Saturday, December 26, 2009

போர்க்களம்

ஆதி காலம் தொட்டே கருப்பர்களுக்கும் சிவப்பர்களுக்கும் இனவெறி பிரச்சனையால் பலமுறைப் போரிட்டுள்ளனர்..

ஆம்...! கருப்பின தலைவனின் மகனும், சிவப்பின தலைவனின் தமக்கையும் ஒருவரை ஒருவர் விரும்பினர். இந்த விருப்பத்தை அறிந்த இனவெறிப் பிடித்த சிவிப்பன தலைவன் கருப்பின தலைவனின் மகனை கொலை செய்தான்.


சில காலங்களுக்கு பிறகு,

கி.பி.1919 ஆம் வருடம், கார்த்திகை மாதம்., வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது, ஊடகங்களில் மழை வர வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆதலால் மக்கள் வழமைப்போல் கடைவீதியிலும், சாலைகளிலும் திரிந்துகொண்டிருந்தனர்.

ஆனால் இன்று மழை வரும் என்று முன்பே அறிந்த கருப்பர்களும், சிவப்பர்களும் அடைமழையிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கடைவீதியில் உள்ள ஒரு பெரிய இனிப்பகத்தில் முகாமிட்டனர்.

மழைக்காலம் என்பதால், எதிர் வரும் நாட்களுக்காக உணவுப்பொருள்களை சேமித்துக் கொள்ளும்படி கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் அறிக்கையிட்டனர்.

தலைவனின் கட்டளையை ஏற்று, இரு இனத்தவர்களும் தங்களின் குடும்பத்துக்காக உணவுப்பொருள்களை சேமிக்க தொடங்கினர்.

அன்று தான் இனிப்பகத்தில் வகைவகையாக, புதுமாதிரியான இனிப்புகள் விற்பனைக்காக தரையிரக்கப்பட்டிருந்தது. அதே கணத்தில் கடையின் முதலாளி சற்று கண் மூடிய நேரத்தில் கருப்பர்களில் பலரும், சிவப்பர்களில் சிலரும் அந்த இனிப்புகளை களவாட தொடங்கினர். இந்த களவாடலில் இரு இனத்தவர்களுக்கும் சிறுமோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் சிவப்பின தலைவனின் தமக்கையின் கால் முறிந்து போனது. இந்த சலசலப்பால், கண் திறந்த முதலாளி மோதலை தடுத்து அவர்களை அங்கிருந்து விரட்டினார்.

"களவானி கூட்டங்க....!, இவங்களை எவ்வளவு விரட்டியும், அடித்தும் திருந்தவே மாட்டுராங்க,...." , என கடையின் முதலாளி மனதுக்குள் முனுமுனுத்தார்.

தன் தமக்கையின் கால் முறிந்த சேதி கேட்ட சிவப்பன், கருப்பர்களை அழிக்க போருக்கு ஆயத்தம் ஆகும் படி தன் சகாக்களுக்கு கட்டளையிட்டான்.

கருப்பர்களும் போருக்கு தயாரானார்கள். இந்த முறை எப்படியாவது சிவப்பர்களை பழிதீர்த்து விடவேண்டும் என எண்ணி, தன் மக்களை வேண்டினான் கருப்பன்.

போருக்கான நேரம் தொடங்கியது, அதே இனிப்பகத்தில் போர் மூண்டது.

அவர்களை தாக்குங்கள்...!, என கருப்பர்களின் தலைவனும், சிவப்பர்களின் தலைவனும் கூற மண் பொறி கிளப்பி இரு கூட்டத்தார்களின் ஆவி அனல் பறக்க சண்டையிட்டனர்.

விழாக்காலம் என்பதால் மற்ற மக்களின் கூட்டம் அந்த இனிப்பகத்தில் அலை மோதியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்த கருப்பர்களும், சிவப்பர்களும் போரை நிருத்தும் படி கூறி அந்த இடத்தை விட்டு தப்பிக்க முற்ப்பட்டனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள், அங்கு வந்த மக்களின் காலடி மிதியால் இரு இனத்தவர்களும் துண்டு துண்டாக உயிர் விட்டனர்.

சில மணித்துளிகளுக்கு பின்பு,

இரு கூட்டத்தார்களிடமும் எண்ணில் அடங்கா உயிர் சேதம் ஏற்ப்பட்டது. அந்த போர்க்களபூமி மயானபூமி ஆனது.

மழை வரும் காலம் அறிந்த கருப்பு நிற எறும்புகளும், சிவப்பு நிற எறும்புகளும் மானிடர்கள் வரும் காலத்தை மறந்து இனவெறிக் கொண்டு மண்ணோடு மண்ணாகினர்.

12 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

ஒரு இனப்போரை அழகாய் சொல்லி இருக்கீங்க ஊடகன். கருப்பு எறும்பு சிகப்பு எறும்பாய் சிங்களன் தமிழன். மிதிக்கும் மக்களாய் அதை vaithu குளிர் காயும் உலக அரசியல்

புலவன் புலிகேசி said...

படிக்க ஆரம்பித்து சிறிது வினாடிகளிலேயே கண்டு பிடித்து விட்டேன் எறும்புதான்னு. நல்ல முயற்சி ஊடகன்..

க.பாலாசி said...

படிக்கும்போது இந்த நிகழ்வு எப்படா நடந்திருக்கும் அப்டின்னே படிச்சிகிட்டு வந்தேன். கடைசியா எறும்புங்கதானா??? ரைட்டு நண்பா...

கலகலப்ரியா said...

:)

vasu balaji said...

:)). எறும்புகளுக்குள்ள சண்டை வருமா?

அகல்விளக்கு said...

:-))

ஹேமா said...

எறும்புக்கதை - இலங்கைக்கதை.

சிவாஜி சங்கர் said...

எறும்புக்குள் இலங்கை.. :)

தமிழ் உதயம் said...

எறும்புகளாக இருந்தால் என்ன... மனிதர்களாக இருந்தால் என்ன... கண்கள் உள்ளவரை நிற வேற்றுமை இல்லாமல் போகாது.

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

இனியாள் said...

Nalla kathai.

rajeshkannan said...

Good Story.Keep on going good...