Tuesday, September 15, 2009

காதல்

ஒரு உயிர் மற்ற உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளிடம் காட்டும் அன்பையே காதல் என்கிறோம்.

இவ்வுலகத்தில் தோன்றிய முதல் உறவே காதல் தான், ஆனால் அப்படியான முதல் உறவு இன்று முதல் இரவை மட்டுமே குறியாக வைத்து வருகிறது.




பறவைகள்,விலங்குகள் போன்ற ஐந்தறிவு உயிறினங்களுக்கும் காதல் வருவதாக கூறப்படுகிறது, சற்றே சிந்தித்து பார்த்தால் ஐந்தறிவு உயிரினங்கள் அனைத்தும் ஒரு உயிரோடு மட்டுமே உறவாடாது, அப்படியிருக்க ஐந்தறிவு உயிரினங்களுக்கு வருவதாக சொல்லப்படும் உறவு காதலா...?

மிருகத்திடம் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக கூறப்படும் மனிதனும் மிருகங்களாகவே மாறிகொண்டிருக்கிறான்...

இன்றைய கணக்கெடுப்பின்ப்படி , காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 40% மட்டுமே தங்களது வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள், மற்ற அனைவரும் தறிகெட்டு போகிறார்கள். இதை வைத்து காதல் வருவதற்கான காரணங்களைச்சற்று சிந்தித்துப்பார்த்தால்,
காதல் வருவதற்கான அடிப்படை காரணிகளாக கருதப்படுவது,

- அழகு ( 50% )

- பணம் மற்றும் புகழ் ( 40% )

- மனசு ( 10% )

காதல் என்பது ஹார்மோன் மற்றும் க்ரோமோசோம்களின் செயல்பாடே, இது மனசு சார்ந்த உறவல்ல, மாறாக அறிவியலின் கூற்றுப்படி உடல் சார்ந்த உறவே...

இதயத்திற்கும் காதலிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.... இதயம் ஒரு மனிதன் இயங்குவதற்கான கருவியே தவிர , காதலின் வெளிபாடு அல்ல........

சங்க இலக்கியம் தொட்டு , இக்கால சினிமா வரை அனைத்து காதலும் நிழலே நிஜமல்ல...

அக்கால அரசர்களும், அரசிகளும் மற்றும் பாமர மக்களும் இலக்கியம் மற்றும் மேடை நாடகங்களில் வாயிலாக காதல் செய்தார்கள்.இக்கால மக்கள் சினிமா, நாடகம் போன்ற ஊடங்கங்களில் வாயிலாக காதல் செய்கிறார்கள்.

சினிமா போன்ற ஊடகத்தின் வாயிலாக காதல் காட்டுத்தீப்போல பரவுகிறது....

ஊடங்கங்களும் இந்த நிழல் வடிவ காதலை ஊக்குவித்து கொண்டுதான் இருக்கிறது...

அந்த நிழலை நிஜம் என்று சில பைத்தியகாரர்கள் காதல் செய்து கொண்டிருக்கிறார்கள்....

சினிமாவில் வரும் நடிகர்களை போல ஆண்களும், நடிகைகளை போல பெண்களும் நினைத்து கொண்டு செய்யும் சேட்டைகள் அன்றாடம் நீங்கள் பார்க்கலாம், இது போல் வரும் காதல் மக்களாகிய நீங்கள் கூறுவது போல் மனசு பார்த்து வருவதா????

அம்பானியின் மகன் பிச்சைக்காரியை காதலிப்பானா??? இல்லை, பிச்சைக்காரி பில்கேட்ஸின் மகனை காதலிப்பானா???.., எதனால் இவர்கள் காதலிக்க மாட்டார்கள் "பணமா இல்லை அழகா இல்லை புகழா ".....?

வயது செய்யும் சிறு கோளாறால் ஆணும் பெண்ணும் பாலின வயதில் செய்யும் உறவே காதல், அது நாளடைவில் திருமணமாக உருவெடுக்கிறது, இத்திருமணம் காதலித்த அவ்விருவருமிடமோ அல்லது வேறொருவரிடமோ முடிகிறது.

ஒருவேளை அந்த திருமணம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோர் சம்மதத்துடன் நடப்பது

- வீட்டை விட்டு ஓடி போவது

ஒருவேளை அந்த திருமணம் வேறொருவரிடம் நடந்தால் அதற்கான காரணங்கள்

- பெற்றோரிடம் இருந்து வரும் எதிர்ப்பு

- காதல் செய்த அவ்விருவருகளுக்கிடையே வரும் ஊடல்

காதலினால் திருமனத்திற்கு முன்பு ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள், அப்படியானால் விவாகரத்து, தற்கொலை போன்றவைகள் காதலித்தவர்கள் ஊடல் காரணமாக செய்து கொள்வதில்லையா...?

காதலிக்கும் போது இருக்கும் சுகம் வேறெதுவிலும் கிடைக்காது என்பார்கள், அது ஏன் திருமணத்திற்கு பிறகு போகிறது....?

காதலில் தோற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களா..?ஆம்..!

ஆதாமூம் ஏவாளூம் இந்த மண்ணில் படைக்கப்பட்ட காலந்தொட்டே, ஆண்கள் தான் காதலில் தோற்று வருகிறார்கள்.

காதல் கொண்ட மோகத்தால் ஆண்களே ஆப்பிளிலிருந்து, காய்ந்து போன ரோசாப்பு வரை பறித்து கொடுக்கிறான், ஆண்களே சற்று விழித்து கொள்ளுங்கள்.....!

இதையெல்லாம் வைத்து கொண்டு பார்க்கும் போது ஆணிடமும் பெண்ணிடமும் வரும் காதல், ஒரு வகையான ஈர்ப்பே....!

சாதி,மத பேதமற்றது காதல் ==> எவனோ ஒருவன் கூறியது ,
அழகு,பணம்,புகழை தேடி வருவது காதல் ==> உங்களில் ஒருவன் கூறுவது...

இந்த பதிவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

4 comments:

புலவன் புலிகேசி said...

உண்மைதான் மனிதன் இன்னும் மனிதனாக முழுமையடைய வில்லை. மிருகமாகத்தான் இருக்கிறான். அந்த மிருகத்தை தனக்குள் அடக்கத் தெரிந்தவன் மனிதனாக வாழ்கிறான். அந்த முயற்சியிலிருந்து தோல்வியடையும் பொழுது காதல் என்ற பெயரில் காமம் புரிகிறான்.

vasu balaji said...

புரிந்து கொள்ள காதல் புத்தகமல்ல. கடவுள் மாதிரி இப்படித்தான் என்ற ஒரு உருவகம் கொண்டதல்ல. அடுத்தவர் வாழ்க்கையைக் கொண்டு நிர்ணயம் செய்ய முடியாதது. காதல் என்றாலே வலியும் அடங்கியது. வலிதாங்க முடிந்தவனுக்குத் தான் காதல் புரியும். அவனால் கூட இதுதான் காதல் என வரையறுக்க முடியாது.

Anonymous said...

//அழகு ( 50% )

- பணம் மற்றும் புகழ் ( 40% )

- மனசு ( 10% )//



மனசு பத்து % இருப்பதால் தான் காதலித்து திருமணத்திர்க்கப்புரம் வாயில்லும்,வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள்..


நல்ல எழுத்து நடையுடன் எழுதியுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..
வர்ட் வேரிபிகஷன் எடுத்துடுங்க ப்ளீஸ் ...


அன்புடன்,

அம்மு

Anonymous said...

நீங்க சொல்லி இருக்குற மாதிரி ஆண்கள் ஜாதி ஒன்றும் ஏமாந்து போகுறது இல்ல முக்கால் வாசி இடத்துல பெண்கள் தான் ஏமாற்ற படுகிறார்கள். அதே போல் அழகு பணம் புகழ் பார்க்காமல் மனசு மட்டுமே பார்த்து வர காதல் எத்தனையோ ஜெய்த்திருக்கிறது . உங்களோட பதிவுல எனக்கு முழு உடன்பாடு கிடையாது .... vidhu