Wednesday, October 28, 2009

கள்ளிக்காட்டு கல்விக்கூடம்

அடர்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொண்ட வரண்ட காடு, மதுரை பக்கத்தில் உள்ள நரிக்குடி எனும் கிராமம்.

சொக்கன், அழகர், மொக்கை இவர்கள் மூவரும் ஊரின் எல்லையிலுள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.

ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக cycle-ஐ ஓட்டி கொண்டு மொக்கை வீட்டிற்க்கு செல்கிறான், அழகர்.

மொக்கை வாடா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு, என்றான் அழகர்..
பள்ளிக்கூடத்துக்கு தயாராகி cycle-ன் பின்புறம் உட்கார்ந்தான் மொக்கை..

அங்கிருந்து கிழக்கால உள்ள சொக்கன் வீட்டிற்க்கு சென்று cycle-ஐ நிறுத்தினர்
எம்புட்டு நேரமா நிக்கிறது, என்றான் சொக்கன்

நான் எங்கடா நேரமாக்குன , இந்த மொக்க தாண்டா முகத்துல பவுடர போடுறான், போடுறான் போட்டுக்கிட்டே இருக்காம்டா, என்றான் அழகர்

உனக்கென்ன பொண்ணா பாக்க போறாங்க, பள்ளிக்கூடத்துக்கு தானடா போறோம், என்றான் சொக்கன்.

சரி , உட்காறுடா, நேரமாச்சுனா வாத்தி கத்துவான்டா....

வகுப்பறையில்,

டேய், பசங்களா இன்னிக்கு உங்களுக்கு புஷ்தகம், சட்டத்துணியெல்லாம் வந்துருக்குடா...

எல்லாருக்கும் இருக்கா SIR, என்றான் சொக்கன்...

இல்லடா பைய்யா, இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான்டா...
ஏன் SIR அவைங்களுக்கு கிடையாது...?, என்றான் மொக்கை

அரசாங்கம் அப்படித்தான்டா சொல்லிருக்கு, என்றார் ஆசிரியர்

மதிய உணவு இடைவேளையில்,

டேய் சொக்கா என்னடா இன்னிக்கு சாப்பாடு என கேட்டான் அழகர்,

எங்க ஆத்தா பழைய சோறும், வெங்காயமும் வச்சு கொடுத்ததுடா....

இன்னிக்குமாடா...! என்றான் அழகர்...

தண்ணிகுடிக்க கிணற்றடிக்கு போகலாம் வாங்க, என்றான் சொக்கன்.

கிணத்தில் ஏறி நின்று அழகர், டேய் கிணத்துல்ல வாளீ இருக்கு கைத்த காணோம்டா...

சரி, நான் போய் எடுத்துட்டு வரேன், என்றான் சொக்கன்...

டிஷ்ஷ்.....ஆஆஆஆஆ........டிஷ்ஷ்ஷ்.......ஆஆ,படபட........

கிணற்றில் தவறி விழுந்தான், அழகர்.....

(சட்டென்று பதற்றத்துடன்) டேய் அழகரு என்ன்னாசுடா, என்று கிணற்றை எட்டி பார்த்தான் மொக்கை.....

அழகரு கிணத்துல விழுந்துட்டான், யாராவது வாங்களேன்....... யாராவது வாங்களேன்.., என்றான் மொக்கை...

சுற்றி பள்ளி மாணவர்களை தவிர வேறு எந்த பெரியவர்களும் இல்லை.........

கத்தி..கத்தி..பார்த்து....நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசத்தில் கிணற்றில் மொக்கையும் விழுந்தான்...

சிறிது நேரத்திற்கு பிறகு,

கிணற்றில் விழுந்தவர்கள் பிணமாக தரையில்..., அவர்களை சுற்றி கிராம மக்களுடன் மொக்கை மற்றும் அழகரின் பெற்றோர்களும், சொக்கனும்.... 
 
கண்ட சாதி கார பயகளோட சுத்தாத, சேராதன்னு எவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி சாய்ந்து கெடக்குரேயெடா.,என்றாள் அழகரின் அம்மா...
 
பக்கத்தில் இருந்த மொக்கையின் அம்மா, எங்க சாதிய பததியாடீ குறைவா பேசுற என்று ஒரு பெரிய கலவரமே நடந்தது பிணற்றின் முன்பு.......
 
என் பிள்ளை, என் பிள்ளை என்று தனித்தனியாக அழுது புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த கணத்தில், என் நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்...
 
அங்கே சாதி என்னும் தீ மறைந்து, நட்பு என்னும் தீ கொழுந்தாய் பற்றி எறிந்து கொண்டிருந்தது.

14 comments:

புலவன் புலிகேசி said...

//நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்...

அங்கே சாதி என்னும் தீ மறைந்து, நட்பு என்னும் தீ கொழுந்தாய் பற்றி எறிந்து கொண்டிருந்தது. //

நன்றாக இருக்கிறது. ஆனால் விளக்கிய விதம் கொஞ்சம் சருக்கல்.....

க.பாலாசி said...

உங்களின் கதையினை மிக ரசித்தேன். மனிதநேயத்தை மட்டும் விதைக்க வேண்டிய மாணவர்களுக்கு சில நேரங்களில் ஆசிரியர்களும், பெற்றோர்களுமே சாதி என்ற சாயத்தினையும் விதைத்துவிடுகின்றனர். வருந்ததக்க செயல்.

நல்ல கதை....

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்!! :-)

வானம்பாடிகள் said...

அருமைங்க ஊடகன்.

வால்பையன் said...

கதைக்கரு ஒகே!

கதைக்களம் தான் ரொம்ப இடறுது!
நாலு கோணத்துல எழுதி பாருங்க தல!
எதாவது ஒன்னு உலகத்தரத்தில் வரும்!

பிரபாகர் said...

ஊடகன், நாளுக்கு நாள் மெருகேறிகிட்டே வருது. SIR, Cycle போன்றவற்றுக்கு சார், சைக்கிள் என்று எழுதலாமே?

மிக நன்று நண்பா...

பிரபாகர்.

manwholara said...

super boss, kindly continue like short story

முனைவர்.இரா.குணசீலன் said...

என் பிள்ளை, என் பிள்ளை என்று தனித்தனியாக அழுது புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த கணத்தில், என் நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்...

அங்கே சாதி என்னும் தீ மறைந்து, நட்பு என்னும் தீ கொழுந்தாய் பற்றி எறிந்து கொண்டிருந்தது.
சவுக்கால் அடித்தது போல நறுக்கென்று சொன்னீர்கள்...
நன்று நண்பரே...

Anonymous said...

arumai nanbarey !

ஊடகன் said...

நன்றி புலவன் புலிகேசி, க.பாலாசி, சந்தனமுல்லை, வால்பையன், பிரபாகர், முனைவர்.இரா.குணசீலன், manwholara, Anonymous

உங்களுடைய பாராட்டுகளுக்கும், அறிவுரைகளுக்கும் நன்றி.......
இந்த சிறுகதை என்னுடுடைய புதிய முயற்சி தான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.....

வெண்ணிற இரவுகள்....! said...

//என் பிள்ளை, என் பிள்ளை என்று தனித்தனியாக அழுது புலம்பி சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த கணத்தில், என் நண்பர்கள் என்று இருவரையும் கட்டியனைத்து அழுது கொண்டிருந்தான் சொக்கன்... //
ஆம் அவர்கள் எல்லாமே நட்பு ஜாதி ...........நட்பு என்னும் பூக்களுக்குள் எதற்கு திணிக்கிறார்கள் ஜாதி முட்களை..........

க.பாலாசி said...

ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் நண்பரே....வாருங்கள்...என் பக்கம்...

ஊடகன் said...

கண்டிப்பா தலைவா.........!

இன்றைய கவிதை said...

சிறுவர்களைப் பற்றியதென்றாலும்
நினைப்பில் சிறிசில்லை!
மிகப் பெரிது!!

உண்மைதான் நண்பரே!
நட்புக்கு(ம்) ஜாதி இல்லை!!

-கேயார்