Saturday, January 16, 2010

தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி

வெற்றி தான் வாழ்க்கை என்றால் மரணத்திடம் நாம் தோற்பது ஏன்...?
தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் தினம் திறப்பது ஏன்...?

பெரும்பாலானவற்றைப் போல வெற்றியும், தோல்வியும் மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு விடயமே. இந்த இரண்டை வைத்துக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை முடிவெடுக்க முடியாது.



வாழ்க்கை பாதைகளில் நாம் கடந்து செல்லும் சிறிய மேடு, பள்ளங்கலே வெற்றியும், தோல்வியும். இது கொஞ்சம் பழமையாக இருந்தாலும் இது தான் தன்னம்பிக்கையின் உண்மை.

இலக்கு என்பது ஒருவனுக்கு முடிவல்ல. அது எண்ணிக்கையற்றது. ஒரு இலக்கை அடைந்ததும் அதை விட சிறந்த இன்னொரு இலக்கு வரும். அதை நோக்கி புறப்பட வேண்டுமே தவிர என்னுடைய இலக்கு முடிவடைந்து விட்டது என்று நிலைக் கொள்வதல்ல.

வெற்றியடைந்த குதிரைக்கு தெரியும் அது ஏன் பந்தயத்தில் வெற்றி பெற்றது என்று. அதன் மீது சாட்டைகளால் ஏற்படும் வலிகளே அதற்கு காரணம். ஆம்,

வாழ்க்கை ஒரு பந்தயம், அதில் நாம் குதிரைகள், இறைவன் தான் நம்மை ஓட்டும் மேய்ப்பாளன். நம் வாழ்க்கையில் சாட்டை அடிகளால் ஏற்படும் வலிகள் அனைத்தும் நாம் வெற்றியடையவே.....!

வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப்பதை விட ஒருமுறையாவது விழுந்து எழுவதே சிறந்தது. எழாமல் விழுந்த இடத்திலே முடங்கி கிடந்து சாவது தான் கோழைத் தனம்.

என்னோடு கல்லூரி படிப்பை படித்த என் நண்பன், பெயர் சொல்ல விருப்பம் இல்லை.சமூகத்தின் மீது மிகுந்த அக்கரைக் கொண்டவன். வகுப்பில் பல உலக விடயங்களைப் பற்றி எப்போதும் அலசி கொண்டிருப்போம். அவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண்ணும் இவனை காதலித்து வந்தாள்.

இந்த விடயம் அறிந்த அவளது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு திடீர் என்று அவளுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். இதனால் என் நண்பனுக்கும் அவளுக்கும் தகராறு ஏற்ப்பட்டது.

என்னிடம் வந்து என்னை அவள் ஏமாற்றி விட்டாள் என அழுதுக் கொண்டே கூறினான்.
நானும் அவனுக்கு ஆறுதலாக, "விடுடா, எல்லாம் நன்மைக்குனு நினைச்சுக்கோ...!, ஒலுங்கா ஒரு நல்ல வேலைய தேடி, வாழ்க்கையில முன்னேரப் பாருடா" என ஊக்கம் கொடுத்தேன்.

சில நாட்களுக்கு பிறகு,

அவளுடைய திருமண நாளில், என் நண்பன் தொலைபேசியில், "அழுதுக் கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்றான்.

பதற்றத்துடன், "எங்கடா இருக்க.....!", என கேட்டேன்

மலையிலிருந்து குதிப்பதற்காக, மதுரையிலிருந்து கொடைக்கானல் மலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினான்.

"டேய் முட்டால், என்ன காரியம்டா பண்ணபோர, மொதல்ல, பஸ்ல இருந்து எறங்குடா, பைத்தியக்காரா...." எனக் திட்டினேன்.

ஒரு வழியாக பேசி அவனை சமாதானம் செய்வதற்குள் நானே பாதி செத்துவிட்டேன்.

இன்று அவன் ஒரு கணிப்பொறியாளனாக சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இன்று தற்கொலை என்பது ஒரு சாதாரண விடயம் ஆகிவிட்டது. ஆம்,

தேர்வில் தோத்தால் தற்கொலை, காதலில் தோத்தால் தற்கொலை, வணிகத்தில் தோத்தால் தற்கொலை என்று தோல்வியை ஒரு முடிவாக ஏற்று வாழ்க்கையயை முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது

இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு வேறு ஒரு உயிரை கொடுக்க உரிமை இருக்கே தவிர, அவனுடைய உயிரை எடுக்க அவனுக்கு உரிமை இல்லை.

ஒரு பழைய புதுமொழி,
"வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்ப்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்."

15 comments:

அகல்விளக்கு said...

//"வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்ப்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்"//

அருமையான கருத்து நண்பா....

வாழ்த்துக்கள்...

shortfilmindia.com said...

நல்ல பதிவு தலைவரே

கேபிள் சங்கர்

பின்னோக்கி said...

வெற்றி, தோல்வி பற்றிய உங்களின் கருத்து அருமை.

எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள்.

vasu balaji said...

நல்ல இடுகை.

பிரபாகர் said...

தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் மிகவும் அருமையாய் இருக்கிறது...

பிரபாகர்...

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான பகிர்வு நண்பரே.

வேடிக்கை மனிதன் said...

வெற்றியும் தோல்வியும் நிரந்தரமானவை இல்லை என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சுலபமாகிவிடும்.எதிர்பாரா திருப்பங்களில் நாம் எப்படி செயல் படுகிறோம் என்பதில் தான் வாழ்கையின் சுவாரசியமே அடங்கி இருக்கிறது. நினைத்த மாதிரியே எல்லாம் நடந்துவிட்டால் இறைவன் இருப்புத் தேவையற்று விடும், இயற்கையும் நமக்கு சலித்துவிடும்

அஹோரி said...

//"வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்ப்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்."//

ஆஹா. அருமை.

Unknown said...

//இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு வேறு ஒரு உயிரை கொடுக்க உரிமை இருக்கே தவிர, அவனுடைய உயிரை எடுக்க அவனுக்கு உரிமை இல்லை//



அருமையான பதிவு நண்பரே

rajeshkannan said...

super da ..........

இனியாள் said...

Nalla pathivu, eluththu pizhaigalai thiruthavum.

Anonymous said...

எழுத்துப் பிழைகளால் தவறாக எழுதப்பட்டதற்கான‌ சரியான வார்த்தைகள் இவை;

உருவாக்கப்பட்ட என்பது ஒரே வார்த்தை.
பள்ளங்கலே என்பது தவறு..பள்ளங்களே என்பதுதான் சரி.
இதுதான் என்பது கூட ஒரே வராத்தைதான்.
....அதை நோக்கி புறப்பட வேண்டுமே தவிர என்னுடைய இலக்கு முடிவடைந்து விட்டது என்று நிலைக் கொள்வதல்ல.. இந்த வாக்கியம் முடிவடையவில்லை. நீங்கள் சொல்ல விரும்பிய ஒரு வார்த்தை விடுபட்டுள்ளது.
பெரும்பாலான வார்த்தைகளை உடைத்தும், வாக்கியங்களின் அமைப்புகளில் கவனமின்றியும் எழுதி உள்ளீர்கள்.
அக்கரை என்பது தவறு, அக்கறை என்பதுதான் சரி. அதற்கு ஒற்று வராது.
அலசி கொண்டிருப்போம் என்பதற்கு ஒற்று வருவதால் அலசிக் கொண்டிருப்போம் என மாற்றி எழுத வேண்டும். இதுபோல பல இடங்கள் உள்ளன•
வருடங்கள் என தமிழில் வார்த்தை இல்லை (சமஸ்கிருதம்). ஆண்டு என எழுதுவதுதான் சரியானது.
அழுதுக் கொண்டே என தேவையற்ற இடத்தில் ஒற்று வருவதும் தவறு. அழுது கொண்டே என்பதுதான் சரியானது.
ஒலுங்கா என்பது தவறு. ஒழுங்கா என்பதுதான் சரி.
முன்னேரப் என்பது தவறு. முன்னேறப் என்பது சரி.
"அழுதுக் கொண்டே என்பது அழுது கொண்டே"
என இருக்க வேண்டும்.
முட்டால் என்பது முட்டாள் என இருக்க வேண்டும்.
பண்ணபோர என்பது பண்ணப்போற என இருக்க வேண்டும்.
எனக் திட்டினேன். என்பது எனத் திட்டினேன் என இருக்க வேண்டும்.
வேலைப் என்பதில் ஒற்று தேவையில்லை.
தோத்தால் என்பது தோற்பின் என்றோ தோல்வியடைந்தால் என்றோ இருக்க வேண்டும். குறைந்த பட்சம் தோற்றால் என்றாவது இருக்க வேண்டும்.
வாழ்க்கையயை என்பது வாழ்க்கையை என இருக்க வேண்டும்.
இருக்கே என்பது இருக்கின்றதே என இருக்க வேண்டும்.
முற்ப்பட்டவனுக்கு என்பது ப் என்ற எழுத்தை நீக்கிய ஒன்றாக இருக்க வேண்டும்.

Yoganathan.N said...

ஆழ்ந்த சோகத்தில் இருந்த எனக்கு தங்களது பதிவு ஊக்கத்தை அளிக்கிறது. :)

தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி - தலைப்பு சூப்பர் ;)

vasu said...

good ....

Pranavam Ravikumar said...

நல்ல பதிவு !