பெரும் வளத்தை கொண்ட நாடு நம் இந்தியா. அந்த காரணத்தினாலே முதன் முதலில் போர்சுக்கிசியார்கள் இந்தியாவினுள் நுழைந்தார்கள். மார்க்கொபோலாவின் கூற்றின் பெயரில் வாஸ்கோடகாமா இந்தியாவினுள் கடல் வழியாக வந்தடைந்தார். இங்குள்ள செல்வ வளத்தை நோட்டம் செய்துவிட்டு தனது சகாக்களையும் அழைத்து வணிகம் செய்தார்.
இதே போல் டெனியர்கள், மங்கோலியர்கள், முகலாயர்கள் மற்றும் டச்சுகாரர்கள் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். இதனால் இந்தியாவினுள் அவர்களுடைய மொழிகள் ஆங்காங்கே பரவின. இவர்களுக்குள் கோஸ்டி மோதலில் காரணமாக இவர்கள் எவரும் நிலையாக தங்கவில்லை.
இவர்களுக்கு பின் வந்த பிரேன்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பல ஆண்டு காலம் நிலையாக இருந்து அவர்களுக்கு தேவையான வளத்தை பெற்று கொண்டு செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுடைய மொழிகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் சரளமாக இந்தியாவினுள் நுழைந்தது.
ஆங்கிலேயர்கள் கோல்கத்தா, மும்பை, சென்னை, ஆகிய 3 மாநிலப்பகுதிகளில்தான் நேரடியாக அட்சி செய்தார்கள். இதன் காரணமாக 300 ஆன்டுகளாகவே ஆங்கில மொழியின் தாக்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் விரைந்து வளர்ந்தது.மற்ற வட மாநிலங்கள் ஆங்கில வாடையே இல்லாமல் சித்றிக்கிடந்தன. இதன் காரணமாகவே தொழில்துறையும் வடக்கே வளரவில்லை. ஹிந்தி மொழியை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையும் ஆங்கிலேயரையே சாரும்.
உருது மொழி ஏற்கனவே முகலாயர் ஆட்சியில் ஆட்சி மொழியாக இருந்தது. வடக்கே, பேசும் ஹிந்தி, மற்றும் உருது மொழிக்ளைச் சேர்த்து ஹிந்துச்தானி என்று ராணுவ்த்தின் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினார்கள். உருது மொழி தோன்றியது அரபி, ஹிந்தி, பெர்சிய மொழிகளின் கலப்பு. அக்பர்காலத்தில் உருவாக்கப் பெற்றது.
எம் தாய் மொழி தமிழ் பேசி திராவிட நாடு என்றிருந்த எமது தமிழகத்தை கூறுப்போட்டு கன்னட, ஆந்திர மற்றும் கேரளாவாக ஆக்கினார்கள். இங்கே தமிழ் மொழி மூன்று மொழிகளை உருவாக்கியது. இதனாலே இன்று காவேரி, முல்லை பெரியார் அணை, கிருஷ்ணா நீர் போன்ற பிரச்சினைகள் வளர்ந்தது.
நமது தேசத்தில் அதிகபட்ச மக்களால் பேசப்பட்டு வரும் மொழி ஹிந்தி தான்.நம் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினவங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப ஹிந்தி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு எம்.பி ஆவும் மந்திரியாவும் இருக்காங்க.ஹிந்தி எதிர்ப்பைக் கொண்டே ஆட்சியைப் பிடித்த அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாரிசுகளை, வாரிசுகளின் வாரிசுகளை பல மொழிகள் கற்க வைத்து புளங்காகிதம் அடைந்துள்ளனர். கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் தமிழ்! தமிழ்! என்று சொல்லி கொண்டு, அவரது குடும்பம் மட்டும் எல்லா மொழிகளிலும் படிப்பார்கள்.
இவர்களது கண்ணோட்டத்தில் மக்கள் எல்லோரும் மடையர்கள். நாங்கள் சொன்னதை என்றுமே செய்யமாட்டோம் என்ற நிஜத்தை மக்களுக்கு பல நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர். பாவம், இன்னும் பல தொண்டர்கள் இவர்களுக்காக தீக்குளிக்கத் தயாராக இருக்கும் நிலை உள்ளவரை இவர்கள் காட்டில் மழை தான். யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் ஓட்டுப் போட்ட மக்களைச் சொல்ல வேண்டும்.
தமிழை அதிக நேசித்த அரசியல் கோடீஸ்வரர்களுக்கு ஏன் எமது ஈழ தமிழர்கள் மீது அக்கரை இல்லை....?
ஆங்கிலத்தை இரண்டாவது பாட மொழியாக கற்க ஏற்று கொண்ட அரசு ஏன் நமது தேச மொழியான ஹிந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை....?
அப்படி இரண்டாவது பாட மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கிலமும் சரியாக பள்ளிகளில் கற்று தரப்படுகிறதா என்றால் இல்லை.
இதில் சமசீர்க்கல்வி வேறு வரப்போகிறதாம்( ஒரு மயிரும் பன்னமாடானுங்க ).........!
தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழியை தவிர ஆங்கிலத்தை சரியாக படிக்கவில்லை(முறையான ஆசிரியர் இல்லாத காரணத்தால் ).
ஹிந்தி மொழியை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு , ஏன் ஆங்கில மொழியை எதிர்க்க தெரியவில்லை...?
ஆங்கிலத்தை பெருமைக்காக நம் மக்கள் அங்கீகரிக்கிறார்கள் ஏன் தமிழ், ஹிந்தியை வெறுக்கிறார்கள்.ஜேர்மன், பிரான்ஸ், ரஷ்ய போன்ற வளர்ந்த நாடுகள் அவர்கள் நாட்டு மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இன்று ஆங்கிலம் தான் நம்மவர்களுக்கு பொது மொழியாக வந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு காரணம் என்று பார்த்தால் வணிகம் மற்றும் கணினி போன்ற அனைத்து துறையிலும் முதன்மையாக உள்ளார்கள். இதுவே அம்மொழி உலகளவிலும் , நமது தேசத்திலும் பரவியதற்கு காரணம்.
நாம் ஆங்கிலேயருக்கு முதலில் அடிமை, இப்போது ஆங்கிலத்துக்கு அடிமையா?
ஒரு அந்நிய மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், நம் நாட்டின் மொழிக்குக் கொடுக்கப் படாதது ஏன் என்று என்றாவது யோசித்ததுண்டா?
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை பொறுத்துதான் , அந்த நாட்டிலுள்ள மொழிகளும் மற்ற நாட்டினர்க்கு பரவும். இந்தியர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று சொல்லும்படி எதுவும் மற்ற நாட்டிடையே பரவாவதே இதற்க்கு காரணம்.
மற்ற நாடுகளில் மொழியே இல்லாத காலத்தில், இங்கே பெரும் புலவர்ககள் இருந்துள்ளனர். அந்த முன்னேற்றம் ஏன் இன்று இல்லை....?
கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி எமது தமிழ் மொழி. பின்பு ஏன் ஒரு கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை..? மற்ற மாநிலத்தவனை விட, மற்ற நாட்டினரை விட அதி புத்திசாலி நம் தமிழர்கள் தான் என்றால் மிகையல்ல. ஏனெனில் மற்றவன் கண்டெடுத்த ஒன்றை மிக அழகாக கற்றுகொல்பவன் அவனே...! ஆதலால் தான் நம்மவர்களை இன்றளவும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அமெரிக்கர்களை, சப்பானியர்கள் போன்றவர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டது. பின்பு ஏன் இங்கு பில்கேட்ஸ், எடிசன் போன்றவர்கள் இல்லை.
நம்மவர்கள் இருப்பதை வைத்து எப்படி முண்டியடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள்.
நான் ஆங்கிலத்தையும் , ஹிந்தியையும் எதிர்ப்பவனள்ள, மாறாக மிக பழமைமிக்க எம் தாய் மொழி ஏன் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என தினம் தினம் குமுருபவன்...!
ஹிந்தியை எதிர்க்க நான் கருணாநிதியும் அல்ல, ஆங்கிலத்தை எதிர்க்க ராமதாசும் அல்ல, நான் ஒரு ஊடகன்( உங்களில் ஒருவனாக அந்நிய மொழியால் பாதிக்கப்பட்டவன், நடப்பதை இந்த ஊடகத்தின் வழியாக சொல்லும் ஊடகன்).
நான் கூறியது அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. என் கூற்றை ஏற்று கொண்டால், இதை ஒரு கட்டுரையாக படிக்காமல் கருத்தாக ஏற்று கொண்டு, அல்லது படித்துவிட்டு அப்படியே விட்டுவிடாமல், சிந்தித்து, ஆராய்ந்து பற்பல சாதனைகளை புரிய வேண்டும்.
5 comments:
//உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அமெரிக்கர்களை, சப்பானியர்கள் போன்றவர்களை விட அதிக மக்கள் தொகை கொண்டது. பின்பு ஏன் இங்கு பில்கேட்ஸ், எடிசன் போன்றவர்கள் இல்லை. //
நண்பரே!!! நீங்கள் சொன்ன அனைவரும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அரசாங்கத்தால் முடக்கப் பட்டவர்களாய்...............
//நண்பரே!!! நீங்கள் சொன்ன அனைவரும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அரசாங்கத்தால் முடக்கப் பட்டவர்களாய்...............//
ஆமாம் நண்பரே....!
//தாய் மொழி வழியில் படித்த ஒவ்வொருவனும், தாய் மொழியை தவிர ஆங்கிலத்தை சரியாக படிக்கவில்லை(முறையான ஆசிரியர் இல்லாத காரணத்தால் )//
இந்த லச்சணத்தில் ஹிந்தியை மட்டும் எப்படி படிக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள். ஹிந்தி ஒரு மொழிதானே எப்பொழுது வேனாலும் கற்றுக்கொள்ளலாமே(அவசியம் ஏற்ப்பட்டால்) அதை கட்டாயமாக்குவதால் என்ன நண்மையை கொடுக்க முடியும். வேண்டும் என்றால் வடக்கே சென்று போர்வை விற்க முடியும். மன்னிக்கவும் நண்பா என் எண்ணங்களை சொல்லியுள்ளேன்
//ஹிந்தியை மட்டும் எப்படி படிக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்.//
நான் ஹிந்தி வேண்டும் என்று சொல்லவில்லை, நான் கேட்டது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் ஏன் ஆங்கிலத்தை எதிக்கவில்லை என்பதே நண்பரே.......!
ஆங்கிலம் உலக பொது மொழியானதால் எதிர்க்க முடியவில்லையென்று நினைக்கிறேன்!
Post a Comment