Thursday, October 1, 2009

மொழி -- தோற்றம் : ???? , மறைவு : ???? -- (பகுதி - 1)

மொழி என்பது ஒரு போராட்டக்கருவி அது காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை மொழி தோன்றிய காலத்தையும் , மறையும் காலத்தையும் யாராலும் கணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் யுகங்கள் இருந்தும் மனிதன், மொழி தோன்றிய காலத்தை அறியமுடியவில்லை.

உயிரினங்களின் மிக அருமையான உறுப்புகளாக கருதப்படுவது வாய் மற்றும் காது. ஏனெனில் அவை தான் ஒரு விடயத்தை வெளிக்காட்டுகிறது.உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களும் தங்களுக்கு தெரிந்த மொழியின் வாயிலாக கருத்துக்களை பரிமாரிகொள்கின்றன.




எறும்பில் இருந்து மனிதன் வரை இவ்வாறு ஒரு வகையான மொழியின் மூலமாக தான் பேசிகொல்கிறார்கள். இவற்றுள் ஆறறிவு கொண்ட மனிதனே மொழியை அறிந்து ஆராய்ந்து,சிந்தித்து தனது மூலையில் ஒரு கோர்வையாக அடுக்கி பேசுகிறான். மனிதனுக்கும் மிருங்கங்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்யாசம் இதுதான் என்றால் மிகையல்ல.


உலகில் தோன்றிய முதல் மொழி எதுவென்று இதுவரை அதிகாரபூர்வமாக எதிலும் அறிவிக்க படவில்லை. அப்படியிருக்க ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்திருக்க வேண்டும். ஆதாமும், அவனுடைய சந்ததிகளே மொழியை உருவாகியிருக்ககூடும். அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கலாம், ஆங்கிலமா..? ஹிந்தியா..?,
இல்லை எம் தாய் மொழி தமிழா...?.

இன்று உலக அளவில் மிக அதிகமாக பேசப்படும் மொழி சீனர்களின் மொழியே. ஏனெனில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு அதுதான். அதற்கடுத்து ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிய மொழிகள், அரபி, வங்காள மொழி இருக்கிறது...

எமது பாரத நாட்டில் ஹிந்தியே முதன்மையாக திகழ்கிறது. அதற்கடுதார்ப்போல் வங்காளம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் உள்ளது.

இன்று அதிக அளவில் பரவி வரும் மொழிகள் இந்தோ-ஐரோப்பா மொழிகளான ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தான். உலகில் வாழும் சமப்பாதி மக்கள் இந்த மொழிகளை தான் பேசி வருகிறார்கள். இந்த மொழிகள் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பாக கிழகத்திய ஐரோப்பிய நாடுகளிலும் , மேற்கத்திய ஆசிய நாடுகளிலும் வாழ்ந்த காட்டுவாசிகளிடமிருந்து வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகிறது.




உலகில் தோன்றிய அனைத்து மொழிகளும் உலக முதல் மொழியிலிருந்து உருவெடுத்ததே ஆகும். இன்று 5000க்கும் மேற்ப்பட்ட மொழிகள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.இவை அனைத்தும் சுமார் 20 மொழிகளிலிருந்து வளர்ந்தது.

ஒரு மொழி உலகம் முழுவதும் வளர்ந்ததுக்கான காரணிகளாக இருப்பது,

- வர்த்தகத்தின் போது

- மதத்தின் மூலமாக

- அரசாங்கத்தின் மூலமாக

- ஒரு துறையின் மூலமாக

ஒரு நகரத்தில் அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றவர்களிடம் பேசும் போது தாய் மொழியிலல்லாமல், இருவருக்கும் பொதுவான மொழி பேசுவது மரபு. இதையே லிங்குவா பிரான்க(lingua franca) என்றழைக்கிறார்கள்.

கப்பல் துறையில், விமான துறையில் போன்ற பொது வேலைகளில் இருப்பவர்கள் , இது போன்ற பொது மொழி மூலமே வெவ்வேறு வகையான மக்களிடம் பேசினார்கள். இந்த 21-ஆம் நூற்றாண்டில் அப்படியான பொது மொழியாக பரவி வருவது ஆங்கிலமே. இது நிலையானது என்று கூற முடியாது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, ஆனால் அவர்களுடைய மொழி கூட நாளடைவில் போது மொழியாக மாற வாய்ப்புண்டு(அது கடினமே.....!). ஏனெனில் வர்த்தகம், கணினி போன்ற அனைத்து துறையிலும் காட்டுத்தீப்போல பரவி வருவது ஆங்கிலமே.

ஒரே மொழி வெவ்வேறு கண்டத்தில் வெவ்வேறு வகையாக பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலம் ஆசியாவில் ஒரு மாதிரியாகவும் , ஐரோப்பாவில் ஒரு மாதிரியாகவும் பேசப்படுகிறது.




ஐரோப்பாவில் இல் எச்பெரன்ட்டோ(Esperanto) என்ற பொது மொழி எல்.எல்.லமெந்ஹொப்(L. L. Zamenhof) என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.பல நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசிகொண்டிருந்தவர்களை, ஒரே மொழியை இதன் மூலம் பேச வைத்தார்.

இந்த விவாதத்தை இதோடு நிறுத்தாமல் , இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காண்போம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில் இந்தியாவில் ஆங்கிலம் புகுந்து ஆட்சி செய்வதை காண்போம்.

14 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்

வால்பையன் said...

//ஆதாமும் ஏவாளும் சைகை மொழியாலே பேசி மொழியை வளர்த்திருக்க வேண்டும். ஆதாமும், அவனுடைய சந்ததிகளே மொழியை உருவாகியிருக்ககூடும். //

இப்படி ஒன்று ஆதாரபூர்வமாக நிறுபிக்கபடாத போது இதை ஏன் இணைத்தீர்கள்! இது ஆராய்ச்சி கட்டுரையா இல்லை புனைவு கட்டுரையா!?

தமிழரண் said...

வணக்கம் ஐயா,

//அது எந்த மொழியாக உருவெடுத்திருக்கலாம், ஆங்கிலமா..? ஹிந்தியா..?, இல்லை எம் தாய் மொழி தமிழா...?.//

ஐயமே வேண்டாம். தமிழ் என்றே துணிந்து சொல்லுங்கள். சான்றுகள் பல இருக்க, இன்னமும் குவிந்து கொண்டிருக்க ஐயம் இனி நமக்கில்லை. இதன் தொடர்பாக நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பார்கவும்.

ஊடகன் said...

//நல்ல ஆய்வு கட்டுரை வாழ்த்துகள்//

நன்றீ நண்பரே....!

//இப்படி ஒன்று ஆதாரபூர்வமாக நிறுபிக்கபடாத போது இதை ஏன் இணைத்தீர்கள்! இது ஆராய்ச்சி கட்டுரையா இல்லை புனைவு கட்டுரையா!?//

இது ஆய்வுகளுடன் , புனைவும் சேர்ந்த கட்டுரையே........!


//ஐயமே வேண்டாம். தமிழ் என்றே துணிந்து சொல்லுங்கள். சான்றுகள் பல இருக்க, இன்னமும் குவிந்து கொண்டிருக்க ஐயம் இனி நமக்கில்லை. இதன் தொடர்பாக நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பார்கவும்.//

நாம் தமிழர் என்பதால் அப்படீ சொல்லிவிட முடியாது.
கி.மு 30 ஆம் ஆண்டில் தான் திருக்குறள் அருளப்பட்டது என்பது சான்று.
அதற்கு முன்பாகவே கி.மு 400-450 ௦௦ ஆண்டிலே பைபிள் எழுதப்பட்டுள்ளது என்பது மற்றொரு சான்று.
அப்படியானால் பைபிள் என்ன மொழியில் எழுத பட்டுள்ளது........?

புலவன் புலிகேசி said...

நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவுக்கு பிரபலமடையவில்லை எனப் பார்த்தால் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை.......

இளந்தமிழன் said...

இவன் என்னமா யோசிக்கிறான் !! ..... ஆனா இந்த பையனுக்குள்ளே ஏதோ ஒன்னு இருந்துருக்கு பாரேன்... இனி எவனாவது கேப்பான், உன் நண்பன் என்ன எழுதி கிழிச்சான்னு ?

ஊடகன் said...

//நல்ல ஆய்வு தான்.....ஆனால் தமிழ் ஏன் ஆங்கிலம் அளவுக்கு பிரபலமடையவில்லை எனப் பார்த்தால் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் தமிழில் இல்லை.......//

மறுக்க முடியாத உண்மை தான்.....

//இவன் என்னமா யோசிக்கிறான் !! ..... ஆனா இந்த பையனுக்குள்ளே ஏதோ ஒன்னு இருந்துருக்கு பாரேன்... இனி எவனாவது கேப்பான், உன் நண்பன் என்ன எழுதி கிழிச்சான்னு ?//

நையாண்டி தனமான பதில்... சிறப்பாகவும் இருந்தது... நன்றீ நண்பரே........!

தமிழரண் said...

அப்படியானால் பைபிள் என்ன மொழியில் எழுத பட்டுள்ளது?

ஐயா, பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில். இது யூதர்களின் தாய்மொழி. இறந்து பால காலம் ஆகிவிட்டது எனினும் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்கள் அவ்வினத்தர் என்பது வியப்பு.

//நாம் தமிழர் என்பதால் அப்படீ சொல்லிவிட முடியாது//

ஐயா, நாம் தமிழர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை என்பதை முதலில் தெளிக. சரி, தமிழன் சொன்னால் என்றுதான் கேட்டிருக்கிறான்? நோவாம் சாம்சுகி எனும் உலகம் போற்றும் மொழியியல் அறிஞரே கூறியிருக்கிறார். அவர் ஆங்கிலேயர். இப்பொழுது நம்புவீர்களே!!!

அதான், தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதைக் கட்டுரையாக எழுதியுள்ளேன். தாங்கள் ஆய்வு நூல்களைப் படித்திவிட்டு சான்றுகளோடு கருத்துக்களை எழுதுக எனத் தாழ்மையோடு வேண்டுகிறேன்.

நன்றி.

ஊடகன் said...

//ஐயா, பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில். இது யூதர்களின் தாய்மொழி. இறந்து பால காலம் ஆகிவிட்டது எனினும் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்தார்கள் அவ்வினத்தர் என்பது வியப்பு.//
நீங்கள் கூறுவது அசைக்க முடியாத உண்மை...!
பைபிள் எழுதப்பட்டது ஈபுரு எனும் மொழியில் தான்.
தொல்காபியம், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பே அல்லவா பைபிள் அருளப்பட்டது.
அப்படியானால் ஈபுரு மொழி முதல் மொழியா....?

//நோவாம் சாம்சுகி எனும் உலகம் போற்றும் மொழியியல் அறிஞரே கூறியிருக்கிறார். அவர் ஆங்கிலேயர். இப்பொழுது நம்புவீர்களே!!!//

நான் தமிழை முதல் மொழி கண்டிப்பாக இல்லை என கூற மாட்டேன்...!
பாவனார் மற்றும் சம்சுகி இவர்கள் சொன்ன சான்றுகளை ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்...!

//அதான், தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதைக் கட்டுரையாக எழுதியுள்ளேன்.//
தங்களுடைய கட்டுரையை படித்தேன்...
ஆங்கிலேயர் நோவாம் சாம்சுகி சொன்னது தமிழ் தான் முதல் மொழி
அதற்க்கு சான்றேதும் இல்லையே, சொல்லியிருந்தால் மகிழ்ச்சி....!

தமிழரண் said...

//பாவனார் மற்றும் சம்சுகி இவர்கள் சொன்ன சான்றுகளை ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்...!//

ஐயா, அவர்கள் ஆராய்ந்து கூறியவற்றைத்தான் நானும் பகிர்ந்தேன்.

//தொல்காபியம், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பே அல்லவா பைபிள் அருளப்பட்டது.
அப்படியானால் ஈபுரு மொழி முதல் மொழியா....?//

ஐயா,தொல்காப்பியம் தொன்றிய காலமே கி.மு 6ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்படுகிறது. தொல்காப்பியமே தமிழின் முதல் நூல் என்று கருதினால் அது மிகவும் தவறு. தமிழின் கிடைக்கப்பெற்ற நூல்களில்தான் தொல்காப்பியம் முதன்மையானது என்பதைத் தெளிக.

பைபிள் எந்த நூற்றாண்டில் அருளப்பட்டது என்பதைச் சான்றோடு முதலில் காண்க.தொல்காப்பியத்திற்கு முந்தியது என்றாலும், அதுவே முதல் நூல், அதுவே முதல்மொழி என்று எப்படிக் கணக்கிட முடியும்? உங்கள் தாத்தாவின் நிழற்படம் உங்களிடம் உள்ளது. ஆனால் உங்களின் பாட்டானின் நிழற்படம் உங்களிடம் இல்லை. அதனால் தாத்தா உங்களின் பாட்டனைவிட மூத்தர் என்று கூறுவிடுவீர்களா???

தமிழரண் said...

//ஆங்கிலேயர் நோவாம் சாம்சுகி சொன்னது தமிழ் தான் முதல் மொழி அதற்க்கு சான்றேதும் இல்லையே, சொல்லியிருந்தால் மகிழ்ச்சி//

தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன். வலைபதிவிலும், ஐயா பழ.நெடுமாறன் மலேசியாவிற்கு வருகை அளித்தபோது இச்செய்தியை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அதனால் நோவாம் சாம்சுகி சொன்ன கருத்தைத்தான் முதலில் பதிவுசெய்துள்ளேன் காரணம் இவ்வுண்மையைப் பாவாணர் எனும் ஊழிப்பேரறிஞர் இவருக்கு முன்பே இதைக் கண்டு சொல்லியதால்.

நோவாம் சாம்சுகியின் கருத்தைவிட பாவாணரின் கருத்து இன்னும் ஆழமானது. தமிழோடு அவருக்கு 60 மொழிகளுக்கும் மேற்பட்ட ஆய்வறிவு இருப்பதால், இவரின் கருத்துக்கள் இன்னும் வலுவானது.

நோவாம் சாம்சுகியின் கட்டுரை கிடைப்பெற்றால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

ஊடகன் said...

//பைபிள் எந்த நூற்றாண்டில் அருளப்பட்டது என்பதைச் சான்றோடு முதலில் காண்க.தொல்காப்பியத்திற்கு முந்தியது என்றாலும், அதுவே முதல் நூல், அதுவே முதல்மொழி என்று எப்படிக் கணக்கிட முடியும்?//

கி.மு.1445 ஆண்டுகள் பழமையானது பைபிள்....இதை வைத்து கொண்டு பைபிள் எழுதப்பட்ட ஈபுரு மொழி முதல் மொழி என்று கூறவில்லை.
வரலாறு இப்படியுருக்க நாம் எப்படி தமிழ் முதல் மொழி என்று கூறலாம் என்பது தான் என் கேள்வி...


//நோவாம் சாம்சுகியின் கட்டுரை கிடைப்பெற்றால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்//

மிக்க நன்றீ... நானும் அதை தேடுகிறேன்.......!

DRIZZLE ADS said...

ஆதாம் ஏவால்தான் முதலில் பிறந்தார்கள் என்பதே ஒரு (மத)திணிப்புவகைக்குட்பட்டதே.... அதற்கு முன் மனிதன் தோன்றியிருப்பான். யாருக்கும் தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என பதிவேற்றிய பொய்யை போல இதுவும் பொய்யே...

DRIZZLE ADS said...

நல்லகேள்வி