Tuesday, October 20, 2009

சாதி, ஒரு சமூக வியாதி - (கல்வி-பகுதி-2)

இது என் முந்தைய பதிப்பின் தொடர்ச்சி, முந்தயப்பதிவை படிக்காதவர்கள் படித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்...

http://www.oodagan.blogspot.com/2009/10/blog-post_16.html

அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இன்று இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறுவேன்....!

இன்றும் அனைத்து பள்ளியில் மாணவர்களுக்கான வருகை பதிவேட்டில் அவர்களின் பெயரை, அகர வரிசையில் இல்லாமல் சாதி பார்த்து எழுதி எழுதிவருகின்றனர். இல்லையேல் ஒவ்வொரு மாணவனுடைய பெயருக்கு நேராக சாதியையும் சேர்த்து எழுதுகின்றனர்.




சாதிகள் இல்லையடிப்பாப்பா என்று பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு,
சாதி பார்த்து இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள், போன்ற அரசின் இலவச பொருள்கள் கொடுக்கபடுகின்றன.

காமராசர் அறிமுகப்படுத்திய இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள் போன்றவைகள் அனைவரையும் சேர்ந்தடைகின்றனவா...?

காமராசர் அறிமுகப்படுத்திய கல்விக்கான இலவசத்திட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தானா...?

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் தான் இந்த பூமியில் வறுமையில் வாடுகிறார்களா...?, ஏன் மற்ற சாதியினர் இல்லையா.....?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் , பழங்குடியினர், முற்ப்பட்ட வகுப்பினர்கள் போன்ற எல்லா சாதியிலும் ஒரு வேலை கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியாதா.....?




முதலில் பள்ளிகளில் சாதிப்பார்த்து சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து சாதியினரும் ஒரே மாதிரியாக நடத்த பட வேண்டும். இந்த நிலைமை மாறினால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கபெறும்.

ஒரு காலத்தில் ஒரு சில சாதிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டார்கள், இன்றும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருவனுடைய தரம் என்பது சாதியின் அடிப்படையில் இருக்கக்கூடாது மாறாக பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் மட்டும் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு துறை , கல்லூரியில் இட ஒதுக்கீடு என்று அனைத்து துறையிலும் சாதிப்பார்த்து மக்களை வேறுப்படுத்தும் விதம் மாற வேண்டும்..

இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் மக்கள் அரசுப்பள்ளியை விட்டு தனியார்ப்பள்ளியை நாடுவது ஏன் என்று பார்ப்போம்....

10 comments:

பிரபாகர் said...

சாதியை வைத்துத்தான் சலுகைகளும் எனும்போது சாதியின்றி சேர்ப்பது எப்படி நண்பா?

பதிலையும் சொல்லியிருக்கிறீர்கள். நடைமுறைக்கு சாத்தியமில்லாததாகவே தோன்றுகிறது.

பிரபாகர்.

ஊடகன் said...

//
சாதியை வைத்துத்தான் சலுகைகளும் எனும்போது சாதியின்றி சேர்ப்பது எப்படி நண்பா?
//

சலுகைகள் அனைவருக்கும் பொதவாக இருக்க வேண்டும்........
அதில் பிரிவினை பார்க்க கூடாது என்பது தான் என் கருத்து.......

vasu balaji said...

அடிப்படைச் சிவில் சட்டங்கள் சாதிவாரியாக இருக்கும் வரை, சலுகைகள் சாதிவாரியாக இருக்கும் வரை, சமுதாய சமன்பாடு தவறாகவே இருக்கும். இவ்வளவு நாள் எப்படி உங்கள் இடுகைகளைத் தவற விட்டேன். இனித் தொடர்வேன். சிறப்பான இடுகைகள்.

வால்பையன் said...

கல்வி என்பது அடிப்படை தகுதி அதில் சமர்சம் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை!
இலவசகல்வி ஆனால் சமமான கல்வி!

அரசு பணியில் வேண்டுமானால் அவர்களுக்கு சாதி அடிப்படையில் வேலை கொடுக்கட்டும்!
கல்விசாலையில் சாதியை வளர்ப்பது கேவலமான செயல்!

ஒருவன் சலுகை பெரும்போதே தன்னளவில் தாழ்வுமனப்பான்மை அடைகிறான்! மற்றவர்களின் ஏளன பார்வைக்கு ஆளாக்கிறான்! அதற்கு ஒரே வழி சமச்சீர் கல்வி இலவசமாக!

புலவன் புலிகேசி said...

//இன்றும் அனைத்து பள்ளியில் மாணவர்களுக்கான வருகை பதிவேட்டில் அவர்களின் பெயரை, அகர வரிசையில் இல்லாமல் சாதி பார்த்து எழுதி எழுதிவருகின்றனர்.//
இப்படி எந்த பள்ளியிலும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் இந்த வேலை வாய்ப்பு மற்றும் பள்ளிகளில் இட ஒதுக்கீடு போன்றவை வருமானத்தின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலுமே ஒதுக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நிலை மாறும். வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

சிம்பா said...

நல்ல பதிவு நண்பரே.. அடிப்படைகள் சில மாற்றம் காணாமல் இது மாறப்போவதில்லை. இங்கு அரசியல் யாவரம் நடத்துபவர்களுக்கு சாதிப்பிரிவினை தேவை. பிரிவினை இருக்கும் வரை தான் சிந்தனை இல்லாமல் போகும்.

என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறும்.

Srikanth said...

பெற்றோர் கல்வி கற்றிருந்தால் மகன் கல்வி கற்பதில் சிரமம் இருக்காது! நாமே பார்த்திருப்போம், ஒரு iit ப்ரோபிச்சொர்'இன் மகன் iit entrance exam'இல் மிக எளிதாக தேர்ச்சி பெற்றுவிடுவான். அதற்கு காரணம், அவன் பெற்றோர் காட்டும் வழி-காட்டுதல். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு காலம் காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வந்து, இபோழுதுதன் அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு தேவையான சலுகைகள் அளித்தால்தான் அந்த இனத்தை சேர்ந்தவர்களும் முன்னேறுவார்கள். இபொழுது அவர்களுக்கு என்ன படிக்க வேண்டும் என்பதே தெரியாது! race'இல் தாமதமாக கிளம்பியவர்களுக்கு முதலில் ஒடத்துவங்கியவர்கள் வழி விடவேண்டும், எனென்றால் இதில் ஒருவர் வெற்றியடைந்தால் போதாது, ஒட்டு மொத்தமாக நம் சமுதாயம் வெற்றி பெற வேண்டும். இந்த reservation முறை ஒரு சிறந்த தீர்வு என்றாலும், அதை அரசியல் வியாதிகள் தவறாக கையாளுவதால் பலன் இன்றி, மேலும் சீர்கெட்டு வருகிறது!

ஊடகன் said...

நன்றி வானம்பாடிகள், வால்பையன், சிம்பா, புலவன் புலிகேசி ,Srikanth.....!

//
புலவன் புலிகேசி :
இப்படி எந்த பள்ளியிலும் இருப்பதாக தெரியவில்லை
//
என்னுடைய பள்ளியில் நடந்தது தோழரே........


//
Srikanth :
race'இல் தாமதமாக கிளம்பியவர்களுக்கு முதலில் ஒடத்துவங்கியவர்கள் வழி விடவேண்டும்...//

இன்று அவர்களும் நம்மவர்களுடன் தான் ஓடுகிறார்கள்........
என்னுடைய கருத்து சாதியை வைத்து கொண்டு ஒருவனை பிரிப்பதை விட , இது திறமையின் அடிப்படையில் தான் பிரிவினை வர வேண்டும்........
அரசாங்கம் அனைத்தையும் அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும் என்பதே என் குரல்.....!

கடல் அலைகள்... said...

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறும் மக்களில் பலரின் வாழ்கை தரம், இன்று உயந்திருகிறது. ஆனால் அவர்களும் சலுகைகளை பெற்று கொண்டு தான் இருகிறர்கள்.

இதனால் அதே பிரிவுகளில் உண்மையாகவே வாழ்வதற்கு கஷ்டப்படும் மக்களுக்கு சலுகைகள் சென்று அடைவதில்லை.

வெண்ணிற இரவுகள்....! said...

//ஒருவனுடைய தரம் என்பது சாதியின் அடிப்படையில் இருக்கக்கூடாது மாறாக பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் மட்டும் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு துறை , கல்லூரியில் இட ஒதுக்கீடு என்று அனைத்து துறையிலும் சாதிப்பார்த்து மக்களை வேறுப்படுத்தும் விதம் மாற வேண்டும்..
//
ஆம் கட்டாயம் பொருளாதாரம் வைத்து இட ஒதுக்கீடு வேண்டும்