Tuesday, December 1, 2009

பலசரக்குக்கடை

திறமை என்பது மனிதனை தரம் பார்க்கக்கூடிய கருவி. அந்த கருவியை வைத்தே ஒருவனை அறிவுள்ளவன் மற்றும் அறிவற்றவன் என பிரிக்கப்படுகிறான்.

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்து வந்தேன். அப்போது, அந்த பகுதி எவரும் அறிந்திடப்படாத, எந்த வகையிலும் சிறப்பற்ற பகுதி. இன்று அந்த பகுதியை சுற்றிலும் மென்பொருள் நிறுவனங்கள், வங்கிகள், நட்சத்திர விடுதிகள், கடை வீதிகள் என ஏகப்பட்ட முன்னேற்றம்.

எங்களுடைய அன்றாட உணவுப்பொருள்கள் தேவைகளுக்காக அருகில் உள்ள அம்பாள் நகர் என்ற இடத்திலுள்ள ஒரு பிரபல பலசரக்குக்கடையில் தான் வாங்குவோம்.



பலசரக்குக்கடையுனுடைய முதலாளி வியாபாரத்தில் கெட்டிக்காரர். ஈக்காட்டுதாங்களை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இந்த கடையையே தேடி வருவார்கள். எல்லோரும் அவரை அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள். கடையில் வேலைக்கு இரண்டு பேர் வைத்திருந்தார்.

மாதமுதல் தேதி என்பதால், அந்த மாதத்திற்கு தேவையான மொத்த தேவைகளை அன்றே ஒட்டுமொத்த வாங்குவதற்காக ஒரு தாளில் பொருள்களை எழுதி அண்ணாச்சியிடம் கொடுத்தேன்.

"இன்னிக்கு சாயங்காலத்துக்குல்லார சரக்கை உங்க வீட்டுக்கு, கடைப்பையனை எடுத்திட்டு வரசொல்லிடுறேன்", என்றார் அண்ணாச்சி.

"சரிங்க அண்ணாச்சி", என்று வீட்டிற்க்கு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் கடந்தது, இன்னும் நான் பலசரக்குகடையில் நான் பதிவு செய்த பொருள்கள் வரவில்லை.

ஏன் வரவில்லை என கேட்ப்பதற்க்காக, கடைவீதிக்கு சென்றேன்.

"என்ன அண்ணாச்சி, பதிவு செய்த பொருள்கள், இரண்டு நாளாகியும் இன்னும் வரவில்லை..?", என்று வினவினேன்

மன்னிச்சுக்கோங்க Sir.....!,
சரக்கை எடுத்துட்டு வந்த பையன் கடைக்கு புதுசு, அதனால சைக்கிள்ள வரும் போது பொருள்களை கீழ போட்டு சேதமாக்கிட்டான்....

டேய் மாரி, இங்க வாடா... என்றார் அண்ணாச்சி

என்ன அண்ணாச்சி....,? என்றான் மாரி

இவன் வந்து ஒரு வாரம் ஆகுது, இன்னும் ஒரு வேலையும் உருப்படி இல்ல....!

இவனுக்கு இந்த மாதம் கூலியை நிப்பாட்டுனாதான் திருந்துவான்..

நேத்து ஒருத்தருக்கு மைதா மாவை கட்டுனா, கோல மாவைக்கட்டி கொடுத்துட்டான்...

"நீங்க போங்கய்யா.., நான் சுடலைய விட்டு பொருள்களை அனுப்பி வைக்குறேன்", என்றார் அண்ணாச்சி.

ஏன் இந்த அண்ணாச்சி, அந்த பையனை இப்படி ஏசுகிறார்...?

பலசரக்குக்கடைக்கு மாரி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது, அண்ணச்சி மற்றும் வேலையின் மேல் உள்ள பதட்டதினாலே, பொருள்களை சேதமாக்கிட்டான் என ஏன் அண்ணாச்சி என்னவில்லை...?

சுடலையும் இதே போல், பொருள்களை சேதமாக்கமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்...?

மாதக்கூலியை நிப்பாட்டினால், இவனை நம்பி இருக்கும் இவன் குடும்பம் என்ன ஆகும் என ஏன் அண்ணாச்சி யோசிக்கவில்லை...?, என்று எனக்குள் நானாக முனங்கிக்கொண்டு கிளம்பினேன்.

சில மாதங்களுக்கு முன்பு அதே பையன் மாரியை, சென்னை சாலிகிராமத்தில் ஒரு பலசரக்குக்கடையில் பார்த்தேன்.

"டேய் மாரி என்னடா இங்கே..?" என கேட்டேன்.

"இந்த பலசரக்குக்கடைக்கு முதலாளியாக இருக்கிறேன்...!" என்றான் மாரி...

பழைய முதலாளி அவனை வேலையைவிட்டு துரத்தியதாகவும் கூறினான்.

"எப்படி கடை போகிறது...?", என கேட்டேன்

"ரொம்ப நல்லா போகுதுய்யா..., இதே மாதிரி சென்னையில் மூணு இடத்துல கடை நல்லா போகுது...!" என்றான் மாரி

இதே மாரியை, ஒரு காலத்தில் உதவாக்கரை என ஒரு முதலாளி கூறினான், ஆனால் இன்றோ...?

அண்ணாச்சி, இந்த முதலாளி மாரியை தொழிலாளியாக இருக்கும் போது சரியாக
பயன்படுத்தியிருந்தால்......?

ஒரு பலசரக்குக்கடையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உபயோகமாக இருக்கும். அரிசியும் தேவை, உப்பும் தேவை....! அரிசியை விட உப்புதான் சிறந்தது எனவும், உப்பை விட அரிசி தான் சிறந்தது எனவும் தரம் பிரிக்க முடியாது. அதே போல தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் திறமையானவர்கள்.இந்த உலகதில் பிறந்த யவருமே முட்டாள்கள் இல்லை....

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு குரு,அவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதாவது ஒன்று இருக்கும். ஒவ்வொருவனுக்க்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும், சிலருக்கு வெளிச்சம் உடனே கிடைக்கும், பலருக்கு சில காலம் கடந்து கிடைக்கும்.

இது பலசரக்குக்கடைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்கும் பொதுவானதே.........!

15 comments:

புலவன் புலிகேசி said...

//இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு குரு,அவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதாவது ஒன்று இருக்கும். ஒவ்வொருவனுக்க்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும், சிலருக்கு வெளிச்சம் உடனே கிடைக்கும், பலருக்கு சில காலம் கடந்து கிடைக்கும்.//

நல்ல கருத்துதான்..

//இரண்டு நாட்கள் கடந்தது, இன்னும் நான் பலசரக்குகடையில் நான் பதிவு செய்த பொருள்கள் வரவில்லை.//

இரண்டு நாட்கள் கழித்துதான் பொருள் வர வில்லை என யோசிப்பீர்களா?

//அண்ணாச்சி, இந்த முதலாளி மாரியை தொழிலாளியாக இருக்கும் போது சரியாக
பயன்படுத்தியிருந்தால்......? //

ஒரு நல்ல தொழிலாளியாக மட்டுமே இருந்திருப்பான்..முதலாளியாகியிருக்க மாட்டான்.

எல்லாம் சரிதான் ஆனால் சொன்ன விதத்தில் நிறைய சறுக்கல்கள் இருப்பதாக தோன்றுகிறது..பல கோணங்களில் யோசித்தால் சிறந்த கதையாக உறுவெடுத்திருக்க வாய்ப்புள்ளது..

விழியில் விழுந்தவன் said...

//அதே போல தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் திறமையானவர்கள்.இந்த உலகதில் பிறந்த யவருமே முட்டாள்கள் இல்லை....//
its really true....good..

vasu balaji said...

ஒரு விதத்தில் மாரியின் முன்னேற்றத்திற்கு காரணமே முதலாளி எனத் தோன்றுகிறது. அவர் மனதளவில் தொழிலாளியாக இருக்கவில்லை எனப் படுகிறது. அந்த ஊக்கம் தந்த வெற்றி இது. அதே நேரம் முதலாளியின் வியாபாரத்தில் அவருக்கு இருந்த அக்கரையின்மையும் வெளிப்படுகிறது. நல்லா இருக்கு.

க.பாலாசி said...

//"ரொம்ப நல்லா போகுதுய்யா..., இதே மாதிரி சென்னையில் மூணு இடத்துல கடை நல்லா போகுது...!" என்றான் மாரி//

தன்னம்பிக்கையே வெற்றிதரும். அந்த பையனுக்கும் அது மிகைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

//அண்ணாச்சி, இந்த முதலாளி மாரியை தொழிலாளியாக இருக்கும் போது சரியாக
பயன்படுத்தியிருந்தால்......? //

மாரி தொழிலாளியாகவே இருந்திருப்பான்.

நல்ல இடுகை நண்பா...தொடருங்கள்....

Ashok D said...

புலிகேசியை வழிமொழிகிறேன்...

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல கட்டுரை ...நீங்கள் அதிகம் ராமகிருஷ்ணன் படிக்கிறீங்கன்னு நினைகின்றேன்

ஊடகன் said...

புலவன் புலிகேசி ம்ற்றும் D.R.Ashok விற்கு,

//இரண்டு நாட்கள் கழித்துதான் பொருள் வர வில்லை என யோசிப்பீர்களா?//

//எல்லாம் சரிதான் ஆனால் சொன்ன விதத்தில் நிறைய சறுக்கல்கள் இருப்பதாக தோன்றுகிறது..பல கோணங்களில் யோசித்தால் சிறந்த கதையாக உறுவெடுத்திருக்க வாய்ப்புள்ளது..//


நண்பர்களே,

இது கதை அல்ல, நிசம்.... ஆதலால் உண்மை நிகழ்வை என்னால் மாற்ற முடியாது....

ஒரு உண்மை நிகழ்வை கட்டுரை வடிவில் பிரதிபளித்துள்ளேன்....


நன்றி

புலவன் புலிகேசி
விழியில் விழுந்தவன்
சி.பாலாசி
வானம்பாடிகள்
வெண்ணிற இரவுகள்
D.R.Ashok

Anonymous said...

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது எல்லாருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை கண்டிப்பா இருக்கும்.... நல்ல பகிர்வுங்க..

இன்றைய கவிதை said...

கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு!
தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பு!
கனிவு வேண்டிய இடத்தில் கனிவு!

இவை இருக்கத்தான் வேண்டும் நண்பரே!
அண்ணாச்சி செய்ததில் தப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை!

அதனால்தானோ என்னவோ 'மாரி'யால் 'கெலிக்க' முடிந்தது!

-இன்றைய கவிதை அன்பர்கள்

தமிழ் உதயம் said...

உண்மைதான். இங்கே பல முதலாளிகள் தன்னிடம் வேலை பார்ப்பவன் பெரிய ஆளாய் வந்து விட்டால் என்ன செய்வது என்கிற கோணத்திலேயே முட்டாள்களாகவே வைத்து இருக்க விரும்புவார்கள். விபரம் உள்ளவன் வெளியேறி மாரியை போல் ஆவார்கள். ஏனையோர் அடிமையாகவே வாழ்ந்து முடிப்பார்கள்

ஹேமா said...

நல்லதொரு தன்னம்பிக்கை தரும் சம்பவம்.ஒவ்வொருவரையும் செதுக்க ஒரு சிற்பி தேவைப்படுகிறார்.

அகல்விளக்கு said...

தன்னம்பிக்கை தரும் பதிவு நண்பா...

krishna said...

Yes.........................

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பதிவு

அவரவர் பார்வையில் அவரவர் செய்தது சரி.

இது தான் வாழ்க்கை எதார்த்தம்.

இதுல யாரை குற்றம் சொல்ல.

இனியாள் said...

நல்ல கருத்து, நல்ல பதிவு. எங்கள் ஊரில்(திருநெல்வேலியில்) எல்லாம் இன்னும் நாங்கள் பலசர கடை என்றே குறிப்பிடுகிறோம், மளிகை கடை என்றால் அவ்வளவாக தெரியாது. இது ஒருவேளை கதையாக இருப்பின் கடைசியில் உள்ள பத்திகள் தேவை இல்லை என்பது என் கருத்து.