளை என்று தனித்தனியாக அழுது புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த கணத்தில், என் நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்...
 
அங்கே சாதி என்னும் தீ மறைந்து, நட்பு என்னும் தீ கொழுந்தாய் பற்றி எறிந்து கொண்டிருந்தது.

Friday, October 23, 2009

சமச்சீர்க்கல்வி - என்னுடைய பார்வையில் (கல்வி-பகுதி-3)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

(பகுதி-1)
http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html
(பகுதி-2)
http://www.oodagan.blogspot.com/2009/10/2_20.html

காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான சில பொன்னான திட்டங்களை விட்டு மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்…?

இன்று அரசுப்பள்ளியில் இவ்வளவு வசதி இருந்தும், யாவரும் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன்...?ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் அரசுப்பள்ளியை நாடுகிறார்கள், மற்றவர்கள் அனைவரும் தனியார்ப்பள்ளியை எவ்வளவு செலவு ஆனாலும் தேடிப்போகிறார்கள்.

* முறையான ஆசிரியர்கள் இல்லாததாலா

* ஆங்கிலமொழியின் மேல் உள்ள நாட்டத்தினாலா

* தரமானக்கல்வி கிடைப்பதினாலா

* இடஒதுக்கீடுகள் கிடைக்க பெறாமையாலா

* தனியார் பள்ளிகள் கல்வியை தவிர மற்ற கலைக்களிலும் ஆர்வம் செலுத்துவதினாலா

அரசாங்கம் ஏன் அரசுப்பள்ளியின் மேல் அக்கறை காட்டுவதில்லை.......?

இன்று ஒரு சில தனியார்ப்பள்ளிகளில் பெற்றோர்கள் படித்தால் தான் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தரப்படும் என்ற நிலைமை இருக்கிறது. அப்படியானால் செருப்பு தைப்பவனின் மகன் செருப்பைதான் தைக்கவேண்டுமா...?

இன்று தனியார் பள்ளிகளில், மருத்துவ படிப்புக்கு (MBBS) ஆகும் செலவை விட துவக்க படிப்புக்கே (LKG) அதிக செலவுகள் ஆகின்றது என்றால் மிகையல்ல.


சிறப்பு வகுப்புகள் (TUITION) என்று சொல்லி ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனி வகுப்பு நடத்துகிறார்கள். சிறப்பு வகுப்புகளில் இருக்கும் கவனம் ஏன் மற்ற நேரத்தில் இல்லை, ஏனெனில் "பணம் பத்தும் செய்யும்".......

இந்த நிலைமை மாறி தனியார்ப்பள்ளிகளில் உள்ள அத்தனை முன்னேற்றமும், சலுகைகளும் அரசுப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அளிக்க வேண்டும். அப்பொழுது தான் தனியார்ப்பள்ளிகள் செய்யும் பணவேட்டை அடங்கும்.....

என்னுடைய பார்வையில் சமச்சீர் கல்வி என்பது அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் சமமாக கிடைக்கும் கல்வியே....!

Tuesday, October 20, 2009

சாதி, ஒரு சமூக வியாதி - (கல்வி-பகுதி-2)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html

அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இன்று இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறுவேன்....!

இன்றும் அனைத்து பள்ளியில் மாணவர்களுக்கான வருகை பதிவேட்டில் அவர்களின் பெயரை, அகர வரிசையில் இல்லாமல் சாதி பார்த்து எழுதி எழுதிவருகின்றனர். இல்லையேல் ஒவ்வொரு மாணவனுடைய பெயருக்கு நேராக சாதியையும் சேர்த்து எழுதுகின்றனர்.
சாதிகள் இல்லையடிப்பாப்பா என்று பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு,
சாதி பார்த்து இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள், போன்ற அரசின் இலவச பொருள்கள் கொடுக்கபடுகின்றன.

காமராசர் அறிமுகப்படுத்திய இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள் போன்றவைகள் அனைவரையும் சேர்ந்தடைகின்றனவா...?

காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான இலவசத்திட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தானா...?

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் தான் இந்த பூமியில் வறுமையில் வாடுகிறார்களா...?, ஏன் மற்ற சாதியினர் இல்லையா.....?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் , பழங்குடியினர், முற்ப்பட்ட வகுப்பினர்கள் போன்ற எல்லா சாதியிலும் ஒரு வேலை கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியாதா.....?
முதலில் பள்ளிகளில் சாதிப்பார்த்து சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து சாதியினரும் ஒரே மாதிரியாக நடத்த பட வேண்டும். இந்த நிலைமை மாறினால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கபெறும்.

ஒரு காலத்தில் ஒரு சில சாதிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டார்கள், இன்றும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருவனுடைய தரம் என்பது சாதியின் அடிப்படையில் இருக்கக்கூடாது மாறாக பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் மட்டும் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு துறை , கல்லூரியில் இட ஒதுக்கீடு என்று அனைத்து துறையிலும் சாதிப்பார்த்து மக்களை வேறுப்படுத்தும் விதம் மாற வேண்டும்..

இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் மக்கள் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன் என்று பார்ப்போம்....

Friday, October 16, 2009

கண்ணுடையோர் என்பார் கற்றோர் - (கல்வி-பகுதி-1)

”கண்ணுடையோர் என்பார் கற்றோர் - முகத்திரண்டு
  புண்ணுடையோர் கல்லாதவர்”
                                                                           -வள்ளுவன்

கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே நம் பாட்டன் வள்ளுவன் கருத்து.அவன் எந்த கல்விக்கூடத்தில் படித்து தமிழையும், பிற இதர உலக நுணுக்கங்களையும் கற்றான், அவனுடைய ஆசிரியன் யாராக இருக்ககூடும் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.......?

பண்டைய காலத்தில் வேத நூல்களையே பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டு மக்கள் பயின்று வந்தார்கள்.ஒவ்வொரு பிரிவினரும், மதத்தினரும் அவர்களுடைய மார்க்க பாடங்களை ஈபுரு, சமஸ்கிரிதம், அரபி போன்ற வேத மொழிகளின் வாயிலாக பயின்றார்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கை பாடமாக அமைந்தது. அப்பொழுதும் மதம் மற்றும் சாதியின் அடிப்படையிலே வேதங்கள் கற்றுக்கொடுக்க பட்டது.வேதங்கள் படிக்க தகுதியற்றவர் என்று ஒரு பிரிவினர் , உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளப்பட்ட சில பிரிவினரால் ஒதுக்கப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் இசையும்,மனிதனுக்கு தேவையான தற்காப்புகலைகளும் கலைகளும் ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

வேதபாடங்கள் மக்களால் படித்து பரவிக்கொண்டிருந்த காலத்தில், அறிவியல் கண்டுப்பிடிப்பு வெகுவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அந்த கண்டுப்பிடிப்புகளை பயன்படுத்தியோர் அறிவியல் யுக்திகளையும் கற்க முயன்றனர். இவ்வாறாகவே அறிவியல் மற்றும் கணித படிப்புகள் கல்வி வளர்ச்சி அடைந்தது. இந்த பொதுக்கல்வி உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவியது.

மனிதன் சிறிது சிறிதாக மார்க்க கல்வியிலிருந்து, உலக கல்வியையும் கற்க முற்ப்பட்டான்.

அந்த முன்னேற்றமே உலகத்தின் அனைத்து மூலைகளிலும் உலக பொது கல்விக்கான பாடசாலை வர காரணமாயிற்று. நம் இந்தியாவிலும் இது வெகுவாக வளர்ந்தது.

வேதபாடங்களில் இருந்த பிரிவினை உலக பொதுக்கல்வியை கற்பதிலும் இருந்தது. சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை.

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்கள் தீவிரமாகப் போராடினார். அதன் பின்னர் கீழ் சாதி, மேல் சாதி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக கல்வி கற்றனர்.

முந்தய காலத்தில் சூத்திரர்கள், உயர் சாதி மக்களால் மிகவும் ஒதுக்கப்பட்டு சீரழிந்தார்கள். அந்த நிலைமையை அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருமல்லை நாயக்கர் மகால், தாஜ்மஹால், போன்ற பெரிய கோபுரங்கள், கோயில்களை கட்டியவனுக்கு, மக்களுக்கு தேவையான கல்விக்கூடங்களை நிறுவ வேண்டும் என தோன்றவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களில் தோறும் கல்விக்கூடங்கள் அறிமுக படுத்தியவன் கர்ம வீரன் காமராசனே..........!

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.

எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி - இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் - தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்றறியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராசரின் திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.


காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.

16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.

பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.

இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” - என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.

தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” - என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.

இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராசரே என்றால் அது மிகையாகாது.

இதுவரை கல்வி பிறந்த கதையையும் அது மக்களிடையே வளர்ச்சியடைந்த விதத்தையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் இன்று எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்....?

Saturday, October 10, 2009

இளந்(இழந்த)தமிழன்

இன்று.........,

அது ஒரு மழைக்காலம்....

வழக்கம் போலல்லாமல் சற்று தாமதமாக என்னோட ஆபிசுக்கு அன்று காலை 11.30 மணிக்கு போனேன்.....

என் சீட்டில் உட்கார்ந்தவுடன், அருகில் உள்ள போன் மணி ஒலித்தது, போனை எடுத்து பேசினேன்...

இன்று Recruitment உள்ளதாகவும் , நான் தான் Interview எடுக்க வேண்டும் எனவும் எனது மேனேஜர் கேட்டுக்கொண்டார்.....

அதன் பெயரில் உடனே Interview அறைக்கு சென்றேன்,

அங்கு மூன்று பேர் Interview க்காக அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்....

Interview அறையில் உட்கார்ந்தவுடன், HR ஐ அழைத்து முதல் Candidatai வரசொல்லுங்கள் என்றேன்.....

முதல் Candidate எனதறைக்கு வந்தான்,

அவனை உட்கார சொன்னேன்,

அவனிடம், "Tell About Yourself" என்றேன்....

அவன் ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி தன்னைப்பற்றி சொன்னான், சொல்லியும் முடித்தான்...

பிறகு சில Technical Question's கேட்டேன், ஒரு சிலவற்றை தவிர பெரிய பதில்களுக்கு தடுமாறியே பதில் சொல்லிகொண்டிருந்தான்...

அவனுடைய பதிலிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன், அவனுக்கு Answer தெரிந்தும் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததால் தடுமாறுகிறான் என்று...

இங்கிலீஷ் பேச அவன் தடுமாறுவதை கண்டு என் மனம் உருகியது..

ஆதலால் அவனுக்கு சில Programs' ஐ எழுத கொடுத்து, எழுத சொன்னேன்....

அவன் எழுதி கொண்டிருந்த அந்த இடைப்பட்ட நேரத்தில்,

நான் காலத்தை சற்று பின்னோக்கி எனக்குள் நானாக மூழ்கினேன்...

சில வருடங்களுக்கு முன்,

அன்று.........,
என் பெயர் தமிழ்செல்வன்....

நான் மதுரையில் மேலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவன்...

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் தமிழ்வழிக்கல்வியில் தான் படித்தேன்..

எனக்கொரு ஆசை, இந்தியாவோட Bilgates ஆகனும்னு....

நான் +2 - ல மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தேன்...

அப்போ எனக்கு கிடைச்ச Doctor படிப்ப விட்டுட்டு, எனக்கு பிடிச்ச Computer படிப்ப, பாளையம்கோட்டை AnnaUniversity - ல Computer Engineering படிச்சேன்........

நான் தமிழ் மீடியத்துல படிச்சதால ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சுதான் 89% எடுத்து கல்லூரி வாழ்க்கையை முடித்தேன்....

படித்து முடித்து வேலைதேடி இந்த சிங்கார சென்னையில் உள்ள திருவல்லிகேனியில் என் நண்பனின் மூலமாக ஒரு Mansion இல் தங்கினேன்...

Interview Attend பண்ணுவதற்காக ஒரு நாள் காலை ரெடி ஆகினேன், Interview போகும் போகும் போது ஷூ போட்டுப்போக வேண்டும் என என்பன் கூறினான், ஷூ என்னிடம் இல்லாததால் அவனிடம் வாங்கி அணிந்து கொண்டு அவசரமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு MNC Company க்கு சென்றேன்.

எனக்கு முன்பாக ஏழு பேர் Interview அறையில் காத்திருந்தனர்...

எனது விழிகள் இரண்டும் அந்த Company-இன் அழகை ரசித்து கொண்டிருந்தது ...

எனக்குள் ஒரு சின்ன பயம் கலந்த படப்படப்பும் இருந்தது....

அங்கு வந்திருந்தவர்கள் நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசிக்கொண்டிருந்தனர்...

இந்த Company-இல் எப்படியும் வேலைக்கிடைத்துவிடும் என்ற கனவோடு, எனக்குள் பல ஆசைகளும் லட்சியங்களும் ஓடிக்கொண்டிருந்தது.....

HR வந்து என்னை Interview அறையினுள் அழைத்து சென்றார்....

அங்கே எனக்கு கேள்விகள் சரமாறியாக கேட்கககப்பட்டது, அனைத்திற்கும் பதில் தெரிந்தும் இங்கிலீஷ் தெரியாததால் என்னால் சொல்லமுடியவில்லை...

பெருத்த சோகத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்....

இந்த இழப்பு, சோகம் எனக்கும் மட்டும் ஏற்ப்பட்டது அல்ல, இந்த தமிழ்நாட்டில் உள்ள பல இளந்தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட பேரிழப்பு ...

இந்த மாதிரி எத்தனை பேர் தகுதி இருந்தும் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் தோத்துப்போகிருப்பார்கள்...

இந்த மாதிரி எத்தனை தகுதியுள்ள Bilgatesஐ இந்தியா இழந்திருக்கும்...
 
இன்று.........,

"முடிச்சிட்டேன் SIR",  என்று அந்த பையன் என்னை அழைத்தான்...

நானும் என் கனவில் இருந்து மீண்டு அந்த பையன் எழுதிய தாளை வாங்கி பார்த்தேன்...ஒவ்வொன்றுக்கும் பதில் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருந்தான்....

அவனை பாராட்டி, வேலைக்கு தேர்வு செய்துவிட்டேன்....!

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதை வடிவத்தில் எழுதியுள்ளேன்

Wednesday, October 7, 2009

இந்திய மொழிகள் அழிவை நோக்கி....!(மொழி - பகுதி - 3)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

இதுவரை நாம் மொழி பிறந்த வரலாற்றையும், அது உலகலவில் பரவி புது மொழியாக உருவெடுத்த கதையையும் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியை இங்கே விவாதிப்போம்.

இன்று எமது தாயகத்தில் அனைத்து தர மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட மொழி ஆங்கிலம், ஆதலாலே அனைவரும் தாய்மொழிக்கல்வியை விட்டு அந்நிய மொழியான ஆங்கிலவழிக்கல்வியை தேடி போகிறார்கள்.
பணக்காரன் முதல் ஏழை வரை அந்நிய மொழிவழிக்கல்வியை தேடி போகிறார்கள். ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் தாய் மொழிவழிக்கல்வியை நாடுகிறார்கள். ஏனெனில் அந்த தாய் மொழிவழிக்கல்வி தான் அரசின் கட்டுப்பாட்டில் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இன்று தாய்மொழியில் பேசுவதை அவமானமாக மற்றும் இழிவாக கருதுகிறார்கள் நம்மவர்கள். ஆங்கில மொழியில் பேசுவதையே நாகரிகமாக கருதுகிறார்கள்.

இன்று ஒரு சிலர் வீட்டிலும் ஆங்கிலத்திலே பேசுகிறார்கள், நாளை அவர்களுடைய சந்ததியினரும் இந்த ஆங்கிலத்தையே பேசுவார்கள்.

அடுத்த நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆங்கில மொழி தான் பேசப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

பல நூறு மொழிகள் கொண்ட இந்த நாட்டில் மற்றும் மிக சில தொன்மையான மொழிகள் பேசப்பட்டு வந்த இந்த இந்தியாவில் வரும்காலத்தில் ஒரே மொழியாம் ஆங்கிலம் தான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இந்தியா மொழிகள அழிவை நோக்கிபோகிறது. ஆம்....!

எமது தாய் மொழி தமிழும் அழிவையே தேடி போகிறது, தமிழர்களையே அழிக்கும் போது தமிழ் மொழியை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா....?

"தமிழ் இனி மெல்லச் சாகும்" தமிழ்ப் புலவன் பாரதி கூறியது,
"எம் தாயக மொழிகளும் இனி மெல்லச் சாகும்" உங்களில் ஒருவன் ஊடகன் கூறுவது....!

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியா USI(United States Of India) ஆக மாறலாம், அப்போது அனைத்து மக்களும் ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கலாம்.....

Saturday, October 3, 2009

ஆங்கிலம் - இந்தியாவில் ஊடுருவல்.....! -- ( மொழி - பகுதி - 2 )

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

பெரும் வளத்தை கொண்ட நாடு நம் இந்தியா. அந்த காரணத்தினாலே முதன் முதலில் போர்சுக்கிசியார்கள் இந்தியாவினுள் நுழைந்தார்கள். மார்க்கொபோலாவின் கூற்றின் பெயரில் வாஸ்கோடகாமா இந்தியாவினுள் கடல் வழியாக வந்தடைந்தார். இங்குள்ள செல்வ வளத்தை நோட்டம் செய்துவிட்டு தனது சகாக்களையும் அழைத்து வணிகம் செய்தார்.

இதே போல் டெனியர்கள், மங்கோலியர்கள், முகலாயர்கள் மற்றும் டச்சுகாரர்கள் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். இதனால் இந்தியாவினுள் அவர்களுடைய மொழிகள் ஆங்காங்கே பரவின. இவர்களுக்குள் கோஸ்டி மோதலில் காரணமாக இவர்கள் எவரும் நிலையாக தங்கவில்லை.

 இவர்களுக்கு பின் வந்த பிரேன்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பல ஆண்டு காலம் நிலையாக இருந்து அவர்களுக்கு தேவையான வளத்தை பெற்று கொண்டு செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுடைய மொழிகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் சரளமாக இந்தியாவினுள் நுழைந்தது.

ஆங்கிலேயர்கள் கோல்கத்தா, மும்பை, சென்னை, ஆகிய 3 மாநிலப்பகுதிகளில்தான் நேரடியாக அட்சி செய்தார்கள். இதன் காரணமாக 300 ஆன்டுகளாகவே ஆங்கில மொழியின் தாக்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் விரைந்து வளர்ந்தது.மற்ற வட மாநிலங்கள் ஆங்கில வாடையே இல்லாமல் சித்றிக்கிடந்தன. இதன் காரணமாகவே தொழில்துறையும் வடக்கே வளரவில்லை. ஹிந்தி மொழியை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையும் ஆங்கிலேயரையே சாரும்.

உருது மொழி ஏற்கனவே முகலாயர் ஆட்சியில் ஆட்சி மொழியாக இருந்தது. வடக்கே, பேசும் ஹிந்தி, மற்றும் உருது மொழிக்ளைச் சேர்த்து ஹிந்துச்தானி என்று ராணுவ்த்தின் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினார்கள். உருது மொழி தோன்றியது அரபி, ஹிந்தி, பெர்சிய மொழிகளின் கலப்பு. அக்பர்காலத்தில் உருவாக்கப் பெற்றது.எம் தாய் மொழி தமிழ் பேசி திராவிட நாடு என்றிருந்த எமது தமிழகத்தை கூறுப்போட்டு கன்னட, ஆந்திர மற்றும் கேரளாவாக ஆக்கினார்கள். இங்கே தமிழ் மொழி மூன்று மொழிகளை உருவாக்கியது. இதனாலே இன்று காவேரி, முல்லை பெரியார் அணை, கிருஷ்ணா நீர் போன்ற பிரச்சினைகள் வளர்ந்தது.

நமது தேசத்தில் அதிகபட்ச மக்களால் பேசப்பட்டு வரும் மொழி ஹிந்தி தான்.நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு எம்.பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க.ஹிந்தி எதிர்ப்பைக் கொண்டே ஆட்சியைப் பிடித்த அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாரிசுகளை, வாரிசுகளின் வாரிசுகளை பல மொழிகள் கற்க வைத்து புளங்காகிதம் அடைந்துள்ளனர். கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் தமிழ்! தமிழ்! என்று சொல்லி கொண்டு, அவரது குடும்பம் மட்டும் எல்லா மொழிகளிலும் படிப்பார்கள்.

இவர்களது கண்ணோட்டத்தில் மக்கள் எல்லோரும் மடையர்கள். நாங்கள் சொன்னதை என்றுமே செய்யமாட்டோம் என்ற நிஜத்தை மக்களுக்கு பல நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர். பாவம், இன்னும் பல தொண்டர்கள் இவர்களுக்காக தீக்குளிக்கத் தயாராக இருக்கும் நிலை உள்ளவரை இவர்கள் காட்டில் மழை தான். யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் ஓட்டுப் போட்ட மக்களைச் சொல்ல வேண்டும்.

தமிழை அதிக நேசித்த அரசியல் கோடீஸ்வரர்களுக்கு ஏன் எமது ஈழ தமிழர்கள் மீது அக்கரை இல்லை....?

ஆங்கிலத்தை இரண்டாவது பாட மொழியாக கற்க ஏற்று கொண்ட அரசு ஏன் நமது தேச மொழியான ஹிந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை....?
 
அப்படி இரண்டாவது பாட மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலமும் சரியாக பள்ளிகளில் கற்று தரப்படுகிறதா என்றால் இல்லை.
 
இதில் சமசீர்க்கல்வி வேறு வரப்போகிறதாம்( ஒரு மயிரும் பன்னமாடானுங்க ).........!

தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழியை தவிர ஆங்கிலத்தை சரியாக படிக்கவில்லை(முறையான ஆசிரியர் இல்லாத காரணத்தால் ).

ஹிந்தி மொழியை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு , ஏன் ஆங்கில மொழியை எதிர்க்க தெரியவில்லை...?


ஆங்கிலத்தை பெருமைக்காக நம் மக்கள் அங்கீகரிக்கிறார்கள் ஏன் தமிழ், ஹிந்தியை வெறுக்கிறார்கள்.ஜேர்மன், பிரான்ஸ், ரஷ்ய போன்ற வளர்ந்த நாடுகள் அவர்கள் நாட்டு மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இன்று ஆங்கிலம் தான் நம்மவர்களுக்கு பொது மொழியாக வந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு காரணம் என்று பார்த்தால் வணிகம் மற்றும் கணினி போன்ற அனைத்து துறையிலும் முதன்மையாக உள்ளார்கள். இதுவே அம்மொழி உலகளவிலும் , நமது தேசத்திலும் பரவியதற்கு காரணம்.

நாம் ஆங்கிலேயருக்கு முதலில் அடிமை, இப்போது ஆங்கிலத்துக்கு அடிமையா?

ஒரு அந்நிய மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், நம் நாட்டின் மொழிக்குக் கொடுக்கப் படாதது ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா?
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை பொறுத்துதான் , அந்த நாட்டிலுள்ள மொழிகளும் மற்ற நாட்டினர்க்கு பரவும்.

இந்தியர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று சொல்லும்படி எதுவும் மற்ற நாட்டிடையே பரவாவதே இதற்க்கு காரணம்.

மற்ற நாடுகளில் மொழியே இல்லாத காலத்தில், இங்கே பெரும் புலவர்ககள் இருந்துள்ளனர். அந்த முன்னேற்றம் ஏன் இன்று இல்லை....?

கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி எமது தமிழ் மொழி. பின்பு ஏன் ஒரு கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை..? மற்ற மாநிலத்தவனை விட, மற்ற நாட்டினரை விட அதி புத்திசாலி நம் தமிழர்கள் தான் என்றால் மிகையல்ல. ஏனெனில் மற்றவன் கண்டெடுத்த ஒன்றை மிக அழகாக கற்றுகொல்பவன் அவனே...! ஆதலால் தான் நம்மவர்களை இன்றளவும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அமெரிக்கர்களை, சப்பானியர்கள் போன்றவர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டது. பின்பு ஏன் இங்கு பில்கேட்ஸ், எடிசன் போன்றவர்கள் இல்லை.

நம்மவர்கள் இருப்பதை வைத்து எப்படி முண்டியடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள்.

நான் ஆங்கிலத்தையும் , ஹிந்தியையும் எதிர்ப்பவனள்ள, மாறாக மிக பழமைமிக்க எம் தாய் மொழி ஏன் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என தினம் தினம் குமுருபவன்...!

ஹிந்தியை எதிர்க்க நான் கருணாநிதியும் அல்ல, ஆங்கிலத்தை எதிர்க்க ராமதாசும் அல்ல, நான் ஒரு ஊடகன்( உங்களில் ஒருவனாக அந்நிய மொழியால் பாதிக்கப்பட்டவன், நடப்பதை இந்த ஊடகத்தின் வழியாக சொல்லும் ஊடகன்).

நான் கூறியது அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. என் கூற்றை ஏற்று கொண்டால், இதை ஒரு கட்டுரையாக படிக்காமல் கருத்தாக ஏற்று கொண்டு, அல்லது படித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல், சிந்தித்து, ஆராய்ந்து பற்பல சாதனைகளை புரிய வேண்டும்.

Thursday, October 1, 2009

மொழி -- தோற்றம் : ???? , மறைவு : ???? -- (பகுதி - 1)

மொழி என்பது ஒரு போராட்டக்கருவி அது காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை மொழி தோன்றிய காலத்தையும் , மறையும் காலத்தையும் யாராலும் கணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் யுகங்கள் இருந்தும் மனிதன், மொழி தோன்றிய காலத்தை அறியமுடியவில்லை.

உயிரினங்களின் மிக அருமையான உறுப்புகளாக கருதப்படுவது வாய் மற்றும் காது. ஏனெனில் அவை தான் ஒரு விடயத்தை வெளிக்காட்டுகிறது.உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களும் தங்களுக்கு தெரிந்த மொழியின் வாயிலாக கருத்துக்களை பரிமாரிகொள்கின்றன.
எறும்பில் இருந்து மனிதன் வரை இவ்வாறு ஒரு வகையான மொழியின் மூலமாக தான் பேசிகொல்கிறார்கள். இவற்றுள் ஆறறிவு கொண்ட மனிதனே மொழியை அறிந்து ஆராய்ந்து,சிந்தித்து தனது மூலையில் ஒரு கோர்வையாக அடுக்கி பேசுகிறான். மனிதனுக்கும் மிருங்கங்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்யாசம் இதுதான் என்றால் மிகையல்ல.


உலகில் தோன்றிய முதல் மொழி எதுவென்று இதுவரை அதிகாரபூர்வமாக எதிலும் அறிவிக்க படவில்லை. அப்படியிருக்க ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்திருக்க வேண்டும். ஆதாமும், அவனுடைய சந்ததிகளே மொழியை உருவாகியிருக்ககூடும். அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கலாம், ஆங்கிலமா..? ஹிந்தியா..?,
இல்லை எம் தாய் மொழி தமிழா...?.

இன்று உலக அளவில் மிக அதிகமாக பேசப்படும் மொழி சீனர்களின் மொழியே. ஏனெனில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு அதுதான். அதற்கடுத்து ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிய மொழிகள், அரபி, வங்காள மொழி இருக்கிறது...

எமது பாரத நாட்டில் ஹிந்தியே முதன்மையாக திகழ்கிறது. அதற்கடுதார்ப்போல் வங்காளம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் உள்ளது.

இன்று அதிக அளவில் பரவி வரும் மொழிகள் இந்தோ-ஐரோப்பா மொழிகளான ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தான். உலகில் வாழும் சமப்பாதி மக்கள் இந்த மொழிகளை தான் பேசி வருகிறார்கள். இந்த மொழிகள் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பாக கிழகத்திய ஐரோப்பிய நாடுகளிலும் , மேற்கத்திய ஆசிய நாடுகளிலும் வாழ்ந்த காட்டுவாசிகளிடமிருந்து வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகிறது.
உலகில் தோன்றிய அனைத்து மொழிகளும் உலக முதல் மொழியிலிருந்து உருவெடுத்ததே ஆகும். இன்று 5000க்கும் மேற்ப்பட்ட மொழிகள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.இவை அனைத்தும் சுமார் 20 மொழிகளிலிருந்து வளர்ந்தது.

ஒரு மொழி உலகம் முழுவதும் வளர்ந்ததுக்கான காரணிகளாக இருப்பது,

- வர்த்தகத்தின் போது

- மதத்தின் மூலமாக

- அரசாங்கத்தின் மூலமாக

- ஒரு துறையின் மூலமாக

ஒரு நகரத்தில் அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றவர்களிடம் பேசும் போது தாய் மொழியிலல்லாமல், இருவருக்கும் பொதுவான மொழி பேசுவது மரபு. இதையே லிங்குவா பிரான்க(lingua franca) என்றழைக்கிறார்கள்.

கப்பல் துறையில், விமான துறையில் போன்ற பொது வேலைகளில் இருப்பவர்கள் , இது போன்ற பொது மொழி மூலமே வெவ்வேறு வகையான மக்களிடம் பேசினார்கள். இந்த 21-ஆம் நூற்றாண்டில் அப்படியான பொது மொழியாக பரவி வருவது ஆங்கிலமே. இது நிலையானது என்று கூற முடியாது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, ஆனால் அவர்களுடைய மொழி கூட நாளடைவில் போது மொழியாக மாற வாய்ப்புண்டு(அது கடினமே.....!). ஏனெனில் வர்த்தகம், கணினி போன்ற அனைத்து துறையிலும் காட்டுத்தீப்போல பரவி வருவது ஆங்கிலமே.

ஒரே மொழி வெவ்வேறு கண்டத்தில் வெவ்வேறு வகையாக பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலம் ஆசியாவில் ஒரு மாதிரியாகவும் , ஐரோப்பாவில் ஒரு மாதிரியாகவும் பேசப்படுகிறது.
ஐரோப்பாவில் இல் எச்பெரன்ட்டோ(Esperanto) என்ற பொது மொழி எல்.எல்.லமெந்ஹொப்(L. L. Zamenhof) என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.பல நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசிகொண்டிருந்தவர்களை, ஒரே மொழியை இதன் மூலம் பேச வைத்தார்.

இந்த விவாதத்தை இதோடு நிறுத்தாமல் , இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காண்போம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில் இந்தியாவில் ஆங்கிலம் புகுந்து ஆட்சி செய்வதை காண்போம்.