இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...
இதுவரை நாம் மொழி பிறந்த வரலாற்றையும், அது உலகலவில் பரவி புது மொழியாக உருவெடுத்த கதையையும் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியை இங்கே விவாதிப்போம்.
இன்று எமது தாயகத்தில் அனைத்து தர மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட மொழி ஆங்கிலம், ஆதலாலே அனைவரும் தாய்மொழிக்கல்வியை விட்டு அந்நிய மொழியான ஆங்கிலவழிக்கல்வியை தேடி போகிறார்கள்.
பணக்காரன் முதல் ஏழை வரை அந்நிய மொழிவழிக்கல்வியை தேடி போகிறார்கள். ஒரு சில தினக்கூலிகளும், ஒருவேளை சாப்பாடுக்கே வழியில்லாதர்வர்கள் தான் தாய் மொழிவழிக்கல்வியை நாடுகிறார்கள். ஏனெனில் அந்த தாய் மொழிவழிக்கல்வி தான் அரசின் கட்டுப்பாட்டில் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இன்று தாய்மொழியில் பேசுவதை அவமானமாக மற்றும் இழிவாக கருதுகிறார்கள் நம்மவர்கள். ஆங்கில மொழியில் பேசுவதையே நாகரிகமாக கருதுகிறார்கள்.
இன்று ஒரு சிலர் வீட்டிலும் ஆங்கிலத்திலே பேசுகிறார்கள், நாளை அவர்களுடைய சந்ததியினரும் இந்த ஆங்கிலத்தையே பேசுவார்கள்.
அடுத்த நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆங்கில மொழி தான் பேசப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
பல நூறு மொழிகள் கொண்ட இந்த நாட்டில் மற்றும் மிக சில தொன்மையான மொழிகள் பேசப்பட்டு வந்த இந்த இந்தியாவில் வரும்காலத்தில் ஒரே மொழியாம் ஆங்கிலம் தான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இந்தியா மொழிகள அழிவை நோக்கிபோகிறது. ஆம்....!
எமது தாய் மொழி தமிழும் அழிவையே தேடி போகிறது, தமிழர்களையே அழிக்கும் போது தமிழ் மொழியை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா....?
"தமிழ் இனி மெல்லச் சாகும்" தமிழ்ப் புலவன் பாரதி கூறியது,
"எம் தாயக மொழிகளும் இனி மெல்லச் சாகும்" உங்களில் ஒருவன் ஊடகன் கூறுவது....!
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியா USI(United States Of India) ஆக மாறலாம், அப்போது அனைத்து மக்களும் ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கலாம்.....
Wednesday, October 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//ஆனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாய், தாய் மொழி மறந்து ஆங்கில மொழி புரியாதவர்களாய்(அதாவது மீண்டும் ஆதிமனிதனாய்)... //
உண்மைதான் நண்பரே...என் நண்பன் ஒருவனிடம் உணவருந்த செல்லலாமா? எனக் கேட்டபோது சக நண்பர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்த அனுபவம் எனக்குண்டு...தமிழினி மெல்லச் சாகும்..
//என் நண்பன் ஒருவனிடம் உணவருந்த செல்லலாமா? எனக் கேட்டபோது சக நண்பர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்த அனுபவம் எனக்குண்டு//
எனக்கும் தான்.......!
ஆம் தமிழ் கலாச்சாரமும் இனி சாகும் ....இங்கே jockey ஜட்டி போடுபவனே அறிவாளி ...
எத்தனை வெயில் அடித்தாலும் நாம் formal dress போட்டு கொள்வோம் ...........................நமக்கு தகுந்த உடை வேட்டி சட்டை ................நாம் வணக்கம் சொல்வதில்லை "Hai" சொல்கிறோம் ......
என் நண்பன் லங்கோடு அணியும் பழக்கம் உள்ளவன் ............................
அவனை எவளவு கிண்டல் செய்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும் .......
நமக்குள்ளே இனும் அடிமை ஒளிந்து கொண்டிருக்கிறான்
கவலைப்படாதிங்க!
சமச்சீர் கல்வி வருது, அதனால் ஆங்கில மொழி இரண்டாம் மொழியாக தான் எடுத்துக்கொள்ளப்படும்!
தமிழை எவனாலும் அழிக்கமுடியாது!
தமிழ் உலகம் முழுவதும் பரவிகிடக்கிறது!
மேலும் வளர்க்க என்ன வழி என்று யோசிப்பதே சிறந்தது! இப்படி அழியப்போகுதுன்னு புலம்பி தள்ளவது ல்ல!
//என் நண்பன் லங்கோடு அணியும் பழக்கம் உள்ளவன் ....
அவனை எவளவு கிண்டல் செய்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும் .......//
இந்த சமுதாயம் கலாச்சார சீரழிவைத்தான் நாகரீகம் என்று கூறுகிறது.......
நமது பண்பாட்டை பின்பற்றினால் கேலி, கிண்டல் செய்கிறது.....!
என்ன மானம்கெட்ட பொழப்பு.......!
/ / சமச்சீர் கல்வி வருது, அதனால் ஆங்கில மொழி இரண்டாம் மொழியாக தான் எடுத்துக்கொள்ளப்படும்! / /
நடந்தால் மகிழ்ச்சி..........!
/ / தமிழ் உலகம் முழுவதும் பரவிகிடக்கிறது! / /
அங்கேயும் வேற்று மொழி பேசுபவனாய்.....!
தமிழை யாராலும் அளிக்க முடியாதுங்க..மனுஷ இனம் இருக்கும் வரை தமிழ் இருக்கும்..
அன்புடன்,
அம்மு.
// தமிழை யாராலும் அளிக்க முடியாதுங்க..மனுஷ இனம் இருக்கும் வரை தமிழ் இருக்கும்.. //
அப்படி நடந்தால் மகிழ்ச்சியே..........!
முதல் முறையாக உங்கள் பதிவிற்கு வந்திருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அதற்காக ஒரு “ஹலோ”
முழு பதிவையும் பொறுமையாக படித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.
//முதல் முறையாக உங்கள் பதிவிற்கு வந்திருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அதற்காக ஒரு “ஹலோ”
முழு பதிவையும் பொறுமையாக படித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.//
வணக்கம் அன்பரே.....!
படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்........
நன்றி.....
முதல் முறையாக உங்கள் பதிவிற்கு வந்திருக்கின்றேன் , உங்கள் மொழிப்பற்று அருமை
முதல் முறையாக தங்களின் கருத்துக்களைப் படித்தேன். மிகவும் நன்று. உண்மைகளை கூறுகின்றீர். ஆனால் தங்களின் எண்ணங்களை சொல்லுகின்றீர், நல்லது அவற்றை கொஞ்சம் நயம்பட உரைத்தல் நன்று. தாங்கள் பதிவில் எழுதுகின்றிர் என்பதையும் ஒரு ரிட்டன் எவிடென்ஸ் கொடுக்கிறிர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைப் போல் நடுத்தர வர்க்க படித்தவர்கள் எல்லாரும் அரசியல்வியாதிகளின் கணக்கில் டீக்கடை கிராக்கிகள் ஆவேம். டீக்கடையில் உக்காந்து வீரமாக பேசிவிட்டு பிரச்சனை என்றால் ஓடிவிடுவேம். நாளை பதிவில் எதாது பிரச்சனை என்றால் எந்த பதிவரும் உடன் வரமாட்டார்கள். இன்று வீர ஆவேசமாக அரசியல் எழுதும் பதிவர்கள் எல்லாம் பெயரை மறைத்துக் கொண்டும், அயல் மண்ணில் வாழ்ந்துகொண்டும் தைரியமாக திட்டுகின்றார்கள். ஆகவே சென்னையில் இருக்கும் நீங்க கொஞ்சம் நடையில் கவனம் செலுத்துங்க. அரசியல் எழுதும் போது கொஞ்சம் நாசுக்காய் எழுதவும். இது தங்களின் மீது உள்ள நல்ல எண்ணத்தில் கூறப் பட்டதாக எடுத்துக் கொள்ளவும். தவறு இருப்பின் மன்னிக்கவும். தொடர்ந்து எழுதுங்கள் படிக்கின்றேம்.
//
அரசியல் எழுதும் போது கொஞ்சம் நாசுக்காய் எழுதவும். இது தங்களின் மீது உள்ள நல்ல எண்ணத்தில் கூறப் பட்டதாக எடுத்துக் கொள்ளவும்
//
ஐயா, என் மேல் அக்கரை கொண்டு எனக்கு அறிவுருதியதற்கு முதலில் நன்றீ........
தங்களுடைய வலைப்பதிவையும் படித்தேன்( நன்று)....
தங்களுடைய வலைப்பதிவில் பித்தனின் வாக்கு தலைப்பின் கீழ் துணை தலைப்பை படித்தேன்(பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் ! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன் !)....
நீங்கள் சொவது போலேயே நான் பொய்யை சொல்ல கவிஞன் அல்ல, உண்மையை ஆழமாக சொல்லும் பித்தன்.......
//
முதல் முறையாக உங்கள் பதிவிற்கு வந்திருக்கின்றேன் , உங்கள் மொழிப்பற்று அருமை
//
நன்றி தோழா..........
Post a Comment