Tuesday, September 22, 2009

திருமணம் : ஒரு தடைக்கல்லா...?

திருமணம் = இவ்வுலகில் வாழும் அனைத்து தர மக்களும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு நிலை.

ஆதி மனிதன் திருமணம் செய்து கொண்டதாக சேதிகள் இல்லை. மிருங்கங்கள் போல் வரையறையற்று வாழ்ந்து வந்த மனிதனுக்கு, இவன் இவளை இப்படிதான் உறவு கொள்ள வேண்டும் என்று வரையறை போட்டு தந்தது திருமணமே.மனிதனின் ஒருவகை முன்னேற்றமே திருமணம்..!

பண்டைய கால மன்னர்களும் முறையான வாரிசு வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

அரசன் முதல் ஆண்டி வரை அனைத்து தர மக்களும் திருமணத்தை ஒரு கடமையாக செய்கிறார்கள்.

சமிபத்தில் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும் போது, என்னுடைய நண்பர் ஒருவரை பேருந்தில் சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்து கொண்டோம். அவன் தன் மாமியார் வீட்டிற்க்கு போவதாக கூறினான்.உதவி என்று யாரேனும் வந்தால் உடனே உதவி செய்யும் எண்ணம் உள்ளவன்.

அவன் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். அவனுடைய எண்ணமே அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இலவச பள்ளிகள் நிறுவ வேண்டும், ஏனெனில் கல்வி தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்று கூறுவான்.

கல்லூரியில் படிக்கும் போது எப்போதும் இதே சமுதாய சிந்தனையுடனே என்னுடன் பேசி கொண்டிருப்பார். இன்று அவனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது....! அந்த சந்திப்பில் நாங்கள் இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அவன் தன குடும்பத்தைப்பற்றியே அதிகமாக பேசி கொண்டிருந்தான்.

தற்செயலாக அவனிடம் சமுதாயத்தைப்பற்றி பேசியதற்கு, என் குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால், என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றான்... சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான்.பிறகு அவனுடைய நிறுத்தம் வந்ததால் எறங்கி கொண்டான்...

என்னுடைய அலுவலகம் வர இன்னும் 4 நிறுத்தம் இருந்தது, இடைப்பட்ட அந்த 4 நிறுத்தத்தில் நான் யோசித்த 4 விடயங்கள், இதோ உங்கள் பார்வைக்கு,

- எதனால் இவன் இப்படீ மாறிவிட்டான்...?

- ஒருவேளை இவன் திருமணம் செய்யாமல் இருந்தால், அவனுடைய கனவான கல்வி கூடத்தை நிறுவி இருப்பானோ...?

- இப்போது அவன் திருமணம் செய்து கொண்டதால் அவனுடைய அந்த ஒரு குடும்பம் மட்டுமே பயன் பெற்றிருக்கிறது, ஒருவேளை அவன் இலவச கல்வி கூடத்தை நிறுவி இருந்தால் எதனை குடும்பங்கள் பயன் பெற்றிருக்கும்....?

- திருமணம் ஒரு மனிதனை இப்படியெல்லாம் கூட மாற்றுமா....?

அந்த காலத்தில் வீட்டை காக்க ஒருவனும் , நாட்டை காக்க ஒருவனுமாக தங்களது வாரிசை பெற்றார்கள். அந்த முறை இப்பொழுது ஏன் இல்லை...? அந்நியர்களிடம் அடிமைப்பட்டு கொண்டிருந்த நமது தேசத்தை இவ்வாறாகத்தான் காப்பாற்றினார்கள். அந்த முறை இன்று வந்தால் அந்நியர்களாக வாழ்ந்து கொண்டிக்கும் தேச துரோகிகளிடமிருந்து நமது நாட்டை காப்பாற்றலாம்.இதை ஒருவனுக்கு திணிப்பதை விட, தானாக முன் வர வேண்டும்.

சற்றே சிந்தித்து பார்த்தால் திருமணம் செய்வதால் ஏற்படும் ஒரே நன்மை, கடைசி காலத்தில் தன்னை காப்பாற்ற ஒருவன் தேவை என்பதே, வேறந்த பலனும் இல்லை. இது அனைவருக்கும் அடக்கும்.
இது அசைக்க முடியாத உண்மை...!

தான் மட்டும் இல்லாமல் இச்சமூகமும் நல்ல வழியில் வாழ உதவுபவனுக்கு கடைசி காலத்தில் இந்த உலகமே பின்னால் இருக்கும்...
இதுவும் அசைக்க முடியாத உண்மை...!

நாடென்ன செய்தது நமக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு,
நீ என்ன செய்தாய் அதற்கு, என்று நினைத்தால் நன்மை உனக்கு...

இந்த நிலைமை மாறி வீட்டிற்கு ஒருவன் காமராசர், அப்துல்கலாம், மற்றும் அன்னைதெராசாவை போன்ற சமூக சீர்திருதவாதிகளாக மாற வேண்டும் என்பதே என் கனவு...!

கனவு மெய்ப்பட வேண்டும்....!

பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!

இந்த கனவில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ, உங்களுடைய பதிலை எனக்கு பதிவு செய்யுங்கள்.....

16 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல கருத்து,
ஆனால் கட்டாயம் ஒரு வீட்டில் இருந்து ஒருவன் வர வேண்டும் என்று தனி மனிதனை வற்புறுத்த முடியாது.கல்யாணம் என்பது வடிகால் இப்பொழுது உங்கள் நண்பர் அகநிலையில் சந்தோசம் பெற்று இருக்கலாம். நாம் திருமணத்தில் தான் முழுமை அடைகிறோம் என்பது என் தாழ்மையான கருத்து.வேண்டுமென்றால் நல்லது செய் என்று சொல்லாம் திருமணம் வேண்டாம் என்று சொல்ல முடியாது "கல்வி வரும் முன்னரே களவி வந்துவிட்டது நண்பரே".காதலிலும் எதிர் பால் ஈர்ப்பில் தான் உள்ளது வாழ்கையின் ஈரம்.

எட்வின் said...

நல்ல சிந்தனை தான்.

திருமணம் சமூகத்தில் ஒரு அங்கீகாரமே. பிறருக்கு உதவி செய்ய திருமணங்கள் தடையாக இருக்கக்கூடும் சிலருக்கு. பலருக்கு அப்படி இருப்பதில்லை.

பிறருக்கு உதவ திருமணம் ஒரு தடையாக இருக்கும் என கருதுபவர் திருமணம் செய்யாமல் இருத்தலே சரி. உதவி செய்வதற்கு திருமணம் இடையூறு என சாக்கு சொல்பவர் நிச்சயமாக உதவி செய்யும் மனமுடையவர் அல்ல.

புலவன் புலிகேசி said...

நல்ல சிந்தனைதான்!!! ஆனால் கொஞ்சம் தவறாக யோசித்திருக்கிறீர்கள்... எந்த ஒரு மனிதன் தான் பிறந்தது திருமணம் செய்து கொள்ள மட்டும்தான் என் யோசிக்கிறானோ அவன்தான் உங்கள் நண்பனைப் போல் பொறுப்பற்றவன் ஆகிறான்..திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே (பிறந்தநாள் போன்று). திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் தனது தேவைக்கேற்றாற்போல் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். எவன் ஒருவன் அப்படி உயர்த்திக் கொள்கிறானோ அவனே சமூகத்தைப் பற்றி சிந்திப்பான்.

ஊடகன் said...

//பின்குறிப்பு : சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும்....!//

ஊடகன் said...

//உதவி செய்வதற்கு திருமணம் இடையூறு என சாக்கு சொல்பவர் நிச்சயமாக உதவி செய்யும் மனமுடையவர் அல்ல.//

நான் மக்களை படிப்பவன் , புத்தகத்தை அல்ல.........!

இதுவரை நான் பார்த்த மக்களை வைத்து கொண்டுதான் இந்த குமுறலை எழுதினேன்....

Veliyoorkaran said...

உலகம் உருண்டைன்னு சொன்னவன பைத்தியம்னு சொன்ன உலகம் இது ஊடகன்..புதுசா யோசிகிறீங்க...வாழ்த்துக்கள்...

KATHIR = RAY said...

porulathara suthanthiram matrum nera suthanthiram ullavarkal kalyanam samuthayam rendayume paaka mudiyum.

KATHIR = RAY said...

thani manitha sudhanthirathirku thirumanam oru thadai kalle. indraya kaala kattathil

sarath said...

நாம் இந்த சமூகத்தில் நமக்கு கிடைத்த வாய்ப்பில் நிச்சயம் மற்றவருக்கு தேவையெனில் உதவி செய்தே ஆங்க வேண்டும். இது நம் கடமை.

மருத்துவ படிப்பு நுழைவு தேர்வில் தேறாதவர் அந்த படிப்பு தகுதி அற்றவர் என ஆகாது. அவருக்கு இந்த சமூகம் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது தான் சரி.

இப்படி நாம் வாழும் ஒவ்வொரு கணமும் மற்றவருக்கும் உடைமையான எதோ ஒன்றை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இதை உணர்ந்தால் நிச்சயம் பிறருக்கு உதவுதல் நம் கடன் என்று எளிதில் விளங்கும்

Unknown said...

அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?

நல்ல காமெடி.......

ஊடகன் said...

//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?
நல்ல காமெடி.......//

சமூக சீர்திருத்தம் என்று நான் கூறியது , மக்களுக்கு சேவை செய்வதும் கூட,
இளைஞர்களை ஊக்குவிப்பதும் கூட................ இது போதும் ஒரு நாடு முன்னேறுவதற்கு........

Unknown said...

//அப்துல்கலாம் சமூக சீர்திருதம் செய்தாரா?
நல்ல காமெடி.......//

சமூக சீர்திருத்தம் என்று நான் கூறியது , மக்களுக்கு சேவை செய்வதும் கூட,
இளைஞர்களை ஊக்குவிப்பதும் கூட................ இது போதும் ஒரு நாடு முன்னேறுவதற்கு........//

இது மட்டும் போதுமா ஒரு நாடு முன்னேறுவதற்கு........

சேவை செய்வதை சமூக சீர்திருத்தம் என்று கூற முடியாது

ஊடகன் said...

//இது மட்டும் போதுமா ஒரு நாடு முன்னேறுவதற்கு........
சேவை செய்வதை சமூக சீர்திருத்தம் என்று கூற முடியாது//

சமூக சீர்த்திர்த்தம் என்பது சமூகத்தை சீர்திருத்துவது. சமூகம் என்பது இளைஞர்களையும் அடக்கும்.......
ஒரு இளைஞனை நல்ல பாதையில் ஊக்குவிப்பனும் சீர்திருத்தவாதி தான்........
நாளைய உலகம் இன்றைய இளைஞர்கள் கையில்....

Surendran Haridoss said...

Excellent Blog...

Keep up!

Unknown said...

//நாளைய உலகம் இன்றைய இளைஞர்கள் கையில்....//

சரி சரி போய் 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள்

அன்புடன் மலிக்கா said...

திருமணம் எவ்விதத்திலும் மனிதனுக்கு தடையல்ல
திருமணதில் ஒருமனிதன் முழுமையடைகிறான்

வீட்டோடு சேர்ந்துநாட்டையும் பார்த்துக்கொள்ள ஒருமனிதனால் முடியாதா?
சாதித்துக்காட்ட சம்சாரம் ஒருதடையா?

இல்லைஎன்பது என்கருத்து

முடியும் என நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை