Saturday, January 23, 2010

விளம்பரம் - ஒரு வரலாறு

பண்டைய காலத்தில் விளம்பரம் ஒரு தேவை பொருளாக இருந்தது, ஆனால் இன்று அது ஒரு போதை பொருளாக மாறிவிட்டது. ஆம் சற்றே சிந்தித்து பார்த்தால் பல விடயங்கள் நம் கண் முன் வந்து போகும். ஆம்,

எகிப்தியர்கள்,விற்பனை செய்திகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு பாபிரசை பயன்படுத்தினார்கள் . பண்டைய அரேபியா மற்றும் போம்பீயில் சிதிலங்களில் வணிகச்செய்திகளும், அரசியல் பிரச்சாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பந்தமான பாபிரஸ் விளம்பரங்கள் சாதாரணமானவை.

பண்டைய காலத்து விளம்பரவகைகளில் சுவர் அல்லது பாறை ஓவியங்கள் மற்றொரு வகைத்திருப்பம் ஆகும். இவ்வகை இன்றும் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கின்றன. 4000 BCE - க்கு முன்னாள் இருந்தே சுவர் ஓவிய பாரம்பரிய நாகரிக வழக்கம் இந்தியப்பாறை கலை ஓவியங்களில் நாம் காணலாம்.

இடைக்கால ஆண்டுகளில் நகரங்களும் ,பெரு நகரங்களும் வளர்ந்து வந்த நிலையில், மற்றும் வாசிக்கத் தெரியாத பொதுமக்கள் மத்தியில் இன்றைய கால கட்டத்தில்,செருப்பு தைப்பவர், மாவுமில் வைத்திருப்பவர், தையல்க்காரர்,அல்லது கொல்லர் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை அடையாளமாக பயன்படுத்தும்போது, அதாவது ஒரு காலணி, ஒரு சட்டை, ஒரு தொப்பி, ஒரு கடிகாரம், ஒரு குதிரை லாடம் , ஒரு மெழுகுவர்த்தி, அல்லது ஒரு பை மாவு அவர் செய்யும் தொழிலை இந்த அடையாளங்களின் மூலம் மக்கள் புரிந்துகொண்டார்கள்.

 காய்கறி மற்றும் பழங்களை நககரத்தின் நார்ச்சந்திகளில் தங்கள் வண்டிகளிலும், மற்றும் வாகனங்களின் மீதும் வைத்து விற்கும் அவற்றின் சொந்தக்காரர்கள், தெருவில் கூவுபவர்களையும், அல்லது நகர தம்பட்டக்காரர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்தை இவர்கள் மூலம் அறிவிப்பார்கள்.

 பொது வாழ்க்கையில் அரசியல், சினிமா, வணிகம், விளையாட்டு, சமயம், மென்பொருள் போன்ற எல்லா துறைகளிலும் விளம்பரம் அதிவேகமாக வளர்ந்து, அவர்கள் ஆட்டத்தில் நம்மை ஆட்டிவைக்கிறது.

விளம்பரம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை விளக்க மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் ஆகும். விளம்பரங்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்படலாம்.

அச்சு ஊடகம்(செய்தித்தாள்), காட்சி ஊடகம்(தொலைக்காட்சி) மற்றும் இணைய ஊடகம்(இணையம்) என்று அனைத்து வழியிலான ஊடகங்களிலும் விளம்பரம் இடம் பெற்றிருக்கிறது.இந்த விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் சட்டங்கள் பாதுகாப்பு அளித்தாலும் விளம்பரத்தை பகுத்தாய்ந்து செயற்படுவது மக்களின் பொறுப்பாகவே பெரிதும் இருக்கிறது.

விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு முக்கிய நோக்கங்களாக கீழ்காண்பவைகள் இருக்கின்றன.
  • புதிய பொருள் அல்லது பணி விற்பனைக்கு வருவதை அறிவிக்க உதவுகிறது.
  • புதிதாகப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது,
  • விற்பனை முறை, விலை, கட்டு, இடம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிவிக்க உதவுகிறது, 
  • விற்பனையில் தள்ளுபடி, சலுகை போன்றவைகளைத் தெரிவிக்க உதவுகிறது, 
  • பொருள்களின் சிறப்புத் தன்மைகளை அறிவிக்க உதவுகிறது, 
  • பொருள்களை நினைவுபடுத்த உதவுகிறது, 
  • முதலீட்டாளர்களைக் கவர்ந்திட உதவுகிறது, 
  • தகுதியான ஆட்களைத் தேர்வு செய்ய உதவுகிறது, 
  • வணிக வெற்றி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த உதவுகிறது, 
  • இப்படி இதன் பயன்கள் எண்ணிலடங்காமல் தொடர்கிறது...
 ஒரு சிலவற்றின் அதிக அதிவேக விளம்பரத்தால் தரமற்றவைகள் அதிகமாக வெற்றியடைகிறது, இதனால் நல்ல தரமானவைகள் அழிக்கபடுகிறது என்பதே உண்மை.

இன்று விளம்பரம் இல்லாமல் முன்னேற, வெற்றியடையவே முடியாது என்ற நிலைமைக்கு தள்ளபட்டிறிருக்கிறோம். மேல்தட்டு மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அவர்களுடைய தகுதிக்கு ஏற்றார் போல் விளம்பரம் செய்கின்றனர்.

இதனுடைய தொடர்ச்சியான அடுத்த பதிவில் ஒவ்வொரு துறையிலும் செய்யும் விளம்பரமும், அதனால் மக்கள் பாதிப்படைவதையும் பார்ப்போம்.

விளம்பரத்தைப் பற்றி எழுத்தாளர் செயமோகன் கூறியவையை படிக்க கீழே உள்ள இணைப்பை படிக்கவும்,

http://www.jeyamohan.in/?p=2847


44 comments:

பிரபாகர் said...

கண்டிப்பாய், அடுத்த உங்களின் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் ஊடகன்...

நல்லா எழுதியிருக்கீங்க...

பிரபாகர்.

பின்னோக்கி said...

அதிசயமான தகவல்கள். தொடருங்கள்.

1980 ? 1880 ?

புலவன் புலிகேசி said...

இந்த பதிவு பலரை சென்றடைய தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்தில் விளம்பரம் பன்ன வெண்டியுள்ளது.

க.பாலாசி said...

// ஒரு சிலவற்றின் அதிக அதிவேக விளம்பரத்தால் தரமற்றவைகள் அதிகமாக வெற்றியடைகிறது, இதனால் நல்ல தரமானவைகள் அழிக்கபடுகிறது என்பதே உண்மை.//

உண்மையான கருத்து நண்பா...விளம்பரமில்லா உலகு இனிமேலிருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்... நல்ல இடுகை

வானம்பாடிகள் said...

தொடருங்கள் ஊடகன். புரிதலுக்கு அவசியம்.

அகல்விளக்கு said...

//புலவன் புலிகேசி said...

இந்த பதிவு பலரை சென்றடைய தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்தில் விளம்பரம் பன்ன வெண்டியுள்ளது.
//

சரிதான்....

உபயோகமான இடுகை. இன்னும் தொடருங்கள் நண்பா...

விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒரு இடுகை இடலாமே...

யுவகிருஷ்ணா said...

நல்ல இடுகை நண்பரே!

பலருக்கும் தெரியாத துறையை விளம்பரப் படுத்துகிறீர்கள். நன்றி!

ரோஸ்விக் said...

ம்ம்ம்... தொடர்ந்து சொல்லுங்க நண்பா... எனக்கு விளம்பரங்கள்னா ரொம்ப பிடிக்கும்... (அதில வருகிற கருவும்... உருவும் தான்)

இதுல சுயவிளம்பரம் சேருமா?? :-)

விஜய் said...

நல்ல பதிவு தொடருங்கள்

விஜய்

ஆதி மனிதன் said...

//இதனுடைய தொடர்ச்சியான அடுத்த பதிவில் ஒவ்வொரு துறையிலும் செய்யும் விளம்பரமும், அதனால் மக்கள் பாதிப்படைவதையும் பார்ப்போம்.//

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...ஆமா அடுத்த பதிவிற்கு இந்த பதிவுதான் விளம்பரமா?

velkannan said...

நல்லதோர் பதிவு (தொடர் ) நண்பா ... வாழ்த்துகள்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

TamilBlogger said...

இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com

திருப்பூர் மணி Tirupur mani said...

:-)

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டிஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

ராஜ ராஜ ராஜன் said...

நல்லா தான் இருக்கு...
நல்ல பல தகவல்கள் தொடரட்டும்...!


http://communicatorindia.blogspot.com/

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

விமலன் said...

விள்ம்பரங்க்கள் தேவை என்கிற நிலை மாறி மனித மனதை மோல்ட்
செய்ய பயன்படுகிறகொடுமையை என்ன சொல்ல?

Joomla Templates said...

That's excellent Articles...

Anonymous said...

Urteter nuytre: http://imyatric.001webs.com

Anonymous said...

скачать keygen для abby finereader
http://downasun.prv.pl/ciaw.html

Lakshmi said...

நல்லபதிவு,பலருக்கும்பயானாக இருக்கும். நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகான தெளிவான கட்டுரை. வாழ்த்துக்கள் ஊடகன்.

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_17.html

இராஜராஜேஸ்வரி said...

இன்று விளம்பரம் இல்லாமல் முன்னேற, வெற்றியடையவே முடியாது என்ற நிலைமைக்கு தள்ளபட்டிறிருக்கிறோம்//
நல்லபதிவு.தொடரட்டும்...!

Anonymous said...

Now you've got your new web site and also you’re eager to start making some gross sales! However, how are you going to make gross sales when you do not need excessive volumes of visitors to your website? maruca design worker bee handbag| replica burberry dog collar| marc jacob handbag| "Even then I--shouldn't be quite happy, Peregrine
http://s1.shard.jp/campprad/amer-camp-bracey-virginia.html Click Here

Anonymous said...

Definitely one of the challenges which people starting a new on-line company face is that of acquiring visitors to their web site. анализ фамилий имен| как появилась фамилия зайденберг| жимовая майка катана| betwixt his hands as one that is direly sick. In a while as he sat
http://s1.shard.jp/campsniv/camp-humphry.html Click Here

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

MakeItYourRing Diamond Engagement Rings said...

காய்கறி மற்றும் பழங்களை நககரத்தின் நார்ச்சந்திகளில் தங்கள் வண்டிகளிலும், மற்றும் வாகனங்களின் மீதும் வைத்து விற்கும் அவற்றின் சொந்தக்காரர்கள், தெருவில் கூவுபவர்களையும், அல்லது நகர தம்பட்டக்காரர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்தை இவர்கள் மூலம் அறிவிப்பார்கள்...

Excellent... :-)

மாற்றுப்பார்வை said...

அருமை

Anonymous said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

karthik sekar said...

நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்

ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்

OURTECHNICIANS HOME BASE SERVICES said...

Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further detail visit our locate please click here>>
complete bathroom remodel in trichy
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

aaradhana said...

பண்டைய காலத்தில் விளம்பரம் ஒரு தேவை பொருளாக இருந்தது, ஆனால் இன்று அது ஒரு போதை பொருளாக மாறிவிட்டது. ஆம் சற்றே சிந்தித்து பார்த்தால் பல விடயங்கள் நம் கண் முன் வந்து போகும்.
AARUMAI
கண்டிப்பாய், அடுத்த உங்களின் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்
https://www.youtube.com/edit?o=U&video_id=88u2nlxKIzA

aaradhana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
https://www.youtube.com/edit?o=U&video_id=7LAcyzkDsJ4

aaradhana said...

அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=TEwlc-Az-3s

aaradhana said...

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=TiUW_1Q7blQ

aaradhana said...

super post
https://www.youtube.com/edit?o=U&video_id=zoNZFkFeInc

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=DHjNC-t4iZs

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
மேலும் தமிழ் செய்திகளுக்கு ..
மாலைமலர் | தினத்தந்தி