Friday, October 16, 2009

கண்ணுடையோர் என்பார் கற்றோர் - (கல்வி-பகுதி-1)

”கண்ணுடையோர் என்பார் கற்றோர் - முகத்திரண்டு
  புண்ணுடையோர் கல்லாதவர்”
                                                                           -வள்ளுவன்

கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே நம் பாட்டன் வள்ளுவன் கருத்து.அவன் எந்த கல்விக்கூடத்தில் படித்து தமிழையும், பிற இதர உலக நுணுக்கங்களையும் கற்றான், அவனுடைய ஆசிரியன் யாராக இருக்ககூடும் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.......?

பண்டைய காலத்தில் வேத நூல்களையே பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டு மக்கள் பயின்று வந்தார்கள்.ஒவ்வொரு பிரிவினரும், மதத்தினரும் அவர்களுடைய மார்க்க பாடங்களை ஈபுரு, சமஸ்கிரிதம், அரபி போன்ற வேத மொழிகளின் வாயிலாக பயின்றார்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கை பாடமாக அமைந்தது. அப்பொழுதும் மதம் மற்றும் சாதியின் அடிப்படையிலே வேதங்கள் கற்றுக்கொடுக்க பட்டது.வேதங்கள் படிக்க தகுதியற்றவர் என்று ஒரு பிரிவினர் , உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளப்பட்ட சில பிரிவினரால் ஒதுக்கப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் இசையும்,மனிதனுக்கு தேவையான தற்காப்புகலைகளும் கலைகளும் ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

வேதபாடங்கள் மக்களால் படித்து பரவிக்கொண்டிருந்த காலத்தில், அறிவியல் கண்டுப்பிடிப்பு வெகுவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அந்த கண்டுப்பிடிப்புகளை பயன்படுத்தியோர் அறிவியல் யுக்திகளையும் கற்க முயன்றனர். இவ்வாறாகவே அறிவியல் மற்றும் கணித படிப்புகள் கல்வி வளர்ச்சி அடைந்தது. இந்த பொதுக்கல்வி உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவியது.

மனிதன் சிறிது சிறிதாக மார்க்க கல்வியிலிருந்து, உலக கல்வியையும் கற்க முற்ப்பட்டான்.

அந்த முன்னேற்றமே உலகத்தின் அனைத்து மூலைகளிலும் உலக பொது கல்விக்கான பாடசாலை வர காரணமாயிற்று. நம் இந்தியாவிலும் இது வெகுவாக வளர்ந்தது.

வேதபாடங்களில் இருந்த பிரிவினை உலக பொதுக்கல்வியை கற்பதிலும் இருந்தது. சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை.

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்கள் தீவிரமாகப் போராடினார். அதன் பின்னர் கீழ் சாதி, மேல் சாதி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக கல்வி கற்றனர்.

முந்தய காலத்தில் சூத்திரர்கள், உயர் சாதி மக்களால் மிகவும் ஒதுக்கப்பட்டு சீரழிந்தார்கள். அந்த நிலைமையை அம்பேத்கர், பெரியார், மற்றும் காமராசர் போன்ற தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருமல்லை நாயக்கர் மகால், தாஜ்மஹால், போன்ற பெரிய கோபுரங்கள், கோயில்களை கட்டியவனுக்கு, மக்களுக்கு தேவையான கல்விக்கூடங்களை நிறுவ வேண்டும் என தோன்றவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களில் தோறும் கல்விக்கூடங்கள் அறிமுக படுத்தியவன் கர்ம வீரன் காமராசனே..........!

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.

எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி - இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் - தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்றறியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராசரின் திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.


காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.

16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.

பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார் யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச் சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.

இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” - என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.

தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள், பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத் தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” - என்று சொல்வதிலே தவறேதுமில்லையல்லவா.

இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராசரே என்றால் அது மிகையாகாது.

இதுவரை கல்வி பிறந்த கதையையும் அது மக்களிடையே வளர்ச்சியடைந்த விதத்தையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் இன்று எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்....?

13 comments:

வால்பையன் said...

//கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள், மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே நம் பாட்டன் வள்ளுவன் கருத்து.//

உலகலவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலர் உயர்கல்வியை கூட முடிக்காமல் சொந்த முயற்சியில் உயர்ந்தவர்கள்!

படித்தவன் டீ ஆத்திகிட்டு இருக்கான், அதற்கு குருடாகவே இருக்கலாம்!

அகல்விளக்கு said...

வாலு சொன்னது

ரிப்பீட்டேய்.......

நான் நான் இப்ப அப்பீட்டேய்......

அகல்விளக்கு said...

//இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் இந்த கல்வி முறை அனைவருக்கும் சமமான முறையில் இன்று எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்....? //

அப்டி சொல்லுங்க தலீவா.

நான் அடுத்த பதிவ எதிர்பாக்கிறேன்...

எதிர்கட்சி..! said...

):!

Srikanth said...

கலக்கல்! நல்ல தொகுப்பு! பெரும்பாலும் கல்வியை ஏட்டு சுரக்காய் போல் உட்கொள்ளும் போதுதான் பயனற்று போகிறது, மற்றபடி இருளை போக்குகிறது என்றே சொல்லலாம்! சிறந்த கலவையும் தேவை படுது, கல்லூரி கல்வி மட்டும் இல்லாமல், மற்ற அறிவும் அனுபவமும் சேரும் போதுதான் வெற்றி கிடைக்கிறது! சிம்பிளா சொல்லனும்னா சரக்கோட வாட்டுரும் ஊறுகாயும் சேரும் போதுதான் கிக்கே கிடைக்குது! தொடர்ந்து எழுதுங்க.

ரோஸ்விக் said...

//இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை எங்கும் பரப்பியவர் காமராஜரே என்றால் அது மிகையாகாது.//

உண்மை தலை! ஆனா இப்ப இருக்குற நம்ம அரசியல் வியாதிகள்....? அவரு கால கழுவி குடிச்சாலும் புத்தி வராது....

ஊடகன் said...

நன்றி ரோஸ்விக், ஸ்ரீகாந்த், எதிர்கட்சி, அகல் விளக்கு, வால்பையன்................

//
வால்பையன் :
உலகலவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலர் உயர்கல்வியை கூட முடிக்காமல் சொந்த முயற்சியில் உயர்ந்தவர்கள்!
//

வால் அவர்களே, கல்வி கற்ப்பது வெறும் பணம் சம்பதிப்பதர்க்குமட்டும் அன்று என்பதை நினைவில் கொள்க.....

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

Anonymous said...

நல்லதொரு அலசல்...தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது...

அன்புடன் மலிக்கா said...

கல்வியின் அவசியம் அனைவரும் அறியவேண்டும்,
நல்லதொரு அலசல்

ஊடகன் said...

நன்றி அன்புடன் மலிக்கா, தமிழரசி, தீப்பெட்டி..........

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் சீருடை அற்புதமான திட்டம் .........எல்லாரும் சமம் என்பதை காட்டுகிறது
பேராண்மை பாருங்கள் இப்பொழுதும் அந்த வித்யாசம் இருக்கிறது நண்பரே

vasu balaji said...

சீருடை இந்தக் காலக் கட்டத்தில் பள்ளிகள் துணிக்கடையுடன் சேர்ந்தடிக்கும் கொள்ளைக்கு வழியாகி விட்டதேங்க.