தினமும் என்னோடு, என் வாழ்க்கையோடு பயணிக்கிறவர்கள் எண்ணற்றோர். அவர்களுள் என்னை மிகவும் பாதித்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர்கள் எப்பொழுதும் என்னுடனே இருப்பவர்கள். எனனாலே அவர்கள் தினமும் பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தில் நானும் ஒரு காரணியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆம்...! அந்த இருவரைப்ப்ற்றிய கதையை தான், நான் இப்பொழுது உங்களுக்கு சொல்ல போகிறேன்.
"என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே, என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்", என பாடிக்கொண்டவாரே தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலான என்னில் பயணிக்கும் ஒரு கண்தெறியாத குருட்டுப் பாட்டுக்காரி, கயல் என்கிற கயல்விழி.
அன்று, திங்கள் கிழமை என்பதால், என்னுடைய வீட்டில் அலுவல் செல்லும் பயணிகளால் மிக நெரிசல். இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களின் கழுத்தையும், நின்றுக்கொண்டிருந்த ஆண்களின் பணப்பையையும் பதம் பார்த்தபடியே, என் மேல் எழுதப்பட்ட வாசகங்களை படித்தான் சொக்கு, அது..,
பயணிகளின் கவனத்திற்கு
******************************************
1.) திருடர்கள் ஜாக்கிரதை
2.) புகைப்பிடிக்காதீர்
3.) தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் ரூபாய்.500 வசூலிக்கப்படும்.
என்னில், தினமும் நெரிசலில் சிக்கி அலுவலகம் செல்லும் மக்களின் மூலமாக தன் வாழ்க்கைசக்கரத்தை ஓட்டும் ஒரு திருடன், சொக்கு என்கிற சொக்கலிங்கம்.
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் கூட்டம் இல்லாததால், வாசல் கதவோரமாக உட்கார்ந்திருந்த கயலிடம் தன் வேலையைக் காட்டினான். தன் விரிப்பில் உள்ள சில்லரைகளையும், ஐந்து, பத்து ரூபாய்களை எடுக்க முற்ப்பட்டுக் கையை நீட்டிய சொக்கனை பிடித்தாள், கயல்.
சட்டென்று தன் கையில் உள்ள கத்தியை வைத்து கயலின் கையை கீறினான் தப்பிக்க முயன்றான் சொக்கு. அதற்குள் அங்கு சுற்றியுள்ள மற்ற பிச்சைக்காரர்க்ள் சொக்கனை வலைத்துப் பிடித்தனர்.
"ஏண்டா கூருக்கெட்டவனே, அந்தப் புல்லையே பாட்டுப்பாடி பொழைக்குது அதுக்கிட்ட ஏண்டா உன் வேலையக் காட்டுர.." என்றாள் ஒரு பயணி.
"இப்படி உழைக்கரமக்கள்க் கிட்ட இருந்து, உடம்பு கூசாமா திருடி சாப்புட்டா உன் சாவுக்குக் கூட நாலு பேர் வரமாட்டாங்கடா...",
" இந்த பொழப்புக்கு, நீ பிச்சைஎடுக்கலான்டா படுபாவி ",
"காலனா சம்பாதிச்சாலும் வியர்வை சிந்தி உழைச்சி சாப்படுனுன்டா..."
எனக்கு கண்ணு தெரியிலனாலும் பாட்டுப்பாடி உழைச்சுதான்டா, பிழைப்பு நடத்துறேன்.
"ஆனால் நீ கை, கால், உடம்பு சரியா இருந்தும் கேவலம் அடுத்தவன் உழைப்ப திருடுறியேடா...", என அழுதுகொண்டே சொல்லி மயங்கி கீழே விழுந்தாள் கயல்.
அவளை தாங்கிப் பிடித்த சொக்கு, தன் சட்டையை கழற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்த கயலின் கையை கட்டிவிட்டு, மனம் நொந்து அங்கிருந்து சென்று விட்டான்.
சில நாட்களுக்கு பிறகு,
அதே என்னுடைய வீட்டிலே, கூட்ட நெரிசலில், "சுண்டல்..சுண்டல்...சூடா சுண்டல்....!" என்று கத்திக் கொண்டே சுண்டல் விற்றான் சொக்கு.
"கயலின் பாட்டுக் கேட்டு, சட்டென திரும்பிய சொக்கு", கயலை பார்த்தான்.
"தன் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கயலின் கையேந்திய விரிப்பில் போட்டான்", சொக்கு.. இது வழமையாக நடந்தது, தான் உழைத்து சம்பாதிக்கும் மொத்த பணத்தில் ஒரு பங்கை கயலுக்கு தினமும் கொடுத்தான். இந்த நிகழ்வு கயலுக்கு தெரியாது.
பண உதவி மட்டும் இல்லாமல், கயலுக்கு கண்ணாக இருந்தான் சொக்கு. இந்த அழகான உறவை விளக்க வார்த்தை இல்லை.
வியாழக் கிழமை காலை 8 மணி, சென்னை மாம்பலத்தை கடந்து நான் தாம்பரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் கதவோரமாக கயல் உட்கார்ந்து பாடிக்கொண்டே கையை ஏந்தி கொண்டிருந்தாள்.
அன்று கூட்ட நெரிசல் வழமைக்கு அதிகமாகவே காணப்பட்டது. மூச்சுவிடவே வழியில்லாமல் பயணிகள் தள்ளுமுள்ளாடிக்கொண்டிருந்தனர். அதில் சில பயணிகளின் இடிபாட்டால் கதவோரம் இருந்த கயலை கீழேத் தள்ளினர்.
ஆஆஆஆஆ.....ஆஆ........ என கத்திக்கொண்டே என் காலடி சக்கரத்தில் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிர் நீத்தாள்.
என்னால் தானே இன்று கயல் இறந்து விட்டாள். கயலின் வாழ்க்கையில் அவளுக்கு தெரியாமலேயே ஒரு அழியா இடம் சொக்குவிற்கு உண்டு. அந்த அழகான இடத்தையும், உறவையும் நான் நசுக்கி விட்டேனே...!
அவளை என் காலாலே மிதித்து, நசுக்கி கொன்று விட்டேன். இந்த கொலைக்கு எனக்கு என்ன தண்டனை தரப்போகிறது இந்த சமுதாயம்...?
பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
கதை நன்றாக உள்ளது...
வெற்றி பெற வாழ்த்துக்கள் தல...
நீங்கள் எழுதியதில் என்னை பொறுத்தவரை இதுதான் சிறந்த கதை...வெற்றி பெற வாழ்த்துக்கள்..
கதை நன்றாக வந்திருக்கிறது நண்பா...அந்த காட்சிகளை கண்முன் கொண்டுவந்த விதமும் ரசிக்கவைக்கிறது.
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
மின்சார இரயிலான என்னில் பயணிக்கும் ஒரு கண்தெறியாத குருட்டுப் பாட்டுக்காரி, கயல் என்கிற கயல்விழி........இந்த இடத்தில் இருந்து நெகிழ வைத்த நீங்கள், கதை முடிவில் அதிகமாய் நெகிழ வைத்து விட்டீர்கள். ரொம்ப நல்ல உணர்வுள்ள கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு பாஸ்..
அனுப்புங்க! கண்டிப்பா கிடைக்கும்!!
எத்தனையோ பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து போகிறார்கள். அதற்காக எந்த ரெயில் வருத்தப்பட்டு இருக்கிறது. முதல் முதலாக வருத்தப்பட்ட ரெயில். சிறந்த கதை. பாராட்டுக்கள்
பரிசு பெற வாழ்த்துகள். அருமையான ஓட்டம்.
கதை மிக சிறப்பாக உள்ளது. வெற்றி கிட்டும். வாழ்த்துக்கள்...
( தலைப்பில்... கவனத்திற்கு என்றிருக்க வேண்டும்... க் வரக்கூடாதுங்க)
arumaiyyana kadahi..nandri..pani thodarattum..
நல்ல தெளிவான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான வித்யாசமான சிந்தனை, அருமையான கதை ....
நல்ல படைப்பு .......வாழ்த்துக்கள்
Superb!
-Keyaar
அன்பின் ஊடகன்
ஒரு புகைவண்டி கதை சொல்வதாக எழுதியது அருமை. கயலும் சொக்குவும் - கதா பாத்திரங்களீன் சிந்தனை - இயல்பான செயல்கள் - அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
கடைசியில் நெஞ்சம் நெகிழ்கிறது - இணைப்பிற்கு ஒரு பாலமாக விளங்கும் என நினைத்த இரயில் பிரிவிற்குக் காரணமாக அமைந்த கொடுமை ..... என்ன செய்வது
நல்வாழ்த்துகள் ஊடகன்
நட்புடன் சீனா
பி.கு : எழுதுவதை நிறுத்தியது ஏன் - தொடர்க ஊடகன்
Post a Comment