Saturday, October 10, 2009

இளந்(இழந்த)தமிழன்

இன்று.........,

அது ஒரு மழைக்காலம்....

வழக்கம் போலல்லாமல் சற்று தாமதமாக என்னோட ஆபிசுக்கு அன்று காலை 11.30 மணிக்கு போனேன்.....

என் சீட்டில் உட்கார்ந்தவுடன், அருகில் உள்ள போன் மணி ஒலித்தது, போனை எடுத்து பேசினேன்...

இன்று Recruitment உள்ளதாகவும் , நான் தான் Interview எடுக்க வேண்டும் எனவும் எனது மேனேஜர் கேட்டுக்கொண்டார்.....

அதன் பெயரில் உடனே Interview அறைக்கு சென்றேன்,

அங்கு மூன்று பேர் Interview க்காக அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்....

Interview அறையில் உட்கார்ந்தவுடன், HR ஐ அழைத்து முதல் Candidatai வரசொல்லுங்கள் என்றேன்.....

முதல் Candidate எனதறைக்கு வந்தான்,

அவனை உட்கார சொன்னேன்,

அவனிடம், "Tell About Yourself" என்றேன்....

அவன் ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி தன்னைப்பற்றி சொன்னான், சொல்லியும் முடித்தான்...

பிறகு சில Technical Question's கேட்டேன், ஒரு சிலவற்றை தவிர பெரிய பதில்களுக்கு தடுமாறியே பதில் சொல்லிகொண்டிருந்தான்...

அவனுடைய பதிலிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன், அவனுக்கு Answer தெரிந்தும் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததால் தடுமாறுகிறான் என்று...

இங்கிலீஷ் பேச அவன் தடுமாறுவதை கண்டு என் மனம் உருகியது..

ஆதலால் அவனுக்கு சில Programs' ஐ எழுத கொடுத்து, எழுத சொன்னேன்....

அவன் எழுதி கொண்டிருந்த அந்த இடைப்பட்ட நேரத்தில்,

நான் காலத்தை சற்று பின்னோக்கி எனக்குள் நானாக மூழ்கினேன்...

சில வருடங்களுக்கு முன்,

அன்று.........,
என் பெயர் தமிழ்செல்வன்....

நான் மதுரையில் மேலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவன்...

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் தமிழ்வழிக்கல்வியில் தான் படித்தேன்..

எனக்கொரு ஆசை, இந்தியாவோட Bilgates ஆகனும்னு....

நான் +2 - ல மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தேன்...

அப்போ எனக்கு கிடைச்ச Doctor படிப்ப விட்டுட்டு, எனக்கு பிடிச்ச Computer படிப்ப, பாளையம்கோட்டை AnnaUniversity - ல Computer Engineering படிச்சேன்........

நான் தமிழ் மீடியத்துல படிச்சதால ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சுதான் 89% எடுத்து கல்லூரி வாழ்க்கையை முடித்தேன்....

படித்து முடித்து வேலைதேடி இந்த சிங்கார சென்னையில் உள்ள திருவல்லிகேனியில் என் நண்பனின் மூலமாக ஒரு Mansion இல் தங்கினேன்...

Interview Attend பண்ணுவதற்காக ஒரு நாள் காலை ரெடி ஆகினேன், Interview போகும் போகும் போது ஷூ போட்டுப்போக வேண்டும் என என்பன் கூறினான், ஷூ என்னிடம் இல்லாததால் அவனிடம் வாங்கி அணிந்து கொண்டு அவசரமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு MNC Company க்கு சென்றேன்.

எனக்கு முன்பாக ஏழு பேர் Interview அறையில் காத்திருந்தனர்...

எனது விழிகள் இரண்டும் அந்த Company-இன் அழகை ரசித்து கொண்டிருந்தது ...

எனக்குள் ஒரு சின்ன பயம் கலந்த படப்படப்பும் இருந்தது....

அங்கு வந்திருந்தவர்கள் நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷ் பேசிக்கொண்டிருந்தனர்...

இந்த Company-இல் எப்படியும் வேலைக்கிடைத்துவிடும் என்ற கனவோடு, எனக்குள் பல ஆசைகளும் லட்சியங்களும் ஓடிக்கொண்டிருந்தது.....

HR வந்து என்னை Interview அறையினுள் அழைத்து சென்றார்....

அங்கே எனக்கு கேள்விகள் சரமாறியாக கேட்கககப்பட்டது, அனைத்திற்கும் பதில் தெரிந்தும் இங்கிலீஷ் தெரியாததால் என்னால் சொல்லமுடியவில்லை...

பெருத்த சோகத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்....

இந்த இழப்பு, சோகம் எனக்கும் மட்டும் ஏற்ப்பட்டது அல்ல, இந்த தமிழ்நாட்டில் உள்ள பல இளந்தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட பேரிழப்பு ...

இந்த மாதிரி எத்தனை பேர் தகுதி இருந்தும் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் தோத்துப்போகிருப்பார்கள்...

இந்த மாதிரி எத்தனை தகுதியுள்ள Bilgatesஐ இந்தியா இழந்திருக்கும்...
 
இன்று.........,

"முடிச்சிட்டேன் SIR",  என்று அந்த பையன் என்னை அழைத்தான்...

நானும் என் கனவில் இருந்து மீண்டு அந்த பையன் எழுதிய தாளை வாங்கி பார்த்தேன்...ஒவ்வொன்றுக்கும் பதில் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருந்தான்....

அவனை பாராட்டி, வேலைக்கு தேர்வு செய்துவிட்டேன்....!

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதை வடிவத்தில் எழுதியுள்ளேன்

15 comments:

கலையரசன் said...

இன்னம் கொஞ்சம் த்ரில்ங் + சென்டிமெண்ட் கலந்து எழுதியிருக்கலாம்!
இருந்தாலும் நல்லா இருந்தது!

வெண்ணிற இரவுகள்....! said...

//Interview Attend பண்ணுவதற்காக ஒரு நாள் காலை ரெடி ஆகினேன், Interview போகும் போகும் போது ஷூ போட்டுப்போக வேண்டும் என என்பன் கூறினான், ஷூ என்னிடம் இல்லாததால் அவனிடம் வாங்கி அணிந்து கொண்டு அவசரமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு MNC Company க்கு சென்றேன்.//
வறுமையை இந்த அளவு அழகாக சொல்ல முடியாது .............
கதை எழுத வாழ்த்துக்கள் நிறைய எதிர் பார்கிறேன் ......

வெண்ணிற இரவுகள்....! said...

மொழி என்ற தலைப்பிற்கு பிறகு அதற்கு ஒரு நல்ல கதை நல்ல உத்தி
நீங்கள் பதிவுலகில் trend setter...ஒவ்வொரு பதிவும் முன்னாள் உள்ள பதிவுடன் ஏதோ
தொடர்பு இருக்கிறது நல்ல உத்தி

ஊடகன் said...

//மொழி என்ற தலைப்பிற்கு பிறகு அதற்கு ஒரு நல்ல கதை நல்ல உத்தி
நீங்கள் பதிவுலகில் trend setter...ஒவ்வொரு பதிவும் முன்னாள் உள்ள பதிவுடன் ஏதோ
தொடர்பு இருக்கிறது நல்ல உத்தி//

நன்றீ தோழா........!
அடுத்து வரும் என்னுடைய அனைத்து பதிவும் இப்படிதான் இருக்கும்.......!

//இன்னம் கொஞ்சம் த்ரில்ங் + சென்டிமெண்ட் கலந்து எழுதியிருக்கலாம்!
இருந்தாலும் நல்லா இருந்தது!//

நன்றீ........!
குறைகளை ஏற்று அடுத்து வரும் பதிவில் தீர்க்கிறேன்....!

திருப்பூர் மணி Tirupur mani said...

//அவனுடைய பதிலிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன், அவனுக்கு Answer தெரிந்தும் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாததால் தடுமாறுகிறான் என்று...//


பிரித்தானியன் விட்டுச்சென்ற
ஆங்கிலம் இன்று பாடாய் படுத்துகிறது.


நல்லதொரு புனைவு!

மலரகம்(நாகங்குயில்) said...

நண்பரே ...
உங்கள் வலைப்பூ பார்த்தேன்., தமிழ் மேல் உள்ள பற்று அதில் நன்றாக தெரிகிறது.
வாழ்த்துக்கள் சார்.
அருமையான பதிவு

மலரகம்(நாகங்குயில்) said...

எனது பின்னுட்டம் ., உங்கள் முந்தைய பதிவிற்கானது.,
தவறாக இணைத்து விட்டேன்.
உண்மை தான் , ஆங்கிலம் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருப்பது உண்மை

முகமூடியணிந்த பேனா!! said...

நிறைய இடங்கள் தொடுகிறது சிந்தனைகளை....

அருமை.

புலவன் புலிகேசி said...

நன்று நண்பரே..........உங்கள் பதிவிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டேன். தமிழ் இனி நிச்சயம் சாகும் என்று.......ஆங்கில வார்த்தைகளை தமிழில் பெயர்த்து எழுதியிருக்கலாம்...........இப்பிடித்தான் தமிழ் நோய் பட்டுக் கிடக்கிறது..........

ஊடகன் said...

நன்றி முகமூடியணிந்த பேனா, மலரகம்(நாகங்குயில்) , திருப்பூர் மணி, புலவன் புலிகேசி.........

//
புலவன் புலிகேசி :
ஆங்கில வார்த்தைகளை தமிழில் பெயர்த்து எழுதியிருக்கலாம்.....இப்பிடித்தான் தமிழ் நோய் பட்டுக் கிடக்கிறது....//

ஐயா , தமிழகத்தில் அனைவரும் இவ்வாறாகத்தான் தமிழை ஆங்கிலத்துடன் கலந்து பேசுகிறார்கள்.... அந்த நடையிலே ஒரு யதார்த்த கதையை எழுதியுள்ளேன்....... நீங்கள் கூறுவது போல பச்சை தமிழில் கதை எழுத எனக்கும் ஆசை தான்.....
தமிழுடன் கலந்த ஆங்கில பேச்சு தான் இன்று வழமையான வாழ்க்கையாகிவிட்டது , அதையே இங்கு எழுதியுள்ளேன்........ இது மாற வேண்டும் என்பது தான் என் அவாவும்.......!

பிரபாகர் said...

நண்பா.... அழகாய் எழுதியிருக்கிறீர்கள். நிறைய எழுதுங்கள். நடை இன்னும் மேம்படும். வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு சிந்தனை தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

தன்னிலை மறக்காத அவர் மேன்மை பொருந்தியவரே.இதை அனைவரும் உணரனும்

கவிதை(கள்) said...

நல்ல பதிவு

நல்ல சிந்தனை

நிறைய எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

வானம்பாடிகள் said...

ஆங்கிலம் தெர்ந்ததாக நம்மவர் பேசும் ஆங்கிலம் ஆங்கிலமே அல்ல. இலக்கணப்படி சரியாக இருப்பினும் உச்சரிப்பு, மாடுலேஷன் எல்லாம் அபத்தம். இதை வைத்துக்கொண்டு அடுத்தவன் வாழ்வை நிர்ணயிக்கும் கொடுமை சொல்லி மாளாது. நல்ல இடுகை.